தமிழ் கவிதைகள் - Kavithai.co.in
home முகப்பு favorite காதல் group நட்பு
---Advertisement---

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

Kavithai Author Avatar
எழுதியவர்: RK RAHUL
தேதி: October 7, 2026 5:58 PM
பகிர:
தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil
---Advertisement---

 

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

 

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

இன்னல்களில் இதயம்

மொத்த இன்னல்களையும் ஒத்த இதயம் அல்லவா!
தாங்குகிறது,

வழி தோறும் வேதனை என்றாலும்
இன்பத்திற்கு தானே ஏங்குகிறது,

எத்தனை தடைகள் வந்தாலும் எதிர்த்து நின்றால் தானே நீங்குகிறது!..

இத்தனையும் நினைவில் கொண்டும்,
அசதியில் தானே தூங்குகிறது!

எவ்வளவு நல்ல உள்ளம் கொண்டாலும்,
கெட்ட பெயர் தானே வாங்குகிறது!..

இதை நினைத்து கொண்டு தானே மனமே தேங்குகிறது!..

        தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

இன்னும் தானே துடிக்கிறது இதயம்!

இதை எண்ணியே
விடிகிறது உதயம்!.

மண்ணில் மடியும் வரை ஓய்வதில்லை! இந்த இன்னல்களிலும் இதயம்♥️

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

நன்றி கெட்ட மனிதன்

தேனும், தேளும் ஒரே மனத்தில்!

தேவை என்றாலே நம்மீது பார்வை!

நமக்கு பயன்படுவர்களை விட நம்மை பயன்படுத்துவர்களே அதிகம்!

செய்த உதவியை செய்த உடனே மறக்கும் கூட்டம்!

மட்டமான மனிதர் உலகம்!..

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

ஏனோ பிறவி எடுத்தேன்,
மனித ஜென்மம்!

சீக்கிரமே போகுமோ இந்த கருமம்!

காலை வாரும் கயவர் கூட்டம்!
கண்ணில் நீர் வடிய,
கெஞ்சும்!
நம் கண்ணிலும் கண்ணீரை காண!

துடைக்க ஒரு கரமும் வேண்டாம்!

காலம் தோறும் வேண்டாம் இவர்கள்!! நன்றி கெட்ட மனிதர்கள்!!

நட்பு எனும் சொல்லை கொச்சைப்படுத்தும்
நயவஞ்சகர்கள்!!

இறைவா இவர்களுடன் தான் வாழ வேண்டுமா?

இந்த பிறவி
வேண்டாமே இனியும்!! ☺

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

தொலைத்து விட்டேன்!

நான் நானாக இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!

திசை மாறி அலைந்து கொண்டு இருக்கிறேன்!

என்னுள் இருந்த திறமைகள் மறைந்து கிடக்கின்றன!

மறதிகள் என்னை ஆட்டிப் படைக்கின்றன!

கால ஓட்டத்தில் கால்களும் ஓடிக் கொண்டிருக்க!

கரைகளை கண்களும் தேடிக் கொண்டிருக்க!

கடல் அலைகளில் கனவுகளும் ஆடிக் கொண்டிருக்க!

கப்பல் வரும் வரை காத்திருக்காமல்,
கை இருக்கும் வரை நீந்திக் கொண்டிருக்கிறேன்!

வெறும் கை மட்டும் அல்ல! தன்னம்பிக்கையுடன்!

ஏனோ தெரியவில்லை உயிர் மட்டும் இன்னும் பிரியவில்லை!

என்னுடைய தூரம் எவ்வளவு என்பதை நான் அறியவில்லை!

போராட்டத்தின் எல்லை வரை
போய் தீருவேன்!!

இல்லையேல் போய் சேருவேன்!!

புன்னகையோடு!!

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

தோற்று! விட்டு திரும்பும் வலி

பல கனவுகளை,
கற்பனைகளை மனதில் விதைத்து!

வெற்றி தான் இன்று!
என்று நினைத்து!

நீண்ட கால வேதனை இன்றுடன் விடை பெற போகிறது!

விடா முயற்சிக்கு பலன் கிடைக்கும் என
நம்பிக்கையுடன் நடைபோட்டு!

பயிற்சியில் கலந்து!
பயம் தெளிந்து!
பாதி கிணறு தாண்டியும்,
மீதி கிணறு போதாமல்

பாறையிலே விழுந்த!
பாவி அல்லவா நான்!
என நிலை தடுமாறி!
நிம்மதி இழந்து!

கல் நெஞ்சம் என்பதால் கண்ணீர் கூட காணாமல்!

கவலையை சொல்ல கூட ஆள் இல்லாமல்!

நம்மையே வருத்தி,
தூக்கம் தொலைத்து,

தாய் இல்லாத குழந்தை தாய்ப்பாலுக்கு தவிக்கும் நிலையை விட கொடுமையானது!

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

தோற்று விட்டு திரும்பும் நிலை!

