தமிழ் கவிதைகள் - Kavithai.co.in
home முகப்பு favorite காதல் group நட்பு
---Advertisement---

தமிழ் காதல் கவிதைகள் | Love Kavithai In Tamil

Kavithai Author Avatar
எழுதியவர்: RK RAHUL
தேதி: November 4, 2026 9:06 AM
பகிர:
---Advertisement---

தமிழ் காதல் கவிதைகள் | Love Kavithai In Tamil

1

தமிழ் காதல் கவிதைகள் Love Kavithai In Tamil

ஒரு கீதம்

தவம் புரிவதால் இறுதியில் இன்பம் வரும் என்பது அல்ல..

தவம் புரிவதே ஒரு இன்ப நிலை தான்..

தினம் ஒரு கீதம், இனிமையான சங்கீதம்!
என் காதில் ஒலிக்குமா என்று காத்துக் கிடைக்கிறது என் காதுகள்!

ஆம், அவள் இடமிருந்து வரும் அலைபேசியின் சத்தம் அது!

வந்தாலும் வரவில்லை என்றாலும், ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது,
என் காதில்
நித்தம் அது!

அவள் குரலில்
குழல் இசைகிறது!
அவள் விரலில்
வீணை அசைகிறது!

அவள் பைந்தமிழில் பேசும் போது
பைங்கிளியும் தோற்கிறது!

கொஞ்சம் நேரம் தான் என்றாலும்,
மகிழ்ச்சி பொங்கும்
அந்த வாரம் எல்லாம்!

காத்து காத்து,
கரையும் போதெல்லாம்!
விரைந்து வாராதா!?
என்னவளின் கீதம்!
என் இதய சங்கீதம்!

அலைபேசியில் அமுதாக வந்து,
பாயும் என் காதில்!
இல்லையேல் அவளை
நினைத்தே
நாட்கள் எல்லாம் தேயும்!!
என் வாழ்வில்!!

விடுமுறையே இல்லை!
நான் விடை பெறும் வரை…!!

அவளின் காதல் ஒரு சங்கீதம்!!

2

தமிழ் காதல் கவிதைகள் | Love Kavithai In Tamil

தமிழ் காதல் கவிதைகள் Love Kavithai In Tamil

மழலை காதல்!

புதிரான உலகிற்கு புதிய அழு குரல்!

தாயின் வலியின் உச்சத்தில் கிடைத்த மிச்சம்!

இப்புவியில் வந்து பிறக்க,

மழலை குரல் குழலை விட இனிதாக ஒலிக்க!

தா‌ய், தந்தையின் கனவு பலிக்க!

வந்தததோ ஒரு புதிய சொந்தம்!

பத்து மாத தவத்திற்கு தகுந்த பரிசு!

வலியெல்லாம் மகிழ்ச்சியில் மறந்து போனது!

மனமெல்லாம் குளிர்ந்து போனது!

மகளா,மகனா தெரிந்து போனது!

இரத்தத்தில் விளைந்த தங்கமாக!

இதயத்தில் நிறைந்த பந்தமாக!

மொத்தத்தில் சிங்கமாக!

நலம் வாழ!

நாடெல்லாம் நடை போட..

வீடெல்லாம் விளையாட!

உலகை பார்க்க! உள்ளம் சிலிர்க்க!
உறவை வளர்க்க!
உயிரை காக்க!..

உதித்தது மழலை எனும் இன்ப சூரியன்!

பரவட்டும் ஒளியாக பார் முழுவதும்!

பயணம் வழியாக நாள் முழுவதும்!!

வளரட்டும் வளர்பிறை!

இப்பூவுலகில் வாழும் வரை!!

மழலை 😘சிரிப்போடு… 🤩

3

தமிழ் காதல் கவிதைகள் | Love Kavithai In Tamil

தமிழ் காதல் கவிதைகள்  Love Kavithai In Tamil

பெண்மை மீதுள்ள காதல்!

கல் தோன்றி, மண் தோன்றி, கடவுள் எனும் பெண் தோன்றினால் என்றே நினைக்கிறேன்!

அனைத்து உலகிற்கும் ஆக சிறந்த மூலாதாரம் பெண்!

அழகிற்கு ஆதாரம் பெண்!

ஆணிற்கு வாழ்வாதாரம் பெண்!

அன்பின் அவதாரம் பெண்!

மானிட வாழ்க்கைக்கு கிடைத்த வரம் பெண்!

உயிரின் உன்னத வடிவம் பெண்!

அவள் தான் எல்லாம்,
அவளில் இருந்து தான் எல்லாம்!

அன்னையாகவும், அக்காவாகவும்,
மனைவியாகவும்,
மகளாகவும் வாழ்ந்து கொண்டு,

அண்டத்தையும் காக்கும் திவ்ய, தெய்வ திருவுருவம் பெண்!!

நீரின்றி அமையாது உலகு!
பெ‌ண்ணின்றி அமையாது வாழ்வு!!

4

தமிழ் காதல் கவிதைகள் | Love Kavithai In Tamil

தமிழ் காதல் கவிதைகள் Love Kavithai In Tamil

அவள் கண்

இரண்டு நிலா
ஒரே நேரத்தில்!
அவள் முகத்தில்!

அவள் கண்ணோரத்தில்!
சிக்கி தான்
இன்னும் தவிக்கிறது
என் கண்கள்!

அவள் விழியில் விழுந்த நான் இன்னும் தான் நிற்கிறேன் வீதியில்!
அவள் வரும் வழியில்!

