தமிழ் கவிதைகள் - Kavithai.co.in
home முகப்பு favorite காதல் group நட்பு
---Advertisement---

Moon Quotes in Tamil|நிலா கவிதைகள்

Kavithai Author Avatar
எழுதியவர்: RK RAHUL
தேதி: October 30, 2026 11:56 PM
பகிர:
---Advertisement---

 

    Moon Quotes in Tamil|நிலா கவிதைகள்

                                                                          1

Moon Quotes in Tamil|நிலா கவிதைகள்

இரவின் அழகில்,
உலகில்,
ஒளிரும் மின்மினி!
என் காதல் கண்மணி
நிலா!!

தனிமை கூட,
இனிமை தான்,
நிலவே உன்னுடன் இருந்தால்!

விடியும் வரை,
என்னுடன் இருந்து,
ஆறுதல் அளித்தாயே
ஆகாசத்தில்!

வேலை முடியும் வரை,
உன் முகம் கொண்டு
அமைதி அடைந்தேனே
அந்நேரத்தில்!

காதலி என்னுடன்
இல்லை என்றாலும்,
உன் காட்சி
அவளின் சாட்சியாக நீள!..
மனம் வரவில்லையே இன்னமும்,
அதிலிருந்து மீள!

உன்னை பார்த்த
பின்பு தான்
உண்டேன் இரவில்,
சிறு வயதில்,
அம்மா காட்டிய
அந்த அழகிய நிலா!
நீயல்லவோ!

மாதத்தில்,
ஒரு இரவு காணாமல் போகிறாய்,
அந்த இரவின் நேரம்,
ஏனோ நெருடுகிறது,
என் நெஞ்சம்!!

நீ வளரும் போது,
என் புன்னகையும்
வளர்கிறது!
உன்னை பார்த்த பின்பே,
மலர்கிறது என் முகம்!

தொலை தூரத்தில்
நீ இருந்தாலும்
என் சொந்தமாய்,
தினம் காண்கிறேன்
உன்னை!

யாருமே என்னுடன்
இல்லாத நேரத்தில்,
நீ தந்த துணையே,
என்னை திருப்தி செய்தது!

வான் நிலவே,
என் பால் நிலவே,
நீ வா நிலவே
தினம் தினம்!
தந்து விடு தரிசனம்!

    Moon Quotes in Tamil|நிலா கவிதைகள்

Moon Quotes in Tamil|நிலா கவிதைகள்

குளக்கரையில் நான்,
தனித்திருக்க
கோடி நட்சத்திரங்கள்
வானில் பூத்திருக்க,
தரையில் நான் தனித்திருப்பது
போல், வானில் நீ!!

இரவை சிறப்பிக்க,
வந்த நிலவே!
என் உறவை
புதுப்பிக்க வந்த வரவே!
வரமே நீ எனக்கு!

கண்ணில் உன்னை காணும்
போதெல்லாம்,
இந்த இரவு இப்படியே
நீளாதோ என ஏங்குகிறேன்!
உனை பார்த்த பின்பே
தூங்குகிறேன்!

அகில உலகின் ஆனந்தமே!
நிலவே உன்னை காண்பது
பேரின்பமே!

அசதியில் வந்து படுத்து,
அன்னாந்து பார்த்தால்,
ஆசை கூடுதே,
உன்னை கண்ட பின்னே
என் விழிகள் மூடுதே!

அம்மாவாசை அன்று,
ஊரே தூங்கும் போது,
நான் மட்டும் தூங்கவில்லை!
நிலவே,
உன்னை காணாமல்!

உன்னை வர்ணிக்க
வார்த்தை போதவில்லை!
வெள்ளி நிலவே!
வெகு தொலைவில்
நீ இருந்தும்
என் நெஞ்சில் நெருக்கமே!

எந்த இடமும் உன்னோடு,
காண்கையில் தானே,
ரசிப்பதாய் இருக்கிறது!
ரம்மியமாய் இருக்கிறது!

இறைவன் அளித்த
நன் கொடையே!
இரவின் வெளிச்சமே!
இயற்கை இன்பமே!

கடலில் ஆர்ப்பரிக்கும்,
அலையில்,
அமைதியாய்,
நீ தெரியும் போது
ஆனந்தமாய் மாறுதே
என் நெஞ்சம்!
ஆசையின் எல்லை
மீறுதே என் நெஞ்சம்!

தனிமையின் தோழனாய்,
இரவின் காவலனாய்,
நீ இருக்கிறாய்
என்றும் எங்களுடனே!!

   Moon Quotes in Tamil|நிலா கவிதைகள்

Moon Quotes in Tamil|நிலா கவிதைகள்

சோகத்தில் நான் இருந்தாலும்
தூரத்தில் இருந்தே,
மனம் மாற்றுகிறாய் நீ!
எனக்கு
மருந்தாய் இருக்கிறாய்,
மதியே!

இரண்டு எழுத்து
கவிதை
நிலா
நீயல்லவோ!

நீ வானில் மிதக்கும் போது,
நானும் மிதக்கிறேன்
தரையில்,
உனை பார்த்துக் கொண்டே!

வண்ண நிலவே,
நீ வர தாமதிக்க,
கண்கள் யாவும்
அலைபாயுதே!
வானம் முழுக்க உனை தேடுதே!

பௌர்ணமி இரவின் பிரகாசமே!
மனம் முழுக்க பரவசமே!
வட்ட நிலவே!
இன்று என்ன திட்டம்
வைத்திருக்கிறாய்!
என் மனதை
கொள்ளையடிக்க!!

நீ போட்ட ஒளி மந்திரத்தால்
என் விழி வாடுதே,
உனை எண்ணியே!!

