நட்பு கவிதைகள் | Friendship Quotes in tamil
1
நட்பு கவிதைகள் | Friendship Quotes in tamil
நட்புகடவுளுக்கும் மேலானது,
காதலை விட புனிதமானது நட்பு!உண்மையான நட்பு!!
உண்மையான நட்பு,
உன்னதமானது!
நம்பிக்கையான நட்பு,
உயர்வானது!நட்பு கவிதைகள் | Friendship Quotes in tamil
என் நட்பே கடவுள்!
என் நட்பே காதல்!!உயர்வான நட்பு!
ஒவ்வொருவரின்,
உயர்வுக்கு பின்னும்
மறைந்திருக்கிறது
ஒரு நட்பு!
ஒவ்வொரு உதவிக்கு
பின்னும் வாழ்ந்திருக்கிறது
ஒரு நட்பு!
என் உயிரில் கலந்திருக்கிறது
ஒவ்வொரு நட்பும்!காலம் நம்மை கடத்தி வந்திருக்கிறது,
நண்பனே இணையாக,
நட்பே துணையாக!
நான் நலம் காண துடிக்கிறது
என் நட்பு!எல்லோரும் தள்ளி விட்டு செல்லும் போது,
என்னை தட்டி கொடுத்து தூக்கி விட்டது என் நட்பு மட்டுமே!நண்பனே,
யார் என்னை விட்டு போனாலும்
நீ இருக்கிறாய் எனக்கு,
பிறகு என்னை கவலை எனக்கு!!உறவான நட்பு!
நம் வாழ்க்கையில் வீட்டை விட்டு,
வெளியில் வந்த பின்னே,
ஒரு உறவு உருவாகிறது! அதற்கு
நண்பன் என்னும் பெயராகிறது!
ஒருவரை ஒருவர் புரிந்து
கொண்டு பின் உயிராகிறது,
“நல்ல நண்பனால் மட்டுமே வாழ்க்கை உயர்வாகிறது”நட்பு கவிதைகள் | Friendship Quotes in tamil
நண்பன் யார்!?
பக்கத்து வீட்டு நண்பன்,
பள்ளியில் நண்பன்,
பணியில் நண்பன்,
எங்கில்லை நண்பன்!
எல்லா இடங்களிலும்
நண்பன் என்னும் உறவு நம்மை தொடர்கிறது,
சில நேரங்களில் சீக்கிரமே
நம்மை விட்டு பிரிகிறது,
சில உயிர்கள் மட்டுமே
நமக்காக வாழ்கிறது.
எந்த வித எதிர்பார்ப்பும்
இன்றி ஓடி வருகிறது
உதவிக்கு!
தேடி வருகிறது
ஒரு உன்னதமான அன்புக்கு!!
உண்மையான நட்புக்கு
உயிரை கூட தருகிறது.
நல்ல நண்பர்கள் சேர்ந்தால்
எந்நாளும் இன்பம் தான்,
உங்களை நெருங்காது துன்பம் தான்!!பாதியில் செல்லுபவன்
நண்பன் அல்ல!
நாம் பாடையில் செல்லும் வரை
நம்முடன் வருபவனே
உற்ற நண்பன்!!எப்போதும் தொல்லை தருபவர்கள்
நண்பர்கள் அல்ல,
எல்லையில்லா அன்பை தருபவர்களே
உயர்வான நண்பர்கள்.நண்பா! நீ இறைவன் அறிமுகப்படுத்திய உறவு,
உனை என்றும் விட்டு செல்ல மாட்டேன்,
யாருக்காகவும் விட்டு கொடுக்கவும் மாட்டேன்!நட்பு கவிதைகள் | Friendship Quotes in tamil
முதல் நட்பு
முதல் நட்பு என்றும் வாழ்வில்
மறக்க முடியாத,
மறக்க கூடாத நட்பு,
இன்றும் வாழ்ந்து கொண்டு
தான் இருக்கிறது,
உறவிலும்,
உயிரிலும்!!பள்ளி நட்பு!
