அம்மா கவிதை | Amma Kavithai In Tamil
1
உலகத்தின் முதல் தெய்வம்!
ஒவ்வொருவருக்கும், அவள் தாய்!
உயிர் கொடுத்த அவளுக்கு!
உலகத்தில் எது கொடுத்தாலும் ஈடாகாது.பத்து மாதம் வயிற்றிலும்,
வாழ்நாள் முழுதும்,
நெஞ்சில் சுமப்பவள்
தாய்!உலகில் ஒரு உன்னதமான உறவு,
உயிருக்கு உயிரான உணர்வு,
தாயிடம் மட்டுமே வெளிப்படும்!அம்மா என்ற உறவில்,
ஆசையை துறந்து வாழும்
துறவி அவள்!வியர்வை சொட்ட சொட்ட,
சமையலறையில் வித விதமாய்,
சமைத்தாலும், அவள் உண்பது எனுமோ குடும்பம் உண்ட பிறகு
உள்ள மீதியை தான்!காய்ச்சல் வந்தாலும்,
கலங்காமல் தனக்கு தானே,
சிகிச்சை செய்து கொள்ளும்
மருத்துவர்! அம்மா!!யாருக்கு உடல் நலம் சரியில்லை
என்றாலும் முதலில் ஓடி வந்து
தேற்றும் தெய்வம் அவள் அம்மா!வலித்தாலும் உதட்டில் உச்சரிக்க கூடிய
வார்த்தை அம்மா!
நம் வாழ்வில்
வலிகளுக்கு மருந்தாக “அம்மா”அம்மா கவிதை | Amma Kavithai In Tamil
மனங்களில் ஓர் அமைதி,
குணங்களில் ஓர் அழகு,
சினங்களில் ஓர் சிரிப்பு,
மனிதர்களில் ஓர் தெய்வம்!
அம்மா!!அம்மா வீட்டில் கடைசியாய் உறங்குபவள்,
காலையில் முதலில்
எழுப்பவள்!,
முடிவதே இல்லை இந்த சுழற்சி,
அவளின் மரணம் வரை!பாத்திரம் கழுவியே,
தேய்ந்து போனதோ!?
அவள் விரல்கள்!
அம்மா ஒரு கதாபாத்திரம் அல்ல!,
உன்னுடன் வாழும் கடவுள் பாத்திரம்!!அம்மாவுக்கு மட்டுமே தெரியும்,
அவள் வாழும் வாழ்க்கை,
விருப்பப்பட்ட வாழ்க்கையா
இல்லை,
வெறுக்கப்பட்ட வாழ்க்கையா
என்று!!அம்மா கொடுத்து வைத்தவள் தான்,
எல்லாவற்றையும் தன் குடும்பத்திற்கே!,
என்றாலும் இன்னும் இன்னும் வாங்கவே நினைக்கிறது குடும்பம்!அம்மா தன் வாழ்நாள் முழுவதும்,
தியாகம் செய்கிறாள்!,
தன் குடும்பத்திற்கு!,
என்றாலும் நன்றி மறக்கிறது,
நிறைய குடும்பங்கள்!!அம்மா கவிதை | Amma Kavithai In Tamil
அம்மா எனும் வார்த்தை
வெறும் சொல் அல்ல!,
அன்பை தரும் மந்திரம்,
அறிவை தரும் உயிர்,
அழகை தரும் உடல்,
அகிலத்தின் உன்னத ஆன்மா!
அம்மா!!அம்மா இல்லாத வீடு,
அனாதை இல்லத்திற்கு சமம்.தாய் சொல் தட்டாத பிள்ளைகள்
சமுதாயத்தில் தரமாக வளரும்!அன்னை மடியில் உறங்கிய,
உறக்கம்,
ஆடம்பர ஊஞ்சலில்
உறங்கினால் கூட வருவதில்லை!மஞ்சள் கயிற்றை கூட,
ஆபரணமாக நினைத்து வாழ்பவள்
அம்மா!!உயிரை எடுக்கிறவன்,
எமன் என்றால்
உயிரை கொடுக்கிறவள்
நம் தாய்!தாய் அன்பிற்காக தான் தவிக்கிறது,
இவ்வுலகம்!அள்ள அள்ள குறையாத,
அன்பை தரும் அமுத சுரபி,
தாய்!பத்து மாதம் சுமந்து,
பக்குவமாய் பெற்றெடுத்து
பாலுடன் பாசத்தையும் ஊட்டி,
தன் உறக்கம் தொலைத்து,
பிள்ளையை
கண்ணுக்குள்ளேயே வைத்து பாதுகாத்து,
நடக்க வைத்து,
பைந்தமிழ் சுவையை
நாவில் சுவைக்க வைத்து,
இவ்வுலகில் தனி மனிதனாய்
உருவாக்கி,
பிள்ளையை மட்டுமே
உலகமாக நினைத்து வாழும்
உன்னத உயிர் தான் தாய்!அம்மா கவிதை | Amma Kavithai In Tamil
தான் பெற்ற பிள்ளைகளை நினைத்து,
அவர்களின் எதிர்கால வாழ்க்கையை எண்ணி, எவ்வளவு இன்னல்களிலும்,
தன்னிலை மாறாமல் வாழ்ந்து
கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும்
கொண்டாடப்பட வேண்டியவள் தான்!கணவன் செய்யும் கொடுமைகளை
சகித்துக் கொண்டு,
கஷ்டமான சூழ்நிலையிலும்,
குடும்ப பாரத்தை சுமந்து
கொண்டு வாழும் சிங்கப்பெண்
அம்மா!தான் படும் கஷ்டத்தை,
தன்னுடைய பிள்ளைகளும்
பட கூடாது, என நினைப்பவள்
அம்மா!தனி ஒருவளாக உலகத்தையே
எதிர்த்து நிற்கும் துணிவும்!
