தமிழ் கவிதைகள் | Tamil Kavithai
1
தமிழ் கவிதைகள் | Tamil Kavithai

கோவில்
சொல்லும் போதே தானாக வந்து விடுகிறது,
மனதில் அமைதி மற்றும் மன நிறைவு,
தாய் தமிழ் நாட்டில் திரும்பும் இடமெல்லாம் கோவில்கள் தானே,
இருந்தாலும் திருப்பதி சென்று அலைவது எதற்கு?
திருப்தி இல்லாமல் அல்லவா?
வேணும் என்று தான் கேட்கிறோம், எவ்வளவு இருந்தாலும்,
இருப்பதை கொண்டு நிறைவு பெற ஏனோ மறுக்கிறோம்!?
100 ரூபாய் நோட்டை பார்த்தால் தானே ஐயர் , தலை. அசைக்கிறார் என்பதாலா?
ஆயிரம் குற்றங்களை செய்து விட்டு, அமைதியாக அர்ச்சனை செய்தால், எல்லாம் காணாமல் போய் விடும் என்பதாலா?
உண்டியலில் பணம் போட்டால் செய்த பாவம் போகுமோ என்பதலா?
தெய்வத்திடம் கூட யாசகம் தான் கேட்கிறோம்?
தேவை இருந்தால் மட்டுமே கோவிலுக்கு செல்கிறோம்!
தேடி சென்று பார்த்தால் தான் தெய்வமும் காட்சி தருகிறது!
கூடி நின்று வாழ்ந்தால் தானே கோடி நன்மை பெறுகிறது!
இருக்கும் வரை அல்ல, இறக்கும் வரை பக்தனாகவே இரு,
இறைவனுக்கும் இயற்கைக்கும்!!
கோவில் எனும் அற்புதமான இடம் வாழும் போதே வரமளிக்கும்!
வந்தோர்கெல்லாம் இடம் அளிக்கும்!!.
வயிற்று பசி ஆற்றும்,
மனதில் நிம்மதி ஊற்றும்!
ஆசை நிறைவேறும்!
அனைத்தும் ஈடேறும்!!.
கோவில் எனும் புனிதத்தால்!!
2
தமிழ் கவிதைகள் | Tamil Kavithai

திருமணம்
தேடும் போது அமைவதில்லை,
அமைந்த பின்பு விரும்புவதில்லை,
தான் மட்டும் இல்லை, தன்னிடம் இன்னொரு உயிர் கலந்த பின்பு தொடரும் பயணமாக திருமணம்,
வாழ்க்கைக்கு தீர்வான திருமணத்தை, நிறைய பிரச்சனைகளுக்கு காரணமாக மாற்றிக் கொண்டு இன்றைய சமுதாயம் தவிக்கிறது, தவறான தேர்வால்!
அவரச பட்டு விட்டோமே என்பவர்கள் தான் இங்கு அதிகம்!
அனைவரது வாழ்விலும் வரும் வசந்தமான நிகழ்வு!
நிறைய ஆசைகளை கற்பனையில் மட்டுமே நிறைவேற்ற முடியும்,
நிஜ வாழ்க்கையில் நிச்சயமாக மாறும்,
நடப்பதை, நடந்ததை ஏற்றுக் கொண்டு, நாளும் நடை போடுங்கள்,
புரிதலில் தான்
புது வாழ்வு பிறக்கிறது,
பிரிதலில் தான்
மறு கதவு
திறக்கிறது,
உணர்தலில் தான்
உன்னை மனம்
ஏற்கிறது,
உண்மை, உரிமை எனும் உன்னதமான அன்பில் தான்,
என்றும் நிலைக்கிறது,
திருமணம் எனும் திவ்யபந்தம்!!
தேடினாலும் கிடைக்காத திகட்டாத சொந்தம்!!
3
தமிழ் கவிதைகள் | Tamil Kavithai

உபசரிப்பு
நம்மை விட எல்லாரையும் உயர்ந்தவர்கள் என்று நினைப்பவர்களுக்கு தெரியும், உண்மையான உபசரிப்பு,
உங்கள் வீடு தேடி வரும் எல்லோரையும் சரியான முறையில் அணுகுங்கள்!
உறவினர் வந்தால் தான் உபசரிக்க வேண்டும் என்றில்லை!
இங்கு அனைவரும் எதிர்பார்ப்பது புன்னகை ஒன்றே!
ஒருவர் வந்தாலும், பத்து பேர் வந்தாலும் ஒரே மாதிரியான உபசரிப்பு வேண்டும்,
அறிமுகம் இல்லாதவரை அரை மனதுடன் ஏற்காதீர்கள்!
முதலில் யார்? தான் இங்கு யார்க்கு அறிமுகம்!?,
நாமே இப்பூமியில் அறிமுகம் இல்லாமல் தான் வந்திருக்கிறோம்!
வாழ்த்து சொல்ல வந்தோரை வறுத்த பட வைக்க வேண்டாமே,
காத்து நிற்போரை கண்டு கொள்ளாது இருக்க வேண்டாமே!
நல்ல உணவு அளிப்பது மட்டும் அல்ல உபசரிப்பு,
நல்ல உணர்வு அளிப்பது அல்லவா உபசரிப்பு!!
நாடி வந்தவர்களை நன்றிகளோடு வழி அனுப்புங்கள்!
உபசரிப்பின் நம்பிக்கை நீங்களாக இருப்பீர்கள்!!
உலகம் போற்றும் உங்கள் உபசரிப்பை!!
4
தமிழ் கவிதைகள் | Tamil Kavithai

