சோகக் கவிதைகள் | Sad Quotes In Tamil
1
மீண்டும் மீண்டும்
தினம் தினம் வருகிறேன்,
வேதனையையே வாழ்க்கையாக தொடர்கிறேன்,
விதிகளின் பிழையா, நான் பிறந்ததன் பிழையா?
இல்லை இந்த இடம் வந்து சேர்ந்ததன் பிழையா!?
உண்மையான உழைப்பை உளமார கொடுத்தும், பெறுவது எனுமோ ஏமாற்றம் எனும் வெகுமதி தான்!
தொடர் கதையாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை,
தொலை தேசத்தில் அல்லவா உருவாக்கி இருக்கிறேன்,
உருகுகிறது மனம் மெழுகுவர்த்தியாக,
ஒரு நாள் வருவேன் சக்கரவர்த்தியாக!

சினம் எல்லாம் உள்ளுக்குள்ளேயே,
புதைக்கிறேன்,
நாள்தோறும் நம்பிக்கையே விதைக்கிறேன்,
என் நெஞ்சுக்குள்!
எதற்கும் தயாராக இருப்பதால் ஏறி மிதித்தாலும் தாங்கி கொண்டு தான் இருக்கிறேன்,
எதற்க்கும் ஒரு எல்லை உண்டு என்பதை நினைவில் கொண்டு!
ஒரு நாளும் தூங்காமல் ஓடிக் கொண்டிருக்கிறேன்,
உழைப்பை மட்டும் நாடி,
உடலே மெலிந்ததானது,
மனமே ரணமானது!
ஏற்றுக் கொள்ளும் குணமே, நிலையானது,
என் நிலை கண்டு எல்லாரும் ஏங்கும் வரையில்,
ஒழுங்காக உறங்காது என் விழிகள்!!
நீங்காது என் வலிகள்!!
விழும் போதெல்லாம் எழுகிறேன் மீண்டும்! மீண்டும்!!
2

உணராத வலி
தனக்கு ஏற்பட்டால் மட்டுமே துடிக்கிறோம், தவிக்கிறோம், வேதனையில் திளைக்கிறோம்!
மற்றவருக்கும் அதே வலி தான் என்பதை ஏன் மறக்கிறோம்?
நம் வீட்டில் நடந்தால் மிகப் பெரிய இழப்பாக நினைக்கிறோம்!
மற்ற வீட்டில் ஏதும் நடந்தால் அதை ஒரு செய்தியாகவே கேட்கிறோம்!!
எத்தனையோ துன்பங்களை கண் எதிரே பார்கிறோம்,
இருந்தும் கண்டும் காணாமல் செல்கிறோம் அல்லவா!?
ஏன் இப்படி என்றால்,
எல்லாம் சுய நலப்படி!
சொந்தம் என்றாலும் சொத்துக்காக சண்டை செய்கிறோம்!
சோகம் என்றாலும் சொந்ததிலே தான் உதவியை எதிர்பார்க்கிறோம்!
தன் வலி தான் மற்றவர்க்கும் என்பதை உணராத வரை,
என்றைக்குமே உணராத வலி தான்!
3

தேவை இல்லாத கற்பனை
வாழ்க்கையே தேடி செல்லும் பயணம் போல தான், கடைசி வரை
இதில் எதற்கு நாமாக ஒரு கற்பனை செய்து கொண்டு, மனதை வருத்திக் கொண்டு வாழ வேண்டும்!
இன்றைய நாளில்.
இன்றைய நிலையை
திருத்திக் கொண்டால் போதும்!

கற்பனைக்கு இடம் கொடுக்காமல், கடக்க வேண்டிய காலத்திற்கு, நடக்க வேண்டிய வேலைக்கு மனதில் இடம் கொடுங்கள்!!
யாதும் நிஜம்!
யாவரும் நலம்!

