தொலை தூர காதல் கவிதைகள் | Long Distance Love Quotes In Tamil
தொலை தூர காதல்
தூரம் மட்டும் தான் தொலைவே தவிர,
அவள் நினைவுகள் எல்லாம் என்றும் நெருக்கமே என் நெஞ்சில்!
அலை ஆடும் கடலில் மேல் தினம் தினம் ஊசல் ஆடுகிறேன்,
அவள் அழகின் ரகசியத்தை ஆராய்ந்து கொண்டே!!
நிலவு வெளிச்சத்தில் நினைவு உச்சத்தில்
வாழ்கிறேன் நான் அவளை நினைத்து கொண்டே!!
ஒரு நாளும் ஓயாது அலைகள் கடலில் , அது போல தான் ஒயாது அவள் நினைவலைகள் என் நெஞ்சில்!!
அவள்
விழிகளில் காணும் வண்ணங்களை, நினைக்கையில் வான வில்லும் தோற்று போகும்,
வில்லில் இருந்து பாயும் அம்பை விட,
அவள் விழியில் இருந்து பாயும் அன்பு, என்னை கொய்கிறது, ஒவ்வொரு வினாடியும்!!
அவளை நான் வழியில் பார்த்தற்கே இவ்வளவு ஏக்கம் வரும் என்றால்,
அவளுடன் நான் வாழ்ந்து பார்த்தால் எவ்வளவு ஏக்கம் தீருமோ என்னில்!!
தூர தேசத்தில், தொடு வானம் துணையுடன்,
தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறேன்
என் காதலை,
நிறைவேறினால் தான் காதலா?

என்னில், என்றும்
அவள்
நினைவேறினால்
கூட காதல் தான்!!
என் கண்ணீரை கழுவும் பன்னீர் அவள்,
என் காகிதத்தில் எழுதும் காவியம் அவள்,
என் மனத்திற்கு மருந்தானவள்,
என் மகிழ்ச்சிக்கு
விருந்தானவள்!!
என்றுமே என் மேல் எல்லையில்லா
அன்பில் வாழும்
என்னவள்!!
அவள் அழைக்கும் தொலைபேசிக்கு மட்டும்
உரையாடுகையில்
ஊமையாகிறேன்!!
உடலெல்லாம் சிலிர்க்கிறது!
உணர்வெல்லாம் துளிர்க்கிறது!!
உயிரில் கலந்த உறவாக!
வாழ்வில் சிறந்த
வரமாக!!
தொலை தூர காதலில்..
💛💚🤍🩶❤️

தேடியே!! கண்கள்!
உன்னை காண துடிக்குதே என் கண்கள்,
வழியெல்லாம் உன் முகம் பார்க்க ஏங்குதடி!
வாழ்வெல்லாம் உனை தேடி
பாலை வனமாய் வறண்டு போனதே என் வாழ்க்கை!
பாலைக்கு நீரூற்ற வருவாயா!
உன் பார்வையால் சோலையாய் மாற்றி செல்வாயா!
ஐம்பொன் சிலைக்கு!
உயிருள்ள நிலையே உன்னால்,
அண்டம் முழுதும் சுற்றி வருவேனே உன் பின்னால்,
உன் முகம் போதும்!
என் முழு வாழ்வும்!!
உன்னை பார்த்தால் தோற்று போகும்
முழு நிலவும்!!
வாராயோ நீ என்னுடன்,
வாழ்வேனே என்றும் உன்னுடன்,
என் பயணத்தில் கிடைத்த *காவிய உறவே!*
என் பாதையில் வந்த *ஓவிய நிலவே!*
என்றுமே *ஓயாது உன் நினைவே!*,
என்னை சுற்றி எத்தனையோ பெண்கள்!
இருந்தால் உன்னை *தேடியே!! என் கண்கள்*

💜💙🩵🤍🩶
அவள் புகைப்படம்!
பார்க்கும் போதெல்லாம் புன்னகை பூக்கிறது!
பொன் நகைகள் தோற்கிறது..
மீள முடியாத சோகத்திற்கும்,
புண்பட்ட மனத்திற்கும்,
அவள் புகைப்படம் ஒன்றே ஒன்றுதான் மருந்தாகிறது!
ஒவ்வொரு காலையும் எழும் போதெல்லாம்,
இரவு கட்டிலில் விழும் போதெல்லாம்,
கண் பார்க்க ஏங்கி தவிக்கிறது!
அவள் முகம் பார்த்த நேரங்களை என் சோகம் தீர்த்த நேரங்கள்!
எத்தனையோ வழி தடங்களை கடந்து விட்டேன்,
இன்னும் கடக்க முடியவில்லை இவள் விழி தடங்களை!!
விதியால் விழுந்ததன் பயனோ!
விழியால்
சேர்ந்தன் பயனோ!
விடையால்
மகிழ்ந்தனன் பயனோ!
வந்தடைந்தது *அவள் புகைப்படம்!*
நிறைவடைந்தது
*என் தவகுடம்!*
தண்ணீரால் அல்ல!!

ஆனந்த
கண்ணீரால்!!
கடற்கரை மணலில்
காதல் ஆட்சி புரிய!
கடலே சாட்சி!
மதுரை மீனாட்சி தான் அவளோ!
கண் கொள்ளா
காட்சி தான் அவளோ!
புகைப்படத்தில் புதையல் கண்டேன்!
மனத்திலே மையல் கொண்டேன்!
மணம் புடிக்க வேண்டுமே,
அவள் கரம் பிடிக்க வேண்டுமே என்று!!
*அவள் புகைப்படம்*
பார்க்கும் போதெல்லாம்…
🩷🩶🤍🩵💙
அவள்
எனக்காக இருக்கின்றவள்!
என் இன்பத்தை பெருக்கின்றவள்!
கண் இமை கொண்டு
கவிழ்கின்றவள்!
காதல் அன்பை விட்டு வருகின்றவள்!
தேனில் ஊறிய
தேவதை அவள்!
நிலவில் தேறிய
முழுமதி அவள்!
நினைவில் ஏறிய
நிம்மதி அவள்!
புன்னகைக்குரிய
பூ அவள்!
வாசனைக்குரிய
சந்தனம் அவள்!
வாசகனுக்குக்குரிய வார்த்தை அவள்!
மீனவனுக்குரிய
வலை அவள்!
காணுதற்கரிய
கலை அவள்!
கார்த்திகைக்குரிய
அகல் அவள்!
வீணைக்குரிய
நாதம் அவள்!
வீட்டிற்குரிய
தெய்வம் அவள்!
பக்திக்குரிய
பராசக்தி அவள்!
பாட்டிற்குரிய
பல்லவி அவள்!
செழிப்பிற்குரிய
செவ்வழனி அவள்!
செம்பருத்திக்குரிய
செவ்விதழ் அவள்!
கரும்புக்குரிய
சர்க்கரை அவள்!
தபாலுக்குரிய
கடிதம் அவள்!
காதலுக்குரிய காவியம் அவள்!
கற்பனைக்குரிய ஓவியம் அவள்!
என் அவள்!!
தனி அவள்!!
*இனி அவள்!!*
*என் வாழ்க்கையாக*

🩵💙💜🩶🤍
பூவும்! அவளும்!
அலங்கரிக்க தேவையில்லை அழகே அங்கு குடியிருப்பதால்!
பூ வாசனை
எங்கும்
வீசும்!
பூவெல்லாம் கூடியிருப்பதால்!
பூவே விழித்து பார்க்கும் மங்கை எல்லாம் தேடியிருப்பதால்!
பாவையின் பார்வை ரோஜாவில் விழ!
மங்கையின் விழிகள் மல்லிப்பூ தேட!
வாடாமலே காத்திருக்கும்!
அவள் வருவாளே என பார்த்திருக்கும்!
அவள் வந்தவுடன்,
அதை வாங்கியவுடன்,
அடுத்த நொடியே
சூடியவுடன்!

உயிர்த்தெழும் அங்கே!
பூவும்!
அவள் புன்னகையும்!
அவள்
கூந்தலின் நறுமணத்தில்,
பூவும் வியக்கும்!
செடியில் இருந்த
நாம் இவள்,
முடியில் இணைய தான் வாழ்ந்தோமோ என்று!
பூந்தளிர் அவள் பூவை சூடும் போதெல்லாம்!
பூலோகத்தின் பார்வை அங்கே
நிலைத்திருக்கும்!
அதிலே இடம் பிடிக்க ஏங்கி தவிக்கும்!
புது மலரை
தானே பூங்கோதைக்கு பிடிக்கும்!
அவள்
உள்ளமெல்லாம் கொள்ளை அடிக்கும்!
காதலில் முதலில் இடம் பிடிக்கும்!
காலமெல்லாம் காவியம் படைக்கும்!
பூவும்! அவள் புன்னகையும்!!
என் நெஞ்சினிலே கலந்திருக்கும்!
என் நினைவினிலே புதைந்திருக்கும்!
💚🤍🩶❤️
நலம் அன்புடன்!
ஆர்.கே.ராகுல்
நமது கவிதை பக்கம்


