தமிழ் கவிதைகள் - Kavithai.co.in
home முகப்பு favorite காதல் group நட்பு
---Advertisement---

தன்னம்பிக்கை கவிதைகள் | Motivational Quotes In Tamil

Kavithai Author Avatar
எழுதியவர்: RK RAHUL
தேதி: October 25, 2026 8:55 PM
பகிர:
---Advertisement---

தன்னம்பிக்கை கவிதைகள் | Motivational Quotes In Tamil

1

தன்னம்பிக்கை கவிதைகள் Motivational Quotes In Tamil

ஒப்பிட்டு பார்த்து வாழ்வது!

ஒன்றை மற்றும் உறுதியாக சொல்லி கொள்ள விரும்புகிறேன்,

ஒவ்வொருவரின் வாழ்க்கை சூழ்நிலைகளும் வேறு வேறானது,

அனைவரின் வாழ்க்கையும் ஒன்றல்ல என்பதை உணர்ந்து,

அவரது வாழ்க்கையை ஆராயாமல் உங்களின் பயணத்தின் மீதும், உங்களின் மீதும் கவனத்தை செல்லுங்கள்,

மற்றவரை பற்றி எளிதில் முடிவுக்கு வராதீர்கள்,

அனைவரிடத்திலும் அக்கறை கொள்ளவில்லை என்றாலும் கூட பரவா இல்லை,

அகம்பாவம் பிடித்து தூக்கி எறியாதீர்கள்,

சக மனிதனுக்கு மதிப்பளியுங்கள்,

மன்னிக்க கற்றுக் கொண்டு மனித நேயத்துடன் வாழ பழகுங்கள்!

பிறகு பாருங்கள் கோபம் வருவதே காணாமல் போய் விடும்,

பாவம் பெறுவதே இல்லாமல் போய் விடும்,

காயங்கள் கூட மாயமாய் போய் விடும்,

மற்றவர்களிடம் எதாவது காரியத்திற்காக தேடாமல், அவர் வெற்றிக்கான காரணத்தை தேடுங்கள்!!

ஒப்பிட்டு பார்ப்பது ஒற்றுமை ஆகாது!

ஒப்பிடுவது என்றால் உங்களை நீங்களே ஒப்பிட்டு கொள்ளுங்கள்,

பிறகு புரியும் நம் செயல்களும், சிந்தனைகளும்!

ஒப்பிடுவதும் ஒரு ஒவ்வாமையே!!

2

தன்னம்பிக்கை கவிதைகள் | Motivational Quotes In Tamil 

தன்னம்பிக்கை கவிதைகள் Motivational Quotes In Tamil

தூரத்தில் வெளிச்சம்

இருளில் இருந்தால் வெளிச்சத்தின் அருமை தெரியும்,

சோகம் எனும் சொந்த இருளில்,

கோவம் எனும் மந்த இருளில்,

பாவம் எனும் பந்த இருளில்,

சிக்கிக் கொண்டு அமைதி எனும் ஆகாச சூரியனை அல்லவா மறைக்கிறோம்!..

நகர்ந்து செல்ல கால்கள் இருந்தும்,
கடந்து செல்ல
காலம் இருந்தும்,

கவலையை அல்லவா சுமக்கிறோம்!

லட்சியம் எனும் ஒளியை காண இருளை வென்றாக வேண்டும்,

தூரத்தில் தெரியும் வெளிச்சத்தை வந்தாக வேண்டும்!

3

தன்னம்பிக்கை கவிதைகள் | Motivational Quotes In Tamil 

தன்னம்பிக்கை கவிதைகள் Motivational Quotes In Tamil

பக்குவம்

பலம் இருந்தும் பலன் இல்லாமல் போனாலும்,

பலரால் மனமுடைந்து போனாலும்,

வாதம் செய்ய வாய்ப்பு இருந்தும்,

வார்த்தை அதனை அளவறிந்து,

வாழ்வு அதனை நன்கு உணர்ந்து,

அன்பு அதனை
நினைவில் கலந்து,

தீயதை அதனை
அற மறந்து,

தென்னந் தெளிவான நீர் போல,

தெய்வம் தந்த மலர் போல,

அனைத்து நிலையிலும் அமைதியாய் இருந்து,

பேராசைகளை அற துறந்து,

இதயம் எனும் இன்பக்கோவிலை திறந்து பார்க்க வேண்டும்!!

பக்குவம்🧘‍♂️ எனும் சாவி🔑 கொண்டு!!

4

தன்னம்பிக்கை கவிதைகள் | Motivational Quotes In Tamil 

தன்னம்பிக்கை கவிதைகள் Motivational Quotes In Tamil

கிணற்று தவளை

கண் இருந்தும் குருடு போல்,
வழி இருந்தும் போகாமல்,
வசதி இருந்தும்
வாழாமல்,

வாய்ப்பு இருந்தும்
உபயோகிக்காமல்,

காலம் எல்லாம் கழித்து கொண்டிருக்கிறோம்!

கால்கள் நிற்பதற்கு மட்டும் அல்ல,

நடப்பதற்கும் தான் என்று நினைவில் கொள்ளாமல்!!

தவித்து வரும் நமக்கு ஏனோ புரிவதில்லை!

தயாராகவே இருக்கிறது அடுத்த நாள்!

தடைகளை தகர்த்து செல்ல வேண்டியதில்லை!

தாண்டி சென்றால் போதும்!

தகுதியான இடம் தனிமையாக காத்திருக்கிறது உங்களுக்காக!

