வாழ்க்கை கவிதைகள் | Life Quotes In Tamil
1

நெஞ்சில் ஈரம்
என்ன தான் கல்லாக இருந்தாலும்
கல்லுக்குல்லும் ஈரம் இருக்க தானே செய்கிறது!
அது போலவே
அனைவரது மனதிலும் ஈரம் உண்டு!
சில நேரங்களில் அதை கண்டு பெருமை அடைகிறேன்!
மனிதனிலும் மனிதன் உண்டு!
தூங்காத நேரம்!
தாங்காத பாரம்!
இருப்பினும்
உள் நெஞ்சிலே ஈரம் இருக்கவே செய்கிறது!
வறுமையிலும் நேர்மை!
தோல்வியிலும்
பொறுமை!
வாழ்விலும்
எளிமை!
பேச்சிலும் இனிமை!
கொண்ட நெஞ்சங்கள்!
நிச்சயமாக
ஈரம் அதிகம் நிறைந்த நெஞ்சங்கள்!
அடுத்தவரின் தோல்விலும், துன்பத்திலும்,
ஆறுதலாக துணை நிற்கும் நெஞ்சங்கள்!
உடன் இருப்பவருக்கு உதவி செய்யும்
நெஞ்சங்கள்!
உறவுகளை வளர்க்கும் நெஞ்சங்கள்!
ஊரை காக்கும் நெஞ்சங்கள்!
உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நெஞ்சங்கள்!
இப்படி எத்தனையோ ஈரம் வாய்ந்த நெஞ்சங்கள் இருப்பதால் தான்!
மண்ணிலும் மழை எனும் ஈரம் பார்க்க முடிகிறது!
எல்லோருடைய வாழ்விலும்
வளம் பெற முடிகிறது!
நெஞ்சில் ஈரம் எனும் போதே,
கண்ணோரம் சிறு கண்ணீர் துளி எட்டிப் பார்க்கிறது!
இதுவும் அப்படிப்பட்ட ஈரமோ!! எனுமோ!?
நெஞ்சோரத்தில் நிறைந்த வரிகள்!
நெஞ்சில் ஈரத்தில்
புதைந்த வரிகள்!!
2
வாழ்க்கை கவிதைகள் | Life Quotes In Tamil

இளைய இரத்தம்!
வாழ்வில் இன்பத்தை பெரிதும்
அனுபவிக்க கூடிய பருவம்!
அறுபதில் வாழ்வை எண்ணி!
இன்றைய இருபது காணாமல் போகிறது என்பதை விட வாழாமல் போகிறது!
எந்த பாதை என்று அறியாமல், வாழ்வின் அர்த்தம் உணராமல்!
கவலைப்படுகிறது!
கரை சேர துடிக்கிறது மனம்!
இந்த வயதில் உழைக்காமல் எந்த வயதில் உழைப்பது?
இந்த வயதில் வாழாமல் எந்த வயதில் வாழ்வது!?
இவ்விரு கூற்றில் கொதிக்கிறது இளைய இரத்தம்!🩸
இரவு பகல் பாராமல் கண் துஞ்சாமல் கருமமே கண்ணாக இருந்து!
வாழ வேண்டிய வாழ்வை துறந்து!
தவிக்கிறது
இளைய இரத்தம்! 🩸
காலத்தின் கட்டாயம்!
அவரவர் தேவைகளும் தான் காரணம்!
என்று நினைக்கிறது இளைய இரத்தம்! 🩸
யுத்தத்தில் கூட ஒரு முறை மட்டுமே மரணம்!
இந்த இளைய இரத்தத்திற்கோ
தினம் தினம் மரணம்!
உயிர் போகாத மரணம்!
ஏன் இந்த ஜனனம்!
குடும்பம் ஒன்றே காரணம்!
இறைவனே சரணம்!
இரத்த வியர்வை சிந்தி, முன்னேற்றம் இல்லாத,
இளைய இரத்தம்!
இந்த காலம் மாறும் என்ற நம்பிக்கையில் நடைபோடுகிறது!
என் இளைய இரத்தம்🩸
3
மின்சார கம்பம்!
எண்ணிடலங்கா வலிகள்,
எல்லையில்லா தோல்வி,
எல்லாவற்றையும் மனதில் சுமந்து ஒற்றை காலில் நிற்கிறது ஒரு உருவம்!
வழி தெரிந்து விட்டால் போதும்,
வாழ்ந்து காட்டும்!..
மின்சார ஒளி வழிப்பாதையை தானே காட்டும்!,
வாழ்க்கை பாதையை யார் காட்டுவது!
கடவுளா?
உள்ளத்தில் உள்ளதை அறிய
அறிவு மட்டும் போதாது, அதையும் மிஞ்சிய ஞானம் வேண்டும்!
என்னுள்ளேயே என்னை தேடுகிறேன் தினம்!
என்று நான் அறிவேனோ,
அன்று தொடங்கும் புதிய அத்தியாயம்!
மனித வாழ்வில் மனிதனாக மாறுவது அப்போது தான்!
மனதில் உள்ளே எல்லை மீறுவது அப்போது தான்!
ஒரு நிலை
அமைதி நிலை!
ஆழ்ந்த அறிவு நிலை!
மனம் மட்டும் தான் அங்கு!
மரணம் கூட ஜனனமே அங்கு!!
மின்சார கம்பத்தின் மீது சாய்ந்து நிற்கும் ஒரு மின்சாரம்!
மனித சாரத்தில்!
நான்!
4
வாழ்க்கை கவிதைகள் | Life Quotes In Tamil
மகத்தான ஜீவன்
என்னுள் ஓர் பேரின்ப ஊற்று நிறைந்திருக்கிறது!
இருந்தாலும் வெற்றிக்கான தாகம் தனியாமல் தவிக்கிறது!
திறமை எல்லாம் உள்ளே மறைந்திருக்கிறது!
பொறுமை எல்லாம் எல்லையை கடந்து நிற்கிறது!
எதற்க்காக இந்த ஆத்மா!
ஏன் இந்த வாழ்க்கை!
விடை தெரியாமல் தேடலில் நகர்கிறது!
கண்டு கொள்ளும் வரை, ஓயாது பயணம்!
கண்டு விட்டால் அதற்காகவே இந்த வாழ்க்கை அர்ப்பணம்!
சொப்பணத்தில் கூட சோர்வில்லை!..
சோகம் மட்டுமே தீர்வில்லை!
நிகழ்கால ஓட்டத்தில் பயணம் இன்னும் தீரவில்லை!
பாதை எது என்று
தெரியவில்லை!
வழி புரியும் வரை வாழவே வாழ்க்கை!
தினம் தினம் வாடிக்கை!
புதிரான வேடிக்கை!
நேரம் மட்டுமே காணிக்கை!
என் ஜீவனுள் எரியும் தீப ஜோதியே!
என் வாழ்வின்
மீதியே!
என் கடவுளின் நீதியே!!
இந்த மகத்தான ஜீவன்! 🔥
5
வாழ்க்கை கவிதைகள் | Life Quotes In Tamil
வைராக்கிய💎 மனம்
என்னைச்
சுற்றி தெரிந்தவர்கள்,
என்னுடன்
சுற்றி திரிந்தவர்கள், என எல்லாம் என் அருகில் இருந்தும்!
சூழ்நிலை புரிந்தும் வேடிக்கை பார்த்து கொண்டு,
எனை பார்த்து நகைக்கும் போது, என்னுடன் பேசி நடிக்கும் போது
கடந்த கால நினைவுகள்! , காரியம் முடிந்த பின் கை விட்ட உறவுகள்!
ஏராளமான பிரிவுகள்!
நான் கண் விழித்ததோ எத்தனையோ இரவுகள்!
இறுகிய இதயமாக!
எரி தழலில் வெந்த மனம்!
கருங்கல்லாய் ஆன மனம்!
உருகிய இரும்பில்
உருவான மனம்!
என் செயலில் வைராக்கியமாய்💎 பிரதிபலித்தது!
அந்த ஒளியை ஊரே வேடிக்கை பார்த்தது!
சொல் அல்ல இவன் செயல் என்று!
பூரித்தது!
இன்னும் செய்ய காத்திருக்கிறது!
விண்ணும் செல்ல பார்த்திருக்கிறது!
வென்று சொல்ல
பிறந்திருக்கிறது!
இந்த வைராக்கியமான மனம்💎
6
வாழ்க்கை கவிதைகள் | Life Quotes In Tamil
சுதந்திரம்
எங்கே சுதந்திரம்?
எது சுதந்திரம்!
இறுதி வரை சிறைப்பட்டே இருக்கிறோம்!
இன்றைய வாழ்வையே இழக்கிறோம்!
இந்த நிகழ்கால
நேரத்தை வெறுமனே கழிக்கிறோம்!
இங்கு எதுவும் சரி இல்லை என தவிக்கிறோம்!
மனதிலே இருக்கிறது!
நம் முதல் சுதந்திரம்!!
செயலிலே இருக்கிறது!
நம் முழு சுதந்திரம்!!
சுவையான வாழ்வை அளித்த இறைவனுக்கு,
சுமையாக இருக்கலாமோ!
சுற்றம் பலருக்கு கெடுதல் எண்ணலாமோ!?
சுத்தமான எண்ணமே
சுகம் தரும்!
சிறைப்பட்ட மனத்திற்கு விடுதலை அளியுங்கள்!
சுதந்திர பறவையாக சுற்றி வாருங்கள்!
பூலோகத்தில் சுதந்திரமாக!
ஏழு லோகத்திலும்
நிரந்திரமாக!!
சொல்வதில் இல்லை!
வாழ்வதில் இருக்கிறது
சுதந்திரம்!🤍✨
நல்ல எண்ணமே ஜெயம்!
நலம் அன்புடன்
ஆர்.கே.ராகுல்
சமூக கவிதைகள் | Social Quotes In Tamil














