சமூக கவிதைகள் | Social Quotes In Tamil
1

வீண் விரயம்
நாம் எல்லோரும் பணத்தை வீணாக விரயம் செய்வோம்,
நேரத்தையும் வீணாக விரயம் செய்கிறோம்!
ஏன் தோன்றுவதில்லை நமக்கு,
நாம் வாழ்க்கையே வீண் விரயம் செய்கிறோம் என்று!
இன்று போய் நாளை வரும்,
ஆனால் நம் வயது வருமா?☺
சமூக கவிதைகள் | Social Quotes In Tamil

வாழும் நாளில் வறுமையை எண்ணி வாடாமல்,
பெருமையை எண்ணி ஓடாமல்,
இருப்பதை இழந்து தேடாமல்,
மற்றவரை எப்போதும் நாடாமல்,
நோய் வந்து கெடாமல்,
ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள்,
ஒவ்வொருவருக்குள்ளும்
ஒரு உலகம் உண்டு!
உன்னில் மட்டுமே உண்மை உண்டு!!
இனியும் விரயம் வேண்டுமா?..
இழந்த வாழ்க்கை எண்ணி மீண்டுமா?
சமூக கவிதைகள் | Social Quotes In Tamil

உலகில் இல்லை உல்லாசம்,
உன்னுள் இருக்கிறது!
உயிர் உள்ளவரை நிலைக்கிறது!!
விரயம் உயிராக இருக்கும் வரை,
உல்லாசம் பயிராக இருக்கட்டும்!!
நாளும் இங்கு செழிக்கட்டும்!
நலமுடனே வாழ்க்கை செல்லட்டும்!!
நாடும் உன் பெயரை சொல்லட்டும்!
நன்மையே என்றும்
வாழ்க்கையில் வெல்லட்டும்!!
2
சமூக கவிதைகள் | Social Quotes In Tamil

மதுவால் மது!!
ஆம் அவன் ஏழை தான்
ஆனாலும் என் நண்பன்!
எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லை அவனிடம்!
என்னை தவிர!!
காசு எதும் கொடுக்கவில்லை அவனிடம்!
நட்பை பெற!
அன்பு ஒன்றை தவிர வேறு எந்த முதலீடும் இல்லை!
அதன் பிறகு என் நண்பனுக்கு வேறு யாரும் ஈடும் இல்லை!
எதார்த்தமாக சந்தித்தோம்!
எளிமையும், ஏழ்மையும் மட்டுமே இருவருக்கும் உள்ள சொத்து!
நினைத்ததை பேசினோம்,
கிடைத்ததை
பகிர்ந்தோம்!
வாழ்க்கை பயணத்தில் ஒன்றானோம்!
நானும் ஒரு பயணி!
அவனும் ஒரு பயணி!
தூரங்களை கணக்கிடவில்லை!
என்பதால் துயரங்களும் எங்களுக்கு இல்லை!
இதுதான் நட்பு என்பதறியாது,
பழகினோம்!
உயர்வு, தாழ்வு என்பது இல்லை!
எங்களுடைய உயரத்தை தவிர!
அவன் என்றால் அவ்வளவு பிரியம்!
அப்படிப்பட்ட அவன்!
அடிபட்டு கிடக்கையில்,
அதிர்ச்சி அடைந்து ஓடுகிறேன் அருகில்!
அவன் உடல் மட்டுமே அங்கிருந்தது!
உயிர் பிரிந்தது!!
💔💔
மது குடித்த
மது என்ற
என் நண்பனின் பிரிவால்!
என் உயிரும்
பிரிந்தது!
என் உடலும் சரிந்தது!
என் நண்பனிடமே!!
3
சமூக கவிதைகள் | Social Quotes In Tamil

குடிப்பழக்கம்
மது போதையில் மயங்கி திரியும் மனிதர்களே!
மனிதன் எனும் தகுதியை அல்லவா இழந்து விட்டீர்கள்!
அப்படி என்ன!? மதுவை குடித்து
நிம்மதியாய் இருந்து விட்டீர்கள்?
பிறருக்கு இடையூறாக அல்லவா வாழ்ந்து விட்டீர்கள்!
குடித்து விட்டு
காரில் மோதுவது,
மனைவி மற்றும் குழந்தைகளை
அடிப்பது,
சாலையில் செல்பவருடன் சண்டை இழுப்பது,
இப்படி சொல்லி கொண்டே போகலாம்!
ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் உங்களுக்கு,
சுய மரியாதை
சுத்தமாக இல்லை!
எத்தனை பேரின்
மன வேதனைக்கு நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள் என்று!
சமூக கவிதைகள் | Social Quotes In Tamil

மது உண்டால்
மதியும் மறத்து போகும்!
மனிதமும் மறந்து போகும்!
குடிகாரன் என்ற மகுடம் உனக்கு என்றால்,
அதில் மகிழ்ச்சி என்ன இருக்கு!?
ஏதும் நல்லது செய்து விட தான் முடியுமா!
நலமாக இருந்து விட தான் முடியுமா!
எதிர்மறையான எண்ணங்கள் ஆட்கொண்ட பிறகு
ஆண்டவன் கூட,
தெரியுமா கண்ணுக்கு!
கெடுதல் உன்னை மட்டும் சேர்ந்தது இல்லை,
இச்சமூகத்தையும்
சார்ந்தது!
சமூக கவிதைகள் | Social Quotes In Tamil