பள்ளி நட்பு,
பாசக்கார நட்பு,
பணியிலும் உடன்
சேர்ந்தது,
பாதியில் பணியில்
இருந்து பிரிந்தது.
என்றோ உயிரிலே
கலந்தது,
காதல் நண்பனாக
உறவிலே மலர்ந்தது.ஆருயிர் நட்பு!
ஆருயிர் நட்பு ஒரு அரிய நட்பு,
கடல் உப்பில் இருந்து,
கரை சேர்ந்து,
கல்வியில் உயர்ந்து,
கண் எதிரே வளர்ந்து,
கண்ணாடி உடன்
சுற்றி திரியும்,
இனிய நட்பு!
என் வாழ்வில்
திகட்டாத நட்பு!உயிரில் கலந்த நட்பு!
பேச்சிலும் பாசம்,
மூச்சிலும் பாசம்,
பணம் இருந்தாலும் பண்பு,
பகை இருந்தாலும் அன்பு!
குழந்தை தனமும்,
கொள்ளை அழகும் கொண்ட நட்பு!
ஒரு உதவி செய்தது,
என் வாழ்வையே திருப்பி போட்டது,
என் குடும்ப வாழ்வையே மீட்டது,
கலந்து விட்டது,
உயிரில்!
வளர்ந்து விட்டது,
பாச பயிரில்!!அன்பான நட்பு!
அழகும் அறிவும் ஒன்றாய்
ஓரிடத்தில்,
என் நண்பனிடத்தில்
பிறந்த போதே பிரிந்தான் தாயை,
வளர்ந்த போதே அறிந்தான்
கடின வாழ்வை,
உழைத்தான்,
உயர்ந்தான்!
தரம் தான் இவன்!
தங்கமான பையன்!
எவளுக்கு தகுதி இருக்குதோ!
இவனை மணமுடிக்க!!
வெள்ளை உள்ளமும்,
வெகுளி தனமும் கொண்ட
பவ்யமான நட்பு!!
நட்பு கவிதைகள் | Friendship Quotes in tamil
ஒற்றுமையான நட்பு!
ஒரே நேர்காணல்
ஒன்றானோம் ஓரிடத்தில்,
பணிக்கு சென்ற இடத்தில்,
பாசத்தை பயிர் செய்தோம்,
ஒற்றுமை வேற்றுமையை மறக்க செய்தது,
ஊரையே வலம் வந்தோம்,
நட்பு என்றால் நாங்க தான்
என்றோம்,
எங்கு சென்றாலும்
ஒன்றாகவே நின்றோம்!
இன்று வரை உறவு கொண்டு,
உள்ளத்தையே வென்றோம்!!நினைவில்
நிலைத்தது நட்பு!
நிழகாக தொடர்ந்தது நட்பு!
நித்தம் என் வாழ்வில்
நீடித்தது நட்பு!!
நட்பு அது ஒரு வாடாத பூ!!
என் வாழ்நாள் தோறும்!!மறந்த நட்பு!
ஊரை விட்டு பிரிந்தது தான் போதும்,
ஊரில் நட்பும், உறவும் என்னை,
மறந்தது!
எனக்கும் புரிந்தது,
ஊர் மட்டுமே உலகம் அல்ல!
உலகம் ரொம்ப பெரிது என்று!
எங்கிருந்தாலும் ஒரு நாள் செல்வேன்!
ஊருக்கு!
அன்று எனக்கென்று ஒரு அடையாளம்
இருக்கும்,
என் பெயருக்கு!!
ஊருக்கு மட்டும் அல்ல!
உலகத்திற்கே!! சொல்வேன்!
என் வெற்றியை!கண் கலங்கிய நட்பு!
என் நண்பன் இரயிலில் வழியனுப்பி வைத்தான்,அனுப்ப மனமில்லாமல்!
தொலை தூரம் மட்டுமல்ல!
துயரமும் தான் எனக்கு!
பயணம் முழுதும் கண்ணில்,
ஈரம் தான் எனக்கு!
இன்று வரை அந்த பிரிவு,
நீங்காத பாரம் தான் எனக்கு!!நட்பு கவிதைகள் | Friendship Quotes in tamil
வழிகாட்டிய நட்பு!
நண்பனுக்கு மட்டுமே தெரியும்,
ரகசியம் முழுதும்!
சொல்ல முடியாத விஷயம்
என்று எதுவும் இல்லை நண்பனிடம்!
என் வலி தெரிந்தவனும் அவன் தான்,
என் வழிகாட்டியும் அவன் தான்!
என் நண்பன்!!தோள் சாய தோழன் இருக்கையில்,
வலியெல்லாம் பறக்கும்!
வாழ்வெல்லாம் சிறக்கும்!நான் சுதந்திரமாக இருந்த தருணம் எல்லாம் என் நண்பன் உடன் இருந்த
தருணமே!!நண்பர்கள் மட்டும் இல்லை என்றால்,
மன நல காப்பகங்கள் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்!.சுகத்தில் மட்டும் அல்லாது,
சோகத்திலும் பங்கெடுப்பவன்
தான் என் நண்பன்!நட்பால் மட்டுமே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்,
சாதி, மத வேற்றுமையை வேரறுக்க
முடியும்!!நட்பு கவிதைகள் | Friendship Quotes in tamil
நண்பன்!!
இதயம் துடிக்கும் ஒவ்வொரு
முறையும் நினைவு படுத்துகிறது
நண்பனை!!பணத்திற்காக அல்லாமல்,
பழக்கத்திற்காக வருபவன்
நண்பன்!உடன் இருப்பவருக்காக,
உயிரையும் கொடுப்பான்!
எவனையும் எதிர்பான்!
எமனையும் எதிர்பான்!
நண்பன்!தகுதி பார்த்து பழகுவதில்லை,
தனக்காக மட்டும் வாழ்வதில்லை,
தரமான நண்பன்!என்னிடம் எதும்
இல்லை என்றாலும்,
என்னுடன் இருப்பவன்,
இறைவனும்
நண்பனும் தான்!என் புகைப்படத்தை,
பத்திரப்படுத்துபவனும் அவன் தான்,
என் பாசத்தில் பங்கு கொள்பவனும் அவன் தான்,
என் பாதையில் பயணிப்பவனும் அவன் தான்,
என் உயிர் நண்பன்!என்னுடைய ஆறுதல்,
எது என்றால் நண்பன்
என்பேன்!
என்னுடைய அடையாளம்
நட்பு என்பேன்!இறக்காத நட்பு!
நண்பனை மட்டும்,
யாரும் மறப்பதே இல்லை!
ஏனென்றால் அவன்
இறப்பதே இல்லை,
ஒவ்வொரு உயிரிலும்
வாழ்கிறான்!
இரத்தமாக!
இதயமாக!
இறைவனாக!!என் இமை மூடும் வரை,
துடித்துக் கொண்டே இருக்கும் நண்பனை காண!நட்பு எனும் கதாபாத்திரத்திற்கு
எப்போதும் நடிக்க தெரிவதில்லை!!ஆற்றல் மிகுந்த நட்பு!
ஒரே நேரத்தில்,
அன்னையாகவும்,
அண்ணானாகவும்,
ஆசிரியராகவும்,
ஆண்டவனாகவும்,
ஆக கூடிய
ஆற்றல் நட்புக்கு மட்டுமே உண்டு!உணவையும் தருவான்,
உடையையும் தருவான்,
உயிருக்கு உயிரான
உணர்வையும் தருவான்
நண்பன்!!நல்ல எண்ணமே ஜெயம்!
நலம் அன்புடன்
ஆர்.கே.ராகுல்
வெற்றி தரும் தன்னம்பிக்கை கவிதை | Motivational Quotes In Tamil
















