தமிழ் கவிதைகள் - Kavithai.co.in
home முகப்பு favorite காதல் group நட்பு
---Advertisement---

போலியான உறவுகள் மற்றும் மனிதர்கள் கவிதை | Fake Relationship Quotes In Tamil

Kavithai Author Avatar
எழுதியவர்: RK RAHUL
தேதி: November 3, 2026 10:31 PM
பகிர:
---Advertisement---

போலியான உறவுகள் மற்றும் மனிதர்கள் கவிதை | Fake Relationship Quotes In Tamil

      1

போலியான உறவுகள் மற்றும் மனிதர்கள் கவிதை | Fake Relationship Quotes In Tamil

போலியான மனிதர்கள்

எங்கேயும், எல்லா இடங்களிலும் போலி!

எத்தனை எத்தனை வேடங்கள்!

மனசாட்சியை மறந்து திரியும் மனித இனம் அல்லவா இது!

புன்னகையில் போலி!
பேச்சில் போலி!
மூச்சில் கூட போலி தான் போல,

உண்மையான நெஞ்சங்களின் தகுதி!
போலியில் புதைந்து விடுகின்றன!

ஏன் இந்த
கபட நாடகம்!
யாருக்காக
எதற்காக!

மண்ணுக்கு இரையாகும் இந்த மானுட சமூகத்தில் போலியாக வாழ்ந்து என்ன பயன்!

மரணத்தில் கூட போலி இருக்கும் என்றா?

முடிந்த வரை,
தான் எல்லாம்!

போலியும் வெளிச்சத்திற்கு வரும்,
போலி என்ற
போதை தெளியும்!.
மீதியும், நீதியும் மட்டுமே நிரந்தரம் என்று புரியும்!!

போலியான மனிதர்களுக்கு!!

2

போலியான உறவுகள் மற்றும் மனிதர்கள் கவிதை | Fake Relationship Quotes In Tamil

சந்தர்ப்பவாதி

உதவும் வரையும்,
உன் அருகில் உள்ளவன்!
உனக்கு நல்லவன்!

தேவை படும் வரை,
தேடுவான்!,
தேளை விட மிக கொடியவன்,

பணத்தை பறிக்கும் வேடன்!
கொடுக்கும் வரை பெறுவான், பெற்ற பின்னே, மறப்பான்!
இல்லையேல் மறந்த மாதிரி நடிப்பான்!!

செய்ய உதவி எல்லாம் நொடி பொழுதில் அழிந்து போகும்,அவன் நினைவில் மறந்து போகும்!

நூறு முறை செய்தாலும்,
ஒரு முறை மறுத்தால் நீயே முதல் எதிரி!

இவனோடு கூடி வாழ்ந்தால் என்ன!?

இவனோடு ஆடி மகிழ்ந்தால் என்ன!?

மிச்சம் என்ன?
ஏமாற்றம் தான் மிஞ்சும்!

நஞ்சை விட கொடியவன்!

நம்மீது ஏறி சென்றுடுவான் முன்னே!!

மீதி என்ன!?
நம் வாயில் மண்ணே!!

வேண்டாம் நம் வாழ்க்கைக்கு சந்தர்ப்பவாதி எனும் சாத்தான்!!

3

போலியான உறவுகள் மற்றும் மனிதர்கள் கவிதை | Fake Relationship Quotes In Tamil

வேதனையில் மனம்

காலம் கனிந்த போது தெரியவில்லை,
காரியம் கை கூடவில்லை எனும் போது வேகிறது மனம்!

நேற்று வந்தவன் எல்லாம் நாற்று பறிக்கிறான்!

பயிரை விதைத்தவன் பார்த்து வெறுக்கிறான்!

ஓடி ஓடி உழைத்து, உடல் இளைத்து செய்த வேலைக்கு வெகுமதி இல்லை!

உடன் இருப்பவன் உல்லாசமாக!இருக்க,
உதிரம் கொடுத்தாய் உன் வசமாக!