அளவுக்கு மீறி குடித்து அகில உலகத்தையா ஆண்டு விட்டாய்!
அதிவேகமாக அல்லவா மாண்டு விட்டாய்!
தீது என்று தெரிந்தும்,
தெவிட்டாமல் குடித்த நீ, இப்போது தீயில் அல்லவா வேகிறாய்!
உனக்கு இங்கு வாழ என்ன தகுதி இருக்கு!?
மனித நேயமே மறந்த உனக்கு மனித பிறவி எதற்கு!?
4
சமூக கவிதைகள் | Social Quotes In Tamil

ஏழைகளின் பசி!
பெரிதாக என்ன இருக்க போகிறது!
ஏழைகளுக்கு எதுவுமே பெரிதில்லை!
சாதாரணமாகவே சந்தோஷமாக வாழ முடியும் என்பதற்கு உதாரணம் ஏழைகள்!
வெயில் படாத கூடு!
மழையில் நனையாத
பாடு!
இப்படி ஒரு நிரந்தரமான வீடு!
ஆடம்பரம் என்று ஏதும் இல்லை அவர்கள் வாழ்வில்!
அத்தியாவசிய தேவை மட்டுமே
அவர்களின் பசி!
சமூக கவிதைகள் | Social Quotes In Tamil

உடுத்த உடை,
உண்ண உணவு,
இருக்க இடம் இருந்தால் போதும்!..
அதுவே அவர்களுக்கு இறைவன் அளிக்கும் விருந்து!
ஏழைகள் யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பதில்லை!
உழைப்பு ஒன்றே அவர்களின்
மூல தனம்!
எத்தனையோ திறமைகள் இங்கே மடித்து போகின்றன!
ஏழைகள் வேடம் எதும் போட தேவையில்லை!
இயல்பாகவே அவர்களிடம் ஏதும் இல்லை!
இருந்தும் இல்லாததை போல் வேடம் போடும்
அவசியம்
பணக்காரனுக்கு தான் தேவை!
பண முதலைகளே மனத்தால் ஏழைகள்!
பாவிகள் இருந்தால் என்ன!
மறைந்தால் என்ன!
வேசி அரசியல்,
வாதிகளுக்கு
தெரியுமா ஏழைகளின் பசி!!
வேடிக்கை மட்டுமே பார்க்கும் உலகிற்கு,
ஏழைகளின் வேதனை தான் புரியுமா?
எளிதாக எண்ண வேண்டாம் ஏழைகளை!
ஏழைகள் இருப்பதால் இயங்கி கொண்டிருக்கிறது இயல்பான வாழ்க்கை!
ஏழைகளின் உழைப்பே!
எதிர் வரும் காலத்தின்
பிழைப்பு!
ஏழைகளின் பசியை போக்கும் காலமே!
நம் பூமியின் பொற்காலம்!
வெகு தொலைவில் இல்லை வேதனை தீர!
ஏழைகளின் வாழ்க்கை மாற!!
5
சமூக கவிதைகள் | Social Quotes In Tamil

மாரடைப்பு
எதிர்பாராத நேரத்தில்,
எல்லையில்லா துன்பத்தை தரும் ஒரு கொடிய வலி!
இதயத்தில் பாயும் ரத்தம் எனும் நதியை தடுக்கும்!
உடனடியாக உயிரை கூட எடுக்கும்!!
வயதிற்கு வரம்பில்லை!
வந்து விட்டால்
வசதி இல்லை!
பாதிக்கப்பட்ட மக்களுக்கும்,
பணம் பறிக்கப்பட்ட மக்களுக்கும் தான் தெரியும் வேதனை!
வந்ததோ ஒரு முறை,
வெந்தததோ என் இதயம் பல முறை!
இல்லாத நிலையில் சொல்லாமல் வந்ததே மாரடைப்பு!
ஒரு நொடியில் நின்றிருக்கும் என் காவல் தெய்வத்தின் இதய துடிப்பு!
இருக்கின்றான் இறைவன் ஏழைகளின்
இதயங்களை காக்க!
இந்நோயில் இருந்து மீட்க!
சொந்தம் எல்லாம் வந்தது!
பாசம் எனும் பந்தத்தின் அர்த்தம் உணர்ந்து!
பார்க்கையிலே, கேட்கையிலே ஆனது என் இதயம் குளிர்ந்து!
நண்பன் இருக்கிறான்,
நாங்கள் நலம் காண துடிக்கிறான்!
என் உயிரில் கலக்கிறான்!
காகிதத்தில் எழுதி மாளாது அவன் காதலை!
தொலைவில் நான் இருந்து,
தொலைத்து விட்டேன் என்னை!
பணம் எனும் காகிதத்தை பெற,
இறந்த பின் கூட வாழலாமோ!
வெளிநாட்டில்!!
வெற்று இதயம் மட்டும் துடிக்கிறது!
மனம் வெற்றி பெற மட்டுமே நினைக்கிறது!!
என்னை போல் பல பேரை கரையேற்ற!
அனைவர் வாழ்விலும் ஆறுதல் எனும் விளக்கேற்ற!
விதியை மாற்ற!!
விடா முயற்சி தொடர்கிறது..
மாரடைப்புடனே…
நல்ல எண்ணமே ஜெயம்!
நலம் அன்புடன்
ஆர்.கே.ராகுல்
தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil














