கவிதைகள் | Kavithai In Tamil
1
கவிதைகள்| Kavithai In Tamil

சமூக வலைதளம்
வலைதளம் தான் சமுதாய முன்னேற்றதிற்காக அல்ல!
முன்னேற்றத்திற்கு
முட்டுக்கட்டையாக உலகம் முழுவதும் விரிக்கப்பட்ட மிகப்பெரிய வலை தான் அது!
நம்முடைய நேரங்களையும், சிந்தனைகளையும் சுரண்டி வரும் நலம் கெட்ட வலை தளம் அல்லவா அது!
உறவுகளை உதறி விட்டு,
உணர்வுகளை உதறி விட்டு,
ஊடகங்களை உண்மை என நம்பி,
பெண்ணியமே அழிந்து வருகிறது,
ஆணினமே மெலிந்து போகிறது!
உறக்கமே தொலைந்து,
பசியே மறந்து,
வலைதளம் எனும் பாலை வனத்தில்
பாய் விரித்து படுத்து உள்ளோம்!
பார்வை மொழி தெரியாமல்,
பாவை மொழி
புரியாமல்,
வலை தளம் என்னும் புதை குழியில் விழுந்து,
பொக்கிஷமான வாழ்க்கையை இழந்து வருகிறோம்!
ஓடி, ஆடி, பாடி விளையாடிய காலம் எங்கே?..
கைபேசியில் ஒழிந்து போனதோ!
கனவுகள் கலைந்து
போனதோ!
காலம் எனும் காற்றிலே கலந்து போனதோ!
நினைவு எனும் ஏட்டிலே நிறைந்து போனதோ!
இதிலிருந்து மீள தான் முடியுமோ!?
இனிமேலாவது வாழ முடியுமோ!?
புரிந்து கொண்டால் புத்தகம் உனது!
பிரிந்து சென்றால்
பித்தான மனது!
மகத்தான மனித வாழ்க்கையை, வலை தளத்தில் தொலைக்காமல்,
மனதார வாழ்ந்து திளையுங்கள்!
உறவுகளுடனும்,
நண்பர்களுடனும்!!
2
கவிதைகள்| Kavithai In Tamil

ஆச்சர்யம்
எல்லாவற்றிற்கும் ஒரு ஆவல்! உண்டு!
காணாத காட்சிகளை காண!
போகாத ஊருக்கு போக!
வாழாத வாழ்க்கையை வாழ!
பெறாத வெற்றியை
பெற!
ஆனால் ஒரு முறை மட்டுமே ஆச்சரியமாக
இருக்குமே தவிர
மறு முறை எல்லாம் அலட்சியமாக போய் விடுகிறது!
பெற்றதை விட பெற இருப்பதை நினைத்து தான்
பேராவல்!
ஒவ்வொரு நாள் பிறக்கும் போதெல்லாம்
ஆவல் சேர்ந்த ஆனந்தம் நமக்கு!
அற்புதம் சேர்ந்த ஆச்சரியம் நமக்கு!
உலக படைப்புகள் அனைத்தும் ஆச்சரியத்துடன் கூடிய அற்புதமே!
மனித படைப்புகள் மட்டும் அனைத்தையும் ஆராயும் அற்பமே!
மனிதா வாழ்வின்
தீராத ஆசைக்கு
தீர்வு காண,
இறுதியில் தந்தார்
இறைவன்,
மரணம் என்னும் ஆச்சர்யம்!!
இதில் இன்னும் தோற்று விட்டது! மனித இனம்
ஆராய்ச்சியில்!!
இதுவும் ஆச்சர்யமே!!
3
கவிதைகள்| Kavithai In Tamil

ஒரு நொடியில்
ஓடிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும்
அந்த ஒரு நொடிக்காக தான்!
எங்கே நம் வாழ்க்கை மாறி விடாதா என்ற ஏக்கத்தில்!
ஒரு நொடி சிந்தனை உங்களை சிகரத்தை அடைய வைக்கும்!
நீங்கள் எண்ணிப் பார்க்காத அளவிற்கு உயர வைக்கும்!
இந்த நொடி கூட வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறோம்!
ஒரு நம்பிக்கையில்!
சில துயரமான நேரங்களிலும்,
மனம் உடைந்த நிலையிலும்,
உடல் மெலிந்த நிலையிலும்,
நம்பிக்கை ஒன்று தானே நம்மை நகர்த்தி கொண்டிருக்கிறது!
ஒரு நொடியில் மரணம் கூட நிகழலாம்!
ஒரு நொடியில் மகுடம் கூட சூடலாம்!
இந்த நொடி இன்னும் மிச்சம் இருக்கிறதே!
நம் மூச்சு எஞ்சி இருக்கிறதே!
எவ்வளவு தான் பாரம் என்றாலும்,
நெஞ்சில் திறம் இருக்கிறதே!
ஒரு நொடியில் தான் மின்னல்!
ஆனால்,
வெளிச்சம் எவ்வளவு?
எண்ணி பாருங்கள்!
வெளியே வாருங்கள்!
இந்த நொடியில் இருந்து கூட,
உங்கள் வாழ்க்கை இனிதாக மாறலாம்!
உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேறலாம்!
ஒவ்வொரு நொடியும் உங்களுக்காக தான் இந்த உலகம் சுழன்று கொண்டு இருக்கிறது!
ஒரு நொடியில்.. உலகம்!
உங்கள் காலடியில்..!!
4
கவிதைகள்| Kavithai In Tamil