எதற்க்கும் தீர்ப்பு சொல்வதோ, தீர்மானிப்பதோ நாம் இல்லை, எதிர் வரும் காலம் தான்,
முடிவை முதலில் எடுக்காமல் முழுமையான முயற்சிகளை
முதலில்
எடுங்கள்,
முடிவு வரமாகும்!
முயற்சி சரியாகும்!
தீயதே இல்லை என்றால் நல்லதுக்கு மதிப்பு இல்லை,
இன்பத்தில் துன்பம்
துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி! அல்லவா!
வாழும் வாழ்க்கையே தேவை இல்லாத கற்பனையில் செல்ல வேண்டாம் என்று சொல்லவா!!
5

ஏமாற்றத்தின் தாக்கம்
ஏமாற்றபட்டு விட்டோமே என்று எண்ணி நமக்கு வருவது இல்லையே தூக்கம்!
நாளும் தொடர்கிறதே துக்கம்,
இதிலிருந்து மீண்டு வருவோமா என்ற ஏக்கம்!!
ஏதோ என்னால் முடிந்த ஒரு விளக்கம்!
யார் காரணம் என்பதே இங்கு மார்க்கம்!

எப்படி நிகழ்கிறது ஏமாற்றம், நாமாக மற்றவர் மீது வைக்கும் நம்பிக்கையின் விளைவாக!,
சில சந்தர்ப்ப சூழ்நிலையில், மறுக்க முடியாத நிலையாக,
ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மன நிலை,
பாதிக்கப்பட்ட நம்மிடம் இல்லை என்பதே இங்கு தீர்க்கம்!!

என்னை பொறுத்த வரையில், ஏதோ ஒரு நல்ல மாற்றத்திற்கான
முதல் நிலை தான் இந்த ஏமாற்றவே தவிர,
அதுவே முடிவு நிலை ஆகாது!
ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இருந்தால் ஏமாற்றத்தின் தாக்கம் தீரும்!
உங்கள் வாழ்க்கை எளிதாக இன்ப நிலைக்கு மாறும்!!
6

தோல்வி தந்த வலி
நாம் எல்லோரும் சொல்லலாம் தோல்வி நிரந்தரம் அல்ல என்று!
தோல்வியினால் ஏற்பட்ட வலியை குணப்படுத்தும் மருந்து வெற்றி மட்டுமே!
எதனால்? , எப்படி? , எங்கே? , இப்படியெல்லாம் சிந்தித்தால் தான் அடுத்த வெற்றியை சந்திக்க முடியும்!
பல இழப்புகளையும், துயரங்களையும், தியாகங்களையும் கடந்து தான் வர வேணும்,
இவற்றை தினமும் பெற்றாலும் திரும்ப வர வேணும்!
இழப்பதை பற்றி யோசனை செய்யாமல், இருப்பதை கொண்டு,
கிடைப்பதை நினைத்து நித்தமும்
தொடர வேணும்!

வருவதை ஏற்று!
வரப் போவதை மாற்று!
நேற்று முடிந்த கதை!
இன்று ஒன்றே உன் கையில்!
துணிந்து செல்!
வென்று சொல்!!
வெற்றி நமதே என்று!!
7

முதுமை
நமக்கு வர தாமதிப்பதால் தான், முதுமையுடைய தன்மை தெரியாமல் இருக்கிறது,
அனைவருக்கும் பொதுவாக விஷயம் என்னவென்றால் எல்லாருமே எந்த ஒரு சூழ்நிலையிலும் இயல்பாக இருப்பதே விரும்புவோம்,
அதுவே முதுமையிலும் அவர்கள் விரும்புவார்கள் அல்லவா!
நாளை நமக்கும் முதுமை வராமலா போகிட போகிறது!
முதுமையானவர்கள் என்றால் சலிப்பானவர்கள் போல் ஆகி விட்டதோ இந்த சமூகத்தில்!!
தன்னுடைய வாழ்க்கை சூழ்நிலைகளை கடந்து,
பல்வேறான விஷயங்களை அறிந்து,
அனுபவத்தின் மூலமாக அனைத்தையும் உணர்ந்து,
உயரிய பண்பு கொண்டு பேராசைகளை துறந்து,
நிம்மதியை மட்டுமே விரும்பும் பேரமைதியான பருவம்!

எளிதாக எண்ணக்கூடாது எல்லாவற்றையும்,
கடந்து தானே செல்ல வேண்டும் சிலவற்றையும்!!
வந்து விடும் முன்னே வாழ்ந்து விட வேண்டும்!
முதுமை என்னும் முக்கியமான பருவம்!
தெய்வத்திரு உருவம்!!
பேரன்புமிக்க முதுமை பருவம்!
நல்ல எண்ணமே ஜெயம்!
நலம் அன்புடன்
ஆர்.கே.ராகுல்