பலிகடா நீயாக,
பல்லக்கு அவன் வசமாக!

பார்த்து இருந்தவனுக்கு பல்லக்கு!
பாதை வகுத்தவனுக்கு
பாவ கணக்கு!!

பாறையில் ஒரு நீரோடை!
பாவிகளுக்கு மட்டுமே தெரியும்!
கார் மேடை!

நேரிடையாக சொல்ல வழி தெரியாமல்!
நொந்து மனம்
வேதனையில் திளைக்குதே தினம்!

இன்னும் எத்தனை காலம் தான் இப்படி!
இதில் இருந்து
முன்னேறுவது எப்படி!

எங்கே அந்த ஏணிப்படி!

ஏறாமலே சறுக்குதே ஏன் இப்படி!!

4

போலியான உறவுகள் மற்றும் மனிதர்கள் கவிதை | Fake Relationship Quotes In Tamil

குறுக்கு வழி

வழி மட்டும் குறுக்கு அல்ல!
புத்தியும் குறிகியதாகவே உள்ளது பலருக்கு!

தன்னுடைய குறைகளை அறியாமல் கோட்டையை நோக்கி சென்றாலும் குப்பையில் தான் கடைசியில்!

குறுகிய எண்ணம்!
குறுகிய மனப்பான்மை!

எல்லாரையும் முந்தி விட்டோம் என்று எண்ணி, அறிவில் அனைவரையும் பிந்தி விட்டோம் என்று தெரிவதில்லை!

இதுவும் ஒரு திருட்டு தான், நேரத்தை திருடி, குறுக்கு வழியில் ஓடி, குதிரையில் ஏறி, குழியில் விழவா?

யாரும் கண்டு கொள்வதில்லை என்பது இல்லை!

பார்வையிலே ஒரு கேவலம்!
நேர்மையிலே ஒரு
கபடம்!

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்று!

குறுக்கு வழி
வேகம் தான்,
விவேகம் அல்ல!

தவிர்த்து கொண்டு வாழ பழகு!
நேர் வழியில் வாழ்வதே
வாழ்க்கைக்கு அழகு!!

5

போலியான உறவுகள் மற்றும் மனிதர்கள் கவிதை | Fake Relationship Quotes In Tamil

மனிதர்களின் பார்வை

ஒருவரை பற்றி அறிந்து கொள்ளாமலே,
அவரை தவறாக எடை போடுவது!

தன்னை விட யாரும் உயர்ந்தவர் இல்லை என எண்ணுவது!

தனக்கு தான் எல்லாம் என சுயநலமாக செயல்படுவது!

தன் குறையை அறியும் முன்னே
பிறரை குறை சொல்வது!

தான் குற்றம் செய்து இருந்தாலும் ஒற்றுக்கொள்ள மறுப்பது!

மற்றவரை மன்னிக்க மறப்பது!

மனதிலே நினைக்கும் எல்லாமே நடந்து விட வேண்டும் என நினைப்பது!

ஒருவருடன் பழகி தான் அவரை முழுமையாகப் தெரிந்து கொள்ள முடியும்! என புரியாமல் இருப்பது!

தனக்கு மட்டும் தான் உலகத்திலே கஷ்டம் என கவலை படுவது!

எவ்வளவு இருந்தாலும் திருப்தி இல்லாமல் இருப்பது!

தன் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது!

ஒரே வாழ்க்கையை வாழ்நாள் முழுதும் வாழ்ந்து சலிப்பது!

அளவுகள் இல்லாமல் அதிகமாக குடிப்பது, புகை பிடிப்பது!

இந்த உலகத்துக்கு எப்பொழுதும் இடையூறாக இருப்பது!

இறுதியில் நான் வாழவே இல்லை என மறுப்பது!

மரணித்த பிறகு தான் முடிவில் ஒன்றுமே இல்லை என உணர்வது!

