தமிழ் கவிதைகள் - Kavithai.co.in
home முகப்பு favorite காதல் group நட்பு
---Advertisement---

வெற்றி தரும் தன்னம்பிக்கை கவிதை | Motivational Quotes In Tamil

Kavithai Author Avatar
எழுதியவர்: RK RAHUL
தேதி: November 6, 2026 7:03 AM
பகிர:
---Advertisement---

வெற்றி தரும் தன்னம்பிக்கை கவிதை | Motivational Quotes In Tamil

   1

வெற்றி தரும் தன்னம்பிக்கை கவிதை Motivational Quotes In Tamil

இலக்கு

பல லட்சியங்களை நோக்கி ஓடி கொண்டிருக்கும் பயணம் இது!

நான் தோல்வியை சந்திக்கும் பொழுதெல்லாம்,

துவண்டு போய் விழும் போதெல்லாம் இலக்கு என்பதை நினைவில் கொண்டு எழுந்து ஓடி கொண்டிருக்கிறேன்!

மூச்சு இருக்கும் வரை முடியாது என்பதில்லை!

முயன்று கொண்டிருக்கும் வரை முடிவு என்பது இல்லாமல் இல்லை!..

இலக்கு என்பதையே என் வாழ்வின் ஒளி விளக்காக
தினம் தினம் ஏற்றி வைக்கிறேன்,

நினைவிலும்
வாழ்விலும்,

பிரகாசிக்கும் ஒளியே!
என் வாழ்வின் தேடலுக்கான வழி!

சூரிய ஒளி கூட இரவில் வருவதில்லை!

என் நீங்காத நினைவு ஒளி என்றும் ஓய்வதில்லை!!

வெளிச்சம் தெரியும் வரை அல்ல,

எம் இலக்கை வென்று தீரும் வரை!!

என் இலக்கே
என் பாதை!
என் பயணம்!
என் மரணம்!!

2

வெற்றி தரும் தன்னம்பிக்கை கவிதை | Motivational Quotes In Tamil

கற்றுக்கொள்

விழுந்தாலும் எப்படி எழுவது என்று!

வளர்ந்தாலும் எப்படி வாழ்வது என்று!

தோற்றாலும் எப்படி வெல்வது என்று!

மறந்தாலும் எப்படி நினைப்பது என்று!

உயர்ந்தாலும் எப்படி உணர்வது என்று!

கடினமான நேரத்தை கூட எப்படி கடப்பது என்று!

கவலை இல்லாமல் எப்படி இருப்பது என்று!

ஆணவத்தை அழித்து எப்படி அதிகாரம் செய்வது என்று!

அன்பினால் அனைவரையும்? எப்படி அரவணைப்பது என்று!

உனக்கான வாழ்க்கையை எப்படி அமைப்பது என்று!

காலம் எல்லாம் கற்றுக்கொள்!

வலியே என்றாலும் பெற்றுக்கொள்!

மரணமே வந்தாலும் ஏற்றுக்கொள்!!

உருவாக்கிய உன்னை
உயர்வாக்கிய பிறகு,

உழைப்பை ஊருக்கெல்லாம் உரமாக்கிய பிறகு!!

பெருமையிலும் பெருந்தன்மையை
கற்றுக்கொள்🎉♥️

3

வெற்றி தரும் தன்னம்பிக்கை கவிதை | Motivational Quotes In Tamil

தகுதியை வளர்த்து கொள்ளுங்கள்

நம் சிந்தனை தான் நம் செயல்கள்!

காலம் கனியும் முன்னரே கரையேற கற்றுக் கொள்ள வேண்டும்!

நம் தகுதி தான் தரத்தை உயர்த்தும்!

நாளுக்கு நாள் நம்மை மெருகேற்றி வர வேண்டும்!

புதிய முயற்சிகள், புதிய ப‌யி‌ற்‌சிகள் மேற்கொண்டு,
புதிய திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்!

நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன்
முழு அளவில் போராட வேண்டும்!

தோல்வி வந்தாலும் மனம் தளர விடாமல் எதிர்த்து நின்று எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும்!

ஒரு புதுமையான செயல்பாட்டின் மூலம்தான்,
நம்மிடம் உள்ள குறைகளை வெளிக் கொண்டு வந்து,
நிறைகளாக மாற்றி வெற்றி பெற வேண்டும்!

இன்னும் இன்னும் என்ற ஏக்கம் இருந்தால் தான்!

இன்னல்களில் இனிமை காண முடியும்!

யாருக்கும் நிரூபிக்க தேவை இல்லை!
நமக்காவது தெரிய வேண்டும் அல்லவா!

நாம் யார் என்று!

வாழ்ந்து காட்டுங்கள்!

பாரே பார் என்று!

நல்ல வண்ணம் தீட்டினால் தான்
காண அழகு!

நல்ல எண்ணம் ஈட்டி
வாழ அழகு!

தகுதியை வளர்த்து!
தரத்தை உயர்த்து!

தலைவனே நீ தான் சிலருக்கு!

இறைவனே நீ தான்
பலருக்கு!

4

வெற்றி தரும் தன்னம்பிக்கை கவிதை | Motivational Quotes In Tamil

தயார் நிலையில் இருங்கள்

நாம் எந்த சூழ்நிலையையும் சந்திக்கத் தயாராகவே இருப்பது நல்லது!

