இயற்கை கவிதைகள் |Nature Quotes In Tamil

ஜன்னல்
ஜன்னல் வழி பயணங்களே இனிமையான நினைவுகளை சேகரிக்க வைக்கின்றன,
வான் முகில் வண்ணம்
வழியெங்கும் தெரிய,
விழிகளின் ஊடே அதனை இன்னமும் தேட,
மனமோ எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சி அலை பாய,
இந்த கணம் இப்படியே தொடராத என ஏங்க,
நிலவு ஒளியில், இயற்கை எழில் சூழ்ந்த அழகை ரசிக்க,
நட்சத்திரங்களை தொட்டு விட முடியாதா என்று தவிக்க,
செல்லும் பாதை
செம்மையாக அல்லவா இருக்கும்!
இறங்கும் இடம் வந்தவுடன் இருக்கையை விட்டு இறங்க மனம்? வரவில்லையே!!
நான் வந்த பேருந்தில்!!
திரும்ப திரும்ப வர வேணும்,
தீராத இன்பம் பெற வேணும்,
திகட்டாத பயணம் தொடர வேணும்!!
ஜன்னல் எனும் அற்புதத்தின் வழியாக!!
2

ஆற்றங்கரை
காணவே கண்கள் துடிக்கும்!
அங்கு செல்ல
கால்கள் தானாகவே நடக்கும்!
காவிரியாய் காட்சி அளிக்கும்!
எங்கள் ஊரே அங்கு சென்று தான் குளிக்கும்!
பச்சை வண்ண தண்ணீர் பசுமையுடன் பார்வை தோறும்
தோன்றும்!
மரமெல்லாம் மலர் சிந்தும், வழியெல்லாம் வாசம் எங்கும் வீசும்!
இயற்கையே இறைவனாக அருகில் வந்து பேசும்!!
பரவசத்தில் மனமெல்லாம்
மெய் மறந்து,
தேகமெல்லாம் தென்றல் தவழ்ந்து,
உடலோ குளிர்ந்து, உள்ளம் மகிழ்ந்து
உற்சாகத்தில் திளைக்கும்!!
ஊருடன் உறவாடும், உன்னதமான இடமல்லவா அது!
இனியும் தொடருமா!
ஆற்றங்கரை
இன்ப வெள்ளத்தில்,
தாமரை மலருமா?
ஆற்றங்கரையில்!!
3

துளிர்
இனி அவ்வளவு தான் என்று நினைக்கும் போதே வெளி வருகிறது வெட்டப்பட்ட இடத்தில் இருந்து துளிர்!
வெகு காலம் தாமதித்தாலும், முன்பை விட செழிப்பாக,
முடிந்த இடத்தில் இருந்தே தொடங்குகிறது!
மழை என்னும் பன்னீர் ஊற்றி,
சூரியனின் ஒளியில் பசுமையாக பிரகாசிக்கும்
இலையை விட்டு நிமிர்ந்து பார்க்கும் துளிர்!
ஓரேடியாக வெட்டினாலும் ஓயாமல்
ஓங்கி வளர்ந்த துளிர்!
எந்த நிலையிலும் எழுந்து நிற்கும் துளிர்!
நம்பிக்கை எனும்
மன துளிர்!
மரம் எனும்
இலை துளிர்!!
வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது,
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது!
மண்ணிலும்
மனதிலும்!..
மகிழ்ச்சி எனும் அற்புத துளிர்!!
4

பௌர்ணமி
அழகாய்! நிலவாய்!
வானில் ஒரு வெண்மதி!
வெள்ளியால் வரைந்த ஓவியம்!
வெண் மேகத்தின் இடையில் மின்னும் ஒளி உருவம்!
வெள்ளையான அழகில் என்றும் கொள்ளை போகிறதே
என் மனம்!
வானில் வந்த வான்மதி!
உன்னை பார்த்தால் தானே நாள்தோறும்
எனக்கு நிம்மதி!
வெள்ளி கிண்ணமாய் வானில் நீ இருக்க!
வந்து விடு தினமும் என் வாழ்வு சிறக்க!
உன்னை காண ஒருவன் இங்கு தவிக்க!
வரும் தோறும் அவன் பார்த்து ரசிக்க!
மாதத்தில் ஒரு முறை முழுதாய் நீ!
இனி மீதத்தில் பல முறை தேடுதே!
என் கண்கள்!!
வானில் வந்த தேவதையை,
என் வாழ்வில் வந்த பௌணர்மியை!!
5