      Moon Quotes in Tamil|நிலா                         கவிதைகள்

Moon Quotes in Tamil|நிலா கவிதைகள்

 நீண்ட தூர பயணத்தில் கூட
துயிலவில்லை!
உன் கொள்ளை அழகில்
விழி வைத்து கொண்டே!!

சாலையில் செல்லும்
வழியை கூட சரியாக
பார்க்க மறுக்கிறது,
விழிகள்!
நிலவே உனை காண
தொடங்கி விட்டால்!!

ஒற்றயடி பாதையில்
நடந்து செல்லும் போது
உற்ற வழி துணை
நிலவே
நீயெல்லவோ!

உன்னை ரசிக்க
துவங்கிய
பின்பு தானே,.
உலகையே ரசித்தேன்!
என் முதல்,
காதல் நீயெல்லவோ நிலவே!!

வளர்பிறையாகவும்
தேய்பிறையாகவும்,
இருந்து,
வாழ்வின் வழிநிலைகளை
புரிய வைத்தாயே
நிலவே!

நீ வளரும் போது வாழ்க்கையின்
உயர் நிலைகளையும்,
நீ தேயும் போது வாழ்வின்
மேடு பள்ளங்களையும்
அறிய வைத்தாயே
நிலவே!

எம் மதியே
உனை கண்டால் தானே
நிம்மதியே!

வீட்டு வாசல் வந்து
உனை கண்டு
மனம் விரும்பி
பாய் விரித்து படுத்து
உறங்குவேன்
உன் துணையோடு!

பரம்பொருள் தந்த பரிசே!
ஈடில்லா இரவின் அரசே!
சந்திரனே!
நட்சத்திர நாயகனே!

எப்படி தான் வாழ்கிறாயோ
ஒற்றையாக ஆயுள் முழுதும்!
நிலா!

நெடுந் தொலைவில் நீ இருந்தும்
கடுந் தவம் நான் இருக்கிறேன்,
உன்னை அடைய! நிலவே!!

பால் வெண்ணிலவே,
பார் வெண்ணிலவே,
என்றும் நீ என்
கண்ணில் நிலவே!

நீ வந்ததால் தானே,
நானும் வந்தேன் வீதிக்கு,
வானில் இருக்கும் கற்கண்டு!
அனுதினமும் உன்னை ரசிப்பேன்,
என் கண் கொண்டு!!

இயற்கை எழிலில்,
உனக்கொரு பெரும்
பங்குண்டு!,
உனை கொண்டே இயங்குகிறது
உலகம்!
நிலவே நீயும் இறைவனே!

       Moon Quotes in Tamil|நிலா கவிதைகள்

Moon Quotes in Tamil|நிலா கவிதைகள்

கண் மூடி படுத்தாலும்,
கண் திறந்து பார்த்தாலும்,
எப்பொழுதும் அழகிய
கவிதையாக,
எண்ணத்திலும்,
வானத்திலும் நீ!!

உன்னால் தானே,
இரவில் வெளிச்சம்
பூமிக்கு,
உனை கண்டால் தானே
வாழ்வில் மோட்சம்
இந்த பாவிக்கு!!

எல்லாம் என்னை விட்டு பிரிந்த,
போது நீ வந்து சேர்ந்தாயே,
என் முழு வாழ்விலும்
முழு மதியாய் நீ!

இந்த பிரபஞ்சத்தில்
நீயும் ஒரு கோள் என்றார்கள்,.
உனை அடைய ஒரு குறிக்கோள் கொண்டார்கள்,
வென்றார்கள்,
அனுமதி அளித்தாய் நீ அமைதியாக!
வானிலும் வாழலாமோ
உன்னுடன்!!

வெள்ளை அழகில்,
என்னை கொள்ளை
கொண்ட நிலவே!
அற்புதமாய் வானில்,
நான் கண்ட நிலவே

வட்ட வடிவமாய்,
வளர்ந்து விட்டாய்,
இனியும் என்ன திட்டம்,
வைத்திருக்கிறாய் எனை
வாட்ட! நிலவே!!

பாராபட்சம் இன்றி இந்த பார் முழுவதும் பார்க்கிறாய்,
தனி ஒருவனாக இருந்து
இவ்வுலகையே
இரட்சிக்கிறாய்!!

      Moon Quotes in Tamil|நிலா கவிதைகள்

Moon Quotes in Tamil|நிலா கவிதைகள்

வானில் முழு மதியை
பார்த்தால் தானே,
நாள்தோறும் நிம்மதி!
நின் மதியில் என்றும்
நீ! நிலவே!!

சங்கீதம் என்றாலும்,
சந்தோசம் என்றாலும்,
சந்திரன் இருந்தால்
மட்டுமே!
நெஞ்சத்தில் நிறைவு!

இன்பம் கூடும் வேளையிலும்,
துன்பம் தேயும்,
புது ஓசை காதில் பாயும்
இசை வழியாக காதோரத்தில்,
அப்பொழுதும் நான் கண் வைத்திருக்கிறேன்
சாளரத்தில்!
தெரியும் மதி மீது!!

நிலம் அதில்!
நிலவு அதில்!
நினைவு அதில்!!

நல்ல எண்ணமே ஜெயம்!

நலம் அன்புடன்

ஆர்.கே. ராகுல்

                     இயற்கை காதல் கவிதைகள் | Nature Love Quotes In Tamil

  • நிலா கவிதைகள் தமிழில்
  • Nila Kavithai in Tamil
  • Moon Kavithai for WhatsApp Status
  • Tamil Love Moon Quotes
  • Nila Kavithai for Girlfriend Boyfriend
  • இரவு நிலா கவிதைகள்
  • Romantic Moon Poems in Tamil
  • Nila Quotes in Tamil