இது தான்,
இவ்வளவு தான், இப்படி தான் என்று குறுகிய மனப்பான்மை கொண்டு செயல்பட கூடாது,

பிறப்பதற்கு தயாரானால் இறப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும்,

பறப்பதற்கு தயாராக இருப்பவர் நடப்பதற்கும் தயாராக வேண்டும்,

வெற்றிக்கும் தோல்விக்கும்!,
சுகத்திற்கும்
சோகத்திற்கும்!,
பெறுவதற்கும்
இழப்பதற்கும்!,
இப்படி சொல்லி கொண்டே போகலாம்!

அனைத்தையும் ஏற்பதற்கு முதலில் மனதை தாயாராக வைத்திருக்க வேண்டும்!

நான் தான் என்ற அகங்காரம் அகன்று!

நான் தானே என்ற
அலட்சியம் அகன்று!

நான் தானா என்ற
ஆச்சரியம் அகன்று!

நாம் என்ற
லட்சியம் வென்று!
நாளும் நடை போடுங்கள்!
தயார் என்ற
தவ🧘‍♂️ நிலையில் இருந்து கொண்டே!

5

வெற்றி தரும் தன்னம்பிக்கை கவிதை | Motivational Quotes In Tamil

எல்லை இதுவல்ல! எதிரி யாரும் இல்ல!

பல தடைகளை கடந்து, தடங்களை பதிக்க வேண்டும்,..

பயணத்தில் பங்கு பெற்று பாரினில் சாதிக்க வேண்டும்,

வெற்றி எல்லை அல்ல! திருப்தி!

தோல்வி தொல்லை அல்ல! அதிருப்தி!

எல்லையை நாம் வகுக்க கூடாது,
எதிர் வரும் காலம் போகும் போக்கில்
சென்று,
எடுத்த காரியத்தை வென்று,
வெற்றிப்பயணம் தொடரட்டும்!

எதிரிகளை வீழ்த்தும் எண்ணத்துடன் வாழ்வதை விட்டு!
எதிரிகள் யாரும் இல்லை என்ற
தூய நிலையில்,
தீய எண்ணத்தை மாற்றி தீர்வு காண வேண்டும்!

6

வெற்றி தரும் தன்னம்பிக்கை கவிதை | Motivational Quotes In Tamil

சவால்

சாதிக்கும் எண்ணம் இருப்பதால் என்னவோ…

சவால்களை சந்திக்கும் போதெல்லாம் சாதாரணமாகவே ஏற்றுக் கொள்கிறேன்,

ஒவ்வொரு நாளும் சவாலாகவே உள்ளது என் வாழ்க்கையில்,

ஒய்வு எடுப்பது கூட ஒரு யோசனை மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது,

நிறைய வித்தியாசமான
சூழ் நிலையை எதிர் கொண்டு வருகிறேன்,

உடம்பெல்லாம் வலி,
கை விரல் எல்லாம் என்னை விடு என்பது போல் போராடுகிறது,

பகலில் சூரியனுக்கும்,
இரவில் நிலவுக்கும். மட்டுமே தெரியும் என்னுடைய வேதனை எல்லாம்,

மழை வந்து முத்தம் இடுகிறது,
என் முகத்தில்!
வெயில் வந்து நித்தம் படுகிறது,
என் நெஞ்சில்!

கொதிக்கும் வெயில் எனக்கு கொண்டாட்டம்!

பெய்யும் மழை எனக்கு
கண்ணாமூச்சி ஆட்டம்!

ஒரே இடத்தில் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறேன்,

இதயத்திலும் ஒரு இரும்பு உண்டு என்பதை அறிந்து!

எத்தனையோ நாட்கள் கடந்து விட்டன,
அத்தனையும் என்னை கதற விட்டன,
மறந்தும்,
ஒரு சொட்டு வரவில்லை!
கண்ணீர்!!

வியர்வை மட்டுமே வெள்ளமாக வந்தது,
நேரடியாக,
கடலில் கல‌ந்தது,
கடலும் எனக்காக கரைந்தது!

இன்னும் இடம் பெயரவில்லை,
இருக்கிறேன்!

என்றாவது ஒரு இனிய நாள் வருமா என்று, பொறுக்கிறேன்!

புத்தகத்தில் புதைந்து கிடக்கிறேன்!
நானும் ஒரு புத்தகம் நான் தான் என்பதை மறந்து!

தயாராகவே இருக்கிறேன் சவாலுக்கு மட்டும் இல்லை,
சாவுக்கும்!!

விடாமுயற்சி தான் இன்னும்!

வாழ்க்கையே விடுகதை ஆன பின்னும்!!

வினாவுக்கு விடை தருவேன்!
வென்ற பின்னே விடை பெறுவேன்!!

சவால்களை ஏற்று!
சரித்திரத்தை மாற்றி சாதனை படைத்த பின்னரே,

அடைவேன் இறைவனை!
என் முதல்வனை!!

நல்ல எண்ணமே ஜெயம்!

நலம் அன்புடன்

ஆர்.கே.ராகுல்

மேலும் நம்முடைய கவிதை களஞ்சியங்களை காண கீழே உள்ள link ஐ, Click செய்யவும்!

தன்னம்பிக்கை கவிதைகள் | Motivational Quotes In Tamil