வண்ணத்துப்பூச்சி
ஓர் அமைதியான இடத்தில் அற்புதமான இயற்கை சூழ்நிலையில்,
அழகாக பறந்து திரிந்ததது வண்ணத்துப்பூச்சி!
அதை அன்பாக பார்த்து மகிழ்ந்தது
என் எண்ணத்து காட்சி!!
வண்ணத்துடன் வானில் பறக்கையில்,
அதனுடனே பயணம் செய்ய தோன்றும் என் மனம்!
அது பூச்சியே என்றாலும், சுதந்திரமான காற்றுடன் உலவி திரிவதற்கு அற்புதமான சாட்சி அல்லவா!!
அது என் எதிரே பறந்து செல்லும் போதெல்லாம், என்னை மறந்து அல்லவா செல்கிறேன்!!
அதன் இறகில் இன்பம்,
அதன் பிரிவில் துன்பம்!
இயற்கை படைப்பில் எத்தனை வண்ணம்!
இதமான இரவில் கூட என் கண் எதிரே மின்னும்!
ஆசை தான் எனக்கு அதனுடன் சேர்ந்தோட!
ஓடினேன்! என் மன வானில் வண்ணத்துப்பூச்சி உடன்!!
6

சூரிய உதயம்
நம்மால் நேரடியாக பார்த்து கண்டு ரசிக்க கூடிய திவ்யமான தெய்வம்!
நாள்தோறும் நம்மை தேடி வரும் அற்புத உறவு!
காலத்தை கணக்கிட உதவும் கடிகாரம்!
உலகத்துக்கே வெளிச்சம் தரும் ஒளி!
இயற்கையின் இலவச மின்சாரம்!
உயிரினங்களின் வாழ்வை நிர்ணயிக்கும் உன்னதமான கோள்!
அதிகாலையில் எழுந்து உலகத்திற்கே முன்னோடியாக விளங்கும் விண்ணின் அதிசயம்!!
ஆழ்கடலின் மேல் அலைகளின் நடுவே தோன்றும் ஓய்வறியா ஒளி விளக்கு!!
கண்ணை பறிக்கும் பரவசம்!
காலத்துக்கும் வாழும் நவரசம்!!
உலகை ஒளியால் ஆழும் அரசன்!
கண் கொள்ளா காட்சியாக ஒவ்வொரு காலையும் பார்த்து ரசிக்கும் தெய்வ தரிசனம்!
இயற்கை படைப்பில் எழில் மிகுந்த ஈடில்லா வரம்!
என் வாழ்வில் வசந்தமாக வரும்!
சூரிய🌞 உதயம்
7

இசை
இனிப்பான உணர்வு செவிக்கு!
எந்நாளும் தேவை இந்த புவிக்கு!
திறந்த பூட்டிற்கு சாவி எதற்கு!
பறந்த மனதிற்கு பாரம் எதற்கு!
தாலாட்ட இசை!
தமிழுக்கு
தாயான இசை!
8

ஒத்த மரம்
ஓங்கி வளர்ந்த மரம்!,
ஓரமாய் ஒதுங்கிய மரம்!
தென்றல் தவழ்ந்து
செல்லும் தனி மரம்!
பறவைக்கோ அது அழகான வீடு!
தொலைவில்
இருந்து பார்த்தால்,
பழுத்ததோ பல பழங்கள்,
வெடித்தததோ!
பஞ்சு!
வெடிகள்!
பஞ்சும் தான் பயன்படுகிறது,
பல்வேறு இடங்களில்!
இன்னும் வெட்ட படாததால்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது!
மனிதன் எனும் தீயவனை பிரிந்து!
தண்ணீர் ஊற்ற யாரும் வர தேவையில்லை!
வெந்நீர் ஊற்றாமல் இருந்தாலே போதும்!!
ஒத்த மரம் வளரும் ஒய்யாரமாக!!
நல்ல எண்ணமே ஜெயம்!!
நலம் அன்புடன்
ஆர்.கே.ராகுல்