தங்கத்திற்கு இருக்கிற மதிப்பு,
தங்களுக்கு இருக்கிறதா?

எண்ணி பாருங்கள்!

உங்கள் தகுதியை நீங்கள் தீர்மானியுங்கள்!

தங்கத்தின் தரத்தை விட, தங்களின் தரம் உயர்வாகவே இருக்கும்,

நிரந்தரமாக!!

கிணற்றை சுற்றி வர, எல்லாராலும் முடியும்!

உலகை சுற்றி வர உங்களால் மட்டுமே முடியும்!..

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

மனிதா உன் வாழ்க்கையில் அனைத்தும் சாத்தியமே!

கிணற்று தவளையாக இல்லாமல்,

உலகை சுற்றும் பறவையாக இருங்கள்!

வந்தது வாழ்வதற்கே!!

5

தன்னம்பிக்கை கவிதைகள் | Motivational Quotes In Tamil 

தன்னம்பிக்கை கவிதைகள் Motivational Quotes In Tamil

நேசியுங்கள்

நீங்கள் வேண்டுமேனால் என்னை நேசிக்க யோசிக்கலாம்,

நான் என்றும் நேசித்து கொண்டு தான் இருக்கிறேன், உங்களையும், இந்த உலகத்தையும்!!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை பயணத்தில் பயணித்து கொண்டு இருக்கிறோம்!

நேரங்கள் நாம் நினைப்பதை விட வேகமாக கடந்து செல்லும்!

அது போல தான் சில நிகழ்வுகளும், காயம் பட்ட பிறகு தானே மருந்தை தேடுகிறோம்!

காரணம் இன்றி எதுவும் நடப்பதில்லை,
காரணம் புரிய வேண்டும் என்றால்
காத்திருப்பதே தீர்வு!

தினம் தினம் தேர்வு தான் நமக்கு!

வினா தெரியாமலேயே விடை கிடைக்கிறது!

அண்டம் முழுதும் அன்பால் தான் இயங்கி கொண்டு இருக்கிறது!

ஆயுள் முழுதும் அன்பாக வாழ பழகி அனைத்தையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்!

ஆனந்தம் பெருகும் இவ்வுலகத்தில் இருந்து விடை பெறும் வரையில்…

6

தன்னம்பிக்கை கவிதைகள் | Motivational Quotes In Tamil 

தன்னம்பிக்கை கவிதைகள் Motivational Quotes In Tamil

தொடர்ச்சி

முடிவில்லா துன்பத்திற்கு
முயற்சி தானே பயிற்சி!

நம்மை மீறி சில விஷயங்கள் வாழ்வில் தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது!

நாமும் வெற்றியை துரத்தி ஓடிக் கொண்டு தானே இருக்கிறோம்!.

இழப்புகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது!

விழுந்தாலும் உடனே எழுந்து நின்று, எதிர்த்து போராடி கொண்டு தானே செல்கிறோம்!

தன்னை வருத்தி, தகுதியை உயர்த்தி,
தலைமுறையை
சீர் திருத்தி,
காலத்தை கடத்தி வாழ்ந்தாலும்,
காரியம் கை கூடும் வரை,
முயற்சி தொடர்ச்சியாக!!
முடிவில்
வளர்ச்சியாக!!

வரும் தலைமுறை
மலர்ச்சியாக!!

7

தன்னம்பிக்கை கவிதைகள் | Motivational Quotes In Tamil 

தன்னம்பிக்கை கவிதைகள் Motivational Quotes In Tamil

ஒவ்வொரு நாளும்!

இந்த உலக வாழ்வில், ஒவ்வொரு நாளும் ஒரு பு‌திய அனுபவங்கள்!

சில இன்பங்களாக,
சில துன்பங்களாக!

இடத்திற்கு இடம்,
வேறுபட்டு கொண்டே இருக்கின்றன!

மனம் எதிலும் நிலைக்காமல்,
ஒரு முடிவு அறியாமல் தடுமாறி கொண்டே
இருக்கிறது!

இங்கு எல்லாருக்கும் இல்லாததை பற்றியே கவலை அதிகம்!

எதாவது ஒன்றை எண்ணி எண்ணி தவிக்கிறது மனம்!

நிலையில்லா வாழ்வில்,
நாமே பல ஆசைகளை
வளர்த்து கொண்டு
ஆனந்தம் இல்லாமல் அல்லல் படுகிறோம்!

அன்பிற்கு அடைக்கலம் தேடுகிறோம்!

அளவுக்கு மீறி நடந்து கொண்டு,
வரம்புக்கு மீறி வரும் பிர‌ச்சனை‌களை சமாளிக்க முடியாமல் தவிக்கிறோம்!

ஒவ்வொரு நாளையும்!
ஒரு மனதாக
ஏற்றுக் கொண்டு!
கிடைக்கும் அனுபவங்களை பெற்றுக் கொண்டு!

மகிழ்ச்சியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு,

மனம் திறந்து வாழ்ந்தாலே ஒவ்வொரு நாளும் சொர்க்கம் தான்!

நல்ல எண்ணமே ஜெயம்!

நலம் அன்புடன்

ஆர்.கே.ராகுல்

தமிழ் கவிதைகள் | Tamil Kavithai

  • தமிழ் Quotes
  • Motivational Quotes in Tamil
  • Motivational Status in Tamil
  • Motivation Kavithai in Tamil
  • தமிழ் மோட்டிவேஷனல் கவிதைகள்
  • தன்னம்பிக்கை கவிதைகள்