எந்த சூழ்நிலையிலும்,
யாரையும் எதிர்பார்த்து நிற்காத,
தன்னபிக்கையும் கொண்டவள்
அம்மா!அம்மா கவிதை | Amma Kavithai In Tamil
அம்மா இல்லாமல் ஏது உலகம்!
ஆனால் அவளுக்கோ
தன் குடும்பமே உலகம்!அம்மாவின் கண்ணீரின் அளவு,
அவள் உறங்கும் தலையணைக்கு
மட்டுமே தெரியும்!ஆண் எனும் மிருகத்தை
மனிதனாக மாற்றுபவள்
அம்மா,
மரியாதையாக நடத்துபவள்
அம்மா,
ஆணின் மகிழ்ச்சிக்கு
காரணம் அம்மா!!
ஆம், அவளும்
ஒரு கடவுள் அவதாரமே!!
ஒவ்வொரு குடும்பத்திற்கும்!!ஒவ்வொரு மனிதரையும்
உருவாக்கும் பொறுப்பு,
அவளிடம் தான் இருக்கிறது,
ஆண்டவன் ஆணைப்படி
பிறந்த அற்புத பெண்
அம்மா!நாம் பார்த்த முதல் முகம்
அம்மா!
நாம் உச்சரித்த முதல் வார்த்தை
அம்மா!
நம் முழு முகவரி அம்மா!அவள் வாழ்வின்
பாத சுவட்டில் தான்,
பயணித்து கொண்டிருக்கிறோம்!
அம்மா அனுப்பிய பயணி தான்
நாம்!எந்த ஏட்டில் படித்தாலும்,
அவள் சொல்லி தரும்
பாடத்தை, அந்த
ஆண்டவனாலும்
கற்பிக்க முடியாது!
அம்மா, அற்புதம் மட்டும் அல்ல,
அனுபவம்!!அம்மா கவிதை | Amma Kavithai In Tamil
அன்பும், அதிகாரமும்
பண்பும், பரிவும்,
அறிவும், அரவணைப்பும்,
அமைதியும், நிம்மதியும்
அம்மாவிடம் மட்டுமே!!என் முதல் காதல் அம்மா!
என் முதல் பரிசு அம்மா!
என் முதல் முத்தம் அம்மா!வஞ்சம் இல்லாத நெஞ்சம்,
கொண்டவள் அம்மா!
தஞ்சம் புகுந்த வீட்டில்,
தாயானவள் அம்மா!ஊரும், உறவும்
ஒதுக்கினாலும்
உண்மையான உழைப்பினால்,
உயர்ந்து காட்டுபவள் அம்மா!
தனக்கென வாழாமல்,
பிறர்கென
வாழ்ந்து காட்டுபவள்
அம்மா!வலி தெரியாமலே வாழ்ந்து விடுகிறது,
பிள்ளைகள்,
தாயுடன் இருக்கும் வரை!தாயை பிரிந்து வாழும் வாழ்க்கை,
தனித்து விடப்பட்ட தரிசு நிலம் போல,
பசுமையே காணாமல்
காய்ந்தும் போகிறது!
கசந்தும் போகிறது!!
ஒரு மனிதன்,மிருகம் ஆவதும்,தெய்வம் ஆவதும் அம்மாவின் வளர்ப்பில் தான்!
அன்னை அன்பில் தான்
அகிலமும் அகிம்சை வழியில் இயங்குகிறது,
பேரன்பு கொண்டு நல் அறிவை வழங்குகிறது!
அம்மா கவிதை | Amma Kavithai In Tamil
கடல்
அலைகள் ஒய்வதில்லை,
அவள் அன்பும் ஒய்வதில்லை!
அம்மா கல் அல்ல,
கடவுள்!!
அம்மா சொல் அல்ல,
கவிதை!!
மூச்சுகாற்றை,
தந்து விட்டால் அம்மா!
மூச்சுகாற்று போல்
முழு உடலில்
தங்கி விட்டால் அம்மா!
முழு உதிரத்தில் கலந்து விட்டாள்,
அம்மா!!
அம்மா! அம்மா! நீ நீண்ட ஆயுளும் நிறைய செல்வமும் பெற்று பெரு வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!
நல்ல எண்ணமே ஜெயம்!
நலம் அன்புடன்
ஆர்.கே.ராகுல்
நட்பு கவிதைகள் | Friendship Quotes in tamil

