இப்படி நீங்கள் வாழ்ந்து தான் ஆக வேண்டுமா?

இல்லை நீங்கள் கொஞ்சம் திருந்த தான் வேண்டுமா?

சிந்தியுங்கள் மனிதர்களே!

இதை எண்ணி வாழ்வை சந்தியுங்கள் நண்பர்களே!!

நான் தான் நீ!
நீ தான் நான்!
நாம் தான் மனிதன்!!

6

போலியான உறவுகள் மற்றும் மனிதர்கள் கவிதை | Fake Relationship Quotes In Tamil

ஞாபக மறதி

யார் சொன்னால் ஞாபக மறதி வியாதி என்று!

இன்றைய பல இன்னல்களை மறக்க செய்கிறது!

எதிரிகளையும், துரோகிகளையும் மறக்க செய்கிறது!

இருந்தததையும், இழந்ததையும் மறக்க செய்கிறது!

கடந்து வந்தததை மறந்து கரையேற
புது வழி பிறக்க செய்கிறது!

எண்ணிலடங்கா துன்பம் தந்தவர்களையும், இனிதே மறக்க செய்கிறது!

மறந்து வந்த போதெல்லாம் நான் பிறந்து வந்ததாகவே உணர்கிறேன்!

பூக்களை போல் புன்னகையில் மலர்கிறேன்!

புதிய பொழுதில் புத்துணர்ச்சி பெறுகிறேன்!

இன்றைய காலங்களில்
ஞாபக மறதி
வியாதி அல்ல!

விசேஷம்!!

ஏனென்றால் நாம் நினைத்து பார்க்கும் அளவிற்கு,

யாரும் நன்மை செய்வதும் இல்லை!

யாரும் நிம்மதி தருவதும் இல்லை!

தீமையை செய்ய தவறுவதும் இல்லை!!

ஞாபக மறதி வேண்டும் தான்!

நாளும் மருந்தாக!
நாளை சிறந்ததாக!!

7

போலியான உறவுகள் மற்றும் மனிதர்கள் கவிதை | Fake Relationship Quotes In Tamil

பகை

பத்து வருட நட்பை, உறவை!,
பத்து நாழிகையில் தொலைத்து,

பழகிய பழக்கம் மறந்து,

கடந்து வந்த பாதையை கழுவி விட்டு,

பண‌ம் எனும் காகிதத்தை மனதில் சலவை போட்டு,

காரணமே இல்லாமல் சண்டையிட்டு,

சுய சிந்தனை இல்லாமல், ஊரார் சொல் கேட்டு, ஒழுக்கங்கெட்டு,

மனிதன் எனும்
மதிகெட்டு , மிருக மனம் கொண்டு!

உறவு, நட்பு என்பதெல்லாம் காணாமல் போய், கேவலமான வார்த்தைகளை காற்றிலே வீசி விட்டு,

காலம் முழுதும் தொடர வழி வகுக்கும் ஓர் அர்த்தமற்ற அற்ப உணர்வு பகை

நம் வாழ்க்கை பயணத்தில் வேண்டாத ஒன்று பகை

நீங்கள் வெல்வதாக நினைத்து, நினைத்து நிம்மதியை இழந்த குடும்பங்கள் எத்தனையோ!!

பகையை பங்கு போடாமல்,
பாசத்தை பங்கு போடுங்கள்!!

வேண்டாமே பகை!!

நல்ல எண்ணமே ஜெயம்!

நலம் அன்புடன்

ஆர்.கே.ராகுல்

சோகக் கவிதைகள் | Sad Quotes In Tamil

Tags

•Fake Love Quotes in Tamil

•Tamil Fake Relationship Quotes

•Fake Love Kavithai

•பொய்யான அன்பு கவிதை

•போலி அன்பு தமிழ் கவிதை

•நம்பிக்கை துரோகம் கவிதைகள்

•Fake Friends Kavithai