தண்டவாள தம்பதிகள்!
இன்ப உலாவிற்கு இனிமையான இரண்டு இணை பிரியாத கோடுகள்!
தன் மீது ரயில் போக அனுமதிக்கும், ஆதரவு சின்னங்கள்!
காற்றோடு இசைக்கும், காதெல்லாம் அதில் லயிக்கும்!
உற்சாகமான ஒரு மனநிலையில் உள்ளமெல்லாம் மாறும்!
கன நேரத்தில்!
புத்தம் புது இசை பிறக்கும்,
புத்தனுக்கும் அது பிடிக்கும்!
தடக் தடக்!
தடக் தடக்!!
ரயிலோசை!
இயற்கையுடன் இணைந்த பரிபாசை!
நினைத்தாலே இனிக்கும் குழலோசை!
எவ்வளவோ மனதில் பாரம்!
அத்தனையும் போகுதே வெகு தூரம்!
தண்டவாளத்தின் இடைவெளியில்!
தொலைவின் இடைவேளையில்!
இளைப்பாறும் பயணம்!
இதமான தருணம்!
ரயில் பயணங்களை ரசிக்க தவறுவதில்லை!
தண்டவாளம் எனும் தார்மீக தங்கத்தினால்!!
பயணிகளை தாங்குகிற,
உன் மீது தலை வைத்து தூங்க, ஏங்குகிறது
என் மனம்!
தடுமாறும் வாழ்க்கை பயணத்தில் தடம் மாற மறுக்கிறது
என் மனம்!
பாதையை சிறப்பிக்கும்,
பயணத்திற்கு பங்களிக்கும்!
இரும்பு எனும் கரும்பே!
இணை பிரியாமலே இரு!
பயணம் தொடர…
5
தமிழ் கவிதைகள் | Tamil Kavithai

அன்று!
பத்து வயதிலும் விவரம் தெரியவில்லை!
பாசத்தை தவிர வேறு
ஏதும் அறியவில்லை!
ஊரே என் வீடானது!
உறவே என் உயிரானது!
புத்தகத்தை தவிர வேறு எதையும் சுமந்ததில்லை!
விளையாட்டு ஒன்றே புனிதமானது!
ஆறு மணி நேரம் ஆனாலும் ஆற்றங்கரை குளியலில் இருந்து எழும்புவதில்லை!
அடிபட்டால் அக்கறை காட்ட ஒடோடி வந்தனர்!
திருடனை ஊரே கூடி எதிர்த்தனர்!
பக்கத்து வீடு இருக்க பஞ்சம் எதற்கு!
மிஞ்சும் கொழம்பே அமுதம் நமக்கு!
ஊட்டி ஊட்டி வளர்த்தால் அன்னை!
அதே சமயம் அடங்க மறுத்தால்!
அடித்து திருத்தினால்! என்னை!!
ஊரில் அனைவருக்கும் தெரியும்!
அவன் பெயரும்!
அவன் முகவரியும்!
பெரியவரை கண்டால் மரியாதை கலந்த பயம் வரும்!
உள்ளுர் செய்தி உடனடியாக தெரியும்!வேகமாக உலகிற்கே பரவும்!
பள்ளி செல்லும் போதே
வழியெங்கும் பார்வை பொங்கும்
பறவை மீதும்!
பழத்தின் மீதும்!
காசு எனும் காகிதம் கையில் புரள வழியில்லை!
இருந்தாலும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
எல்லாமே கிடைத்தது!
எல்லாருடனும் இருந்த போதெல்லாம்!
விடுமுறை நாட்களே எங்கள் சொர்க்கம்!
ஊரை சுற்றி வர அதுவே மார்க்கம்!
கால் சுவடு படாத இடம் ஏது ஊரில்!
போகாத இடமில்லை!
இறங்காத வயலில்லை!
குளிக்காத குளம்மில்லை!
குற்றாலம் செல்லவில்லை!
என்றாலும் கும்மாளத்திற்கு பஞ்சமில்லை!!
கும் இருட்டில் பயந்து ஓடி கடந்த தூரம்!
இன்னும் மனதை கடக்கவில்லை!
தொலைபேசி திரையில் தொலைந்ததோ
இன்று?
அன்று!!
நல்ல எண்ணமே ஜெயம்!
நலம் அன்புடன்
ஆர்.கே.ராகுல்