அவள்
காந்த கண்களால் காதல் வந்தததே!

அவள் சிமிட்டும் கண்ணில் மின்னல்
தோற்றதே!!

அவள் கண்ணை சிமிட்டி செல்லும் போதெல்லாம்
என்னில் பட்டாம்பூச்சி சிறகு விரித்து சென்றதே!

இரு மை விழிகள்
மயில் இறகு போல்!
அவள் கண்ணில்!
காண காலம் முழுதும் கூட காத்திருக்கலாம்!

அவள் வருகையை எதிர்
பார்த்திருக்கலாம்!

அவள் கண்ணின்
ஒளியில்
நான் காவியம் பல படைப்பேன்!

அவள் கண்ணின் அழகில் ஓவியம் பல
படைப்பேன்!

அவளை படைத்த கடவுளே!
என் ஆனந்த பெருங்கடலே!
அவள் கண்ணில் மூழ்கிய நான்
இன்னும் எழவே இல்லை!

அவள் கண்ணை மூடினால் கூட என் கண்ணும் திறந்தே இருக்கிறது!
தரிசனம் பெற தவிக்கிறது!

அவள் கண்..!
என் காதல்..!!

5

தமிழ் காதல் கவிதைகள் | Love Kavithai In Tamil

தமிழ் காதல் கவிதைகள் Love Kavithai In Tamil

மொட்டை மாடி காதல்

பௌர்ணமி இரவின் முழு அழகை ரசிக்க!
ஆனந்த கூத்தாடும் கண்கள்!

கோவத்தில் வந்தாலும்,
கோயில் கோபுரத்தை
கண்டவுடன் மனதில் ஒரு அலாதியான அமைதி!

எதிர்த்த வீட்டு மாடி தோட்டத்தில் தினமும் பூ பறிக்க வருகிறது ஒரு பூ!

புன்னகையை அள்ளி வீசி புதிய இடம் பிடிக்கிறது!
என் இதயத்தில்!

மழலையை தூக்கி வைத்து கொஞ்சி விளையாடுகிறது!

என் மனமோ மழலையாகவே மாறி விடுகிறது அத்தருணத்தில்!

மழலை கன்னத்தில் முத்தம் வைத்தாள் எனக்கும் சேர்த்து!

சத்தம் எதும் காதில் விழவில்லை என்றாலும்,
நித்தமும் ஏங்குகிறது மனது!

அவளையும் மழலையும் காண!

மழலை அவள் சித்தி மகள்!
அவள் என் தாய்க்கு மருமகளாக!!

தமிழ் காதல் கவிதைகள் Love Kavithai In Tamil

கடவுளுக்கு செல்கிறது விண்ணப்பம்!

கடவுளும் சொல்கிறது அவள் உன்னவள் என்று!

கடவுளின்
கட்டளையும்,
அவளின் காதலையும் ஏற்றுக்கோண்டேன்!

இப்பொழுது தொலைதூரத்தில்,
நினைவுகளை சுமந்து கொண்டேன்!

எங்கிருந்தாலும் என் எதிர் காலம்! என்னவளுடன் தான் என்று!

மொட்டை மாடி! அது ஒரு
சொர்க்க பூமி!
என் வாழ்வில்..!

6

தமிழ் காதல் கவிதைகள் | Love Kavithai In Tamil

கண்ணாடி காதல்!

பார்க்கும் போதே பரவசம்!
இன்னும் கூடுதே
இவன் வசம்!

உள்ளது உள்ளபடி!
உண்மையாய்
எதிரொளிக்கும்!

எதிரில் நிற்கும் போதெல்லாம்
எல்லை மீறிய புத்துணர்ச்சி!

அழகை அளவிடும் ஆனந்த கருவி!

ஆண்கள்?, பெண்கள் என்ன?
நான்!,
ஒரே மாதிரி தான் என்று இருக்கும்!

உங்களை உங்களுக்கே பிரதிபலிக்கும்!

முன் நிற்கும் போதெல்லாம்
சிரிப்பது அழகு என்று புரியும்,
அழுவது கேவலமாக தெரியும்!

இல்லாத வீடு இல்லை,
பத்திரமாக பார்த்து கொண்டால்,
பத்து வருடம் கூட வரும்!

கீழே போட்டு விட்டால் பட்டென்று உடையும்!

கண்ணாடியும் நொறுங்கும் தன்மை கொண்டது தான்,
பிறரால் காயப்படும்,
நம் இதயத்தை போல!!

பத்திரப்படுத்துவதும்,
பயன்படுத்துவதும்,
நம் கையில்!!

கண்ணாடி மீதுள்ள காதல் காலங்களுக்கும் என்னுள்!!

காலையில் முதலில் கண்கள் தேடும்!

பார்த்த பிறகே வாடிய உள்ளம் தேறும்!!

என்னை எனக்கு அறிமுகப்படுத்தும்
அற்புதம் கண்ணாடி!!

நல்ல எண்ணமே ஜெயம்!

நலம் அன்புடன்

ஆர்.கே.ராகுல்

தொலை தூர காதல் கவிதைகள் | Long Distance Love Quotes In Tamil

தமிழ் காதல் கவிதைகள் | Love Kavithai In Tamil

Tags

•தமிழ் காதல் கவிதைகள்
•Love Kavithai in Tamil
•அழகான காதல் கவிதைகள்
•Tamil Love Quotes
•காதல் வரிகள்