வெற்றிக்கு ஏங்கி!
தோல்வி பாரத்தை தாங்கி!

வெறுத்துப் போனதே இந்த வாழ்க்கை!

தோல்வியிலும் வெற்றி உண்டு என்பதை அறியாத வரையில்..!

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

ஒதுங்கிய நான்

எல்லோரும் வேண்டும் என்று என்று
எப்போதும் கூட இருந்தேன்!
ஏமாளியாக மட்டுமே தெரிந்தேன்!
அவர்களுக்கு!

ஒதுங்கியதால்
தான் தெரிகிறது நானும் ஓரங்கட்டபட்டவன்
என்று!

அவர்கள் ஒதுக்கவில்லை!
நான்
ஒதுங்கி விட்டேன்!

நான் தூரமாக வந்ததால் தான் என்றால்,
அவர்கள் மட்டும் என் நெஞ்சோரத்தில் என்றுமே நினைவில் இருப்பது ஏன்?

தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட உறவு!
தேடி வந்து அவமான படுத்தப்பட்ட நீண்ட கால நட்பு!

ஊரில் இல்லை என்பதால்,
நான் உயிரோடு இல்லை என்பதாகாது!

நான் இவ்வளவு தூரம் கடல் கடந்து வந்து,
அவர்களுக்கும் சேர்த்து தான் உழைத்து கொண்டிருக்கிறேன்!
என்பதை அறியாமலே
அருமையான நன்றியை
அளித்தமைக்கு
நன்றி!

என் அருமை தெரியாத இவர்கள்!
என்னுடன் இருந்தால் என்ன?
இல்லை என்றால் என்ன!
என் மதிப்பு எனக்கு தெரியும்!

நாளை நான்
உயர்ந்த பின்பு அனைவருக்கும் புரியும்!

நான் இனி தேடி செல்ல போவதில்லை!

என்னை தேடி வரும் அளவிற்கு
என் தகுதியை வளர்த்து கொள்ள போகிறேன்!

அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்!

எங்கு இருந்தாலும் நன்றாக இருக்கட்டும்!

எப்பொழுதும் முகத்தில் புன்னகை மலரட்டும்!

நாட்களும் நினைவிலேயே நகரட்டும்!

ஒதுங்கியே இருக்கிறேன்!

ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்த நான்!

அவர்கள் வீழ்ச்சிக்கு தான் தடையாக இருந்திருக்கிறேன்!
ஒருபோதும் வளர்ச்சிக்கு அல்ல!

அவர்கள் வளர்ச்சியை தவிர வேற எந்த எதிர்பார்ப்பும் அல்ல!

காயம் பட்டது!
கை விட்டது!

காலம் மற்றது!

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

ஒதுங்கிய நான்!
உயர்ந்த நிலையில் வருவேன்!
என்னை
ஒதுக்கிய உங்களின் வாழ்வை உயர்த்த!!

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

வெற்றிக்கான ஏக்கம்!

எல்லாவற்றிலும் வேண்டாம்!
எடுத்த முயற்சியில் ஆவது பெற வேண்டும் அல்லவா?
வெற்றி!

தாயின் பாலுக்கு ஏங்குகிற பிள்ளை போல்!

காய்ந்த பாலை வனத்தில் நீருக்கு ஏங்குகிற மனிதனை போல்!

வெற்றியின் தாகம் என்னை வாட்டி வதைக்கிறது!

தொடர் முயற்சி தான், ஆனால் தொடர் தோல்வி!

தோல்வி கவிதைகள் | Failure Quotes In Tamil

பண‌ம் ஒரு பக்கம் கரைந்தது!
மனம் ஒரு பக்கம் உடைந்தது!

நானும் கைவிடுவதாய் இல்லை!
தோல்வியும் என்னை விடுவதாய் இல்லை!

துரத்துகிறது சோகம்!
காரணம் காலமா?
என தெரியவில்லை!

பழியை நான் ஏற்றுக் கொள்கிறேன்!
பாதையை மாற்றுகிறேன் என்று
பணியை தொடர்ந்தேன்!

தூக்கம் துறந்தேன்!
துக்கம் மறந்தேன்!
ஓடி அலைந்தேன்!

ஓயாத இன்னல்களில்
ஓராயிரம் வலிகள்!

உதறிவிட்டு காரியத்தில் கண்ணாய் இருந்தேன்!

ஏனோ பதற்றம்!
எனை மீறி!
ஏமாற்றம் என்
மேல் ஏறி!

இறக்கி விட்டது குழியில்!
இருந்தாலும் இன்னும் நான் இறக்கவில்லை!! ☺

இனிதே தொடர்வேன் அடுத்த முயற்சியை!

வெற்றியின் ஏக்கத்தை போக்க!
வெற்றியின்
தாகம் தீர்க்க!

நல்ல எண்ணமே ஜெயம்!

நலம் அன்புடன்

ஆர்.கே.ராகுல்

                                         சோகக் கவிதைகள் | Sad Quotes In Tamil