ஆறுதல்
அமைதியான மனமே அனைத்திற்கும் ஆறுதல்!
அடிபட்டும் அடுத்த அடி எடுத்து வைக்க முடிந்தால் ஆறுதல்!..
அன்பில் வாழும் உயிர்கள் அருகில் இருந்தால் ஆறுதல்!
உடைந்த மனதிற்கு
உத்வேகமான வார்த்தை ஆறுதல்!..
இழந்த பணத்திற்கு, திரும்ப பெறும் பணம் ஆறுதல்!
தோல்வி நம்மை துரத்தும் போதெல்லாம்
விடா முயற்சி ஆறுதல்!
ஏழை வீட்டிற்கு இறைவன் ஆறுதல்!
வெற்றி பெற இயலாதவனுக்கு
வெற்றி என்ற வார்த்தை மட்டுமே ஆறுதல்!!
நமக்கு நாமே சொல்லி கொள்ளும் ஆறுதலே!
அகில உலகில்
ஆக சிறந்த ஆறுதல்!
இயற்கை எனும் இன்ப ஆறுதலில் அனைவரும் வாழ்வோம்!
பேரின்பமாக!!
5
கவிதைகள்| Kavithai In Tamil

கட்டாயம்
சில இடங்களில்,
சில நிகழ்வுகளை
கட்டாயம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்!..
எளிதில் எல்லாம் அமையுமா!
நினைத்தது எல்லாம் நடக்குமா!
துன்பம் மட்டும் கட்டாயம் என்றால்,
மனம் தான் ஏற்குமா!
இன்பத்திற்கு
ஏங்கி ஏங்கி!
துன்பத்தை
தாங்கி தாங்கி!
கல்லாய் போனது
கட்டாயமாக!
கரையை சேரும் முன்னே!
கரைகிறதே!..
தண்ணீரிலே!
கண்ணீரிலே!
துயரம் தீர்க்க,
தண்டனை குறைக்க,
வேதனை துடைக்க,
விடுதலை அடைய,
வீடு திரும்ப,
மனம் விரும்ப!..
மாறுமா? கட்டாயம்!
மாற்றுவேன் கட்டாயம்!!
இரு இடைவெளியில் தான்,
ஒரு வழி பிறக்கிறது!
தயாராகவே இருக்கிறேன் கட்டாயம் ஜெயிப்பதற்கு!!
6
கவிதைகள்| Kavithai In Tamil

அரவணைப்பு
ஆறாத ரணமும் ஆறும்!,
தீராத நோயும் தீரும்!
அரவணைக்க
ஆள் அருகில் இருந்தால்!
அனைவரையும் அரவணைக்க இறைவன் இருப்பது போல்,
அருகில் இருப்பவரும் இறைவனே!
துக்கத்திலும், துயரத்திலும்,
இருந்து
நம்மை தூக்கி விட ஆள் இல்லை என்றாலும்,
அருகில் ஆறுதலாக நான் இருக்கிறேன் என்பது எவ்வளவு பெரிய அரவணைப்பு!
இங்கே எதுவுமே மிகப்பெரிய தியாகம் என்றில்லை!
தாகத்திற்கு தண்ணீர் கொடுக்க,
சோகத்தில் கண்ணீர் துடைக்க,
கற்று கொடுக்கவா வேண்டும்!
இருக்கும் போது விட்டு விட்டு
இறந்த பின் அழுவதில்
அர்த்தம் ஏதும் இல்லை!
அனைத்து உயிர்களுக்கும் அன்பை விட மிகப்பெரிய அரவணைப்பு ஏது!!
நம்மை சுற்றி உள்ளவர்களையும் நாம் தானே அரவணைக்க வேண்டும்!
என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தாலே போதும்!
சமூகத்தையும் சமமாக பார்க்கும் போது,
சுயநலம்,
சுயலாபம் எல்லாம் காணாமல் போகிறது!
இங்கு செயலை விட சொல்லுக்கே மதிப்பு அதிகமாக உள்ளது!
நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற சொல் போதுமே!
அதற்கு தானே ஏங்குகிறது
இந்த உலகம்!
வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் உணர்ந்து அனைவரையும் அரவணைப்போம் அன்பால்!
ஆண்டவனாக மாறுவோம்! அத்தகைய பண்பால்!!
நல்ல எண்ணமே ஜெயம்!
நலம் அன்புடன்
ஆர்.கே.ராகுல்
தன்னம்பிக்கை கவிதைகள் | Motivational Quotes In Tamil
- Tamil Life Quotes
- Tamil Motivation
- Tamil Whatspp status
- kadhal kavithai
- Kavithai Blog Kavithai
- Tamil SMS kavithai














