திருமணநாள் வாழ்த்து கவிதைகள் | Wedding Day Kavithai

1

நாம் இருவரும் இணைந்த,
இந்த இனிய நாளை எண்ணி
மகிழ்ச்சியாக கொண்டாட திருமண நாள் வாழ்த்துகள்.
மாலை சூடி மகிழ்ந்த நாளை நினைத்து, வாழ்வில் கூடி,
இனிமையாக வாழ,
இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
இறைவன் அருளால் நீண்ட ஆயுளும் நிறைய செல்வமும் பெற்று பல்லாண்டு காலம் சேர்ந்து வாழ இனிய திருமணநாள் வாழ்த்துகள்.
சகல சௌபாக்கியங்களையும்,
சகல ஐஸ்வர்யங்களையும்,
பெற்று வாழ இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
இணை பிரியாமல்,
இன்புற்று வாழ்ந்து,
எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
கோடி புண்ணியம் செய்ததால் தான்,
ஜோடி சேர்ந்தோம்,
தேடி வந்த தேவதையே இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
பெரியோர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு பெரு வாழ்வு வாழ இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
இன்னும் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது நம் கெட்டி மேள சத்தம்,
நித்தம் என் வாழ்வின் இன்னிசையாக,
இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
திருமணநாள் வாழ்த்து கவிதைகள் | Wedding Day Kavithai In Tamil
உன் ஒற்றை விரல் பிடிக்கையிலே,
என் உச்சி தான் குளிர்ந்ததடி!
உனை மணந்த பின்னே,
என் வாழ்வு தானே
மலர்ந்ததடி!! இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
உனக்கு மாலையிட்டு எத்தனை வருடங்கள் ஆனாலும்,
இறைவன் ஆணைப்படி உனை காப்பேன் உயிராக, இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
மூணு முடிச்சு இட்டு உனை மணந்தேன்!,
முழு வாழ்வையும் என்னுடைய முடிக்க வந்த தேவதையே இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
பிறந்த வீட்டை விட்டு,
புகுந்த வீடு தேடி வந்த
மாமயிலே!
மனம் கோணாமல் உனை அரவணைப்பேன் ஆயுள்
முழுதும் அன்பே!, இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
திருமணநாள் வாழ்த்து கவிதைகள் | Wedding Day Kavithai
மல்லிகை சூடி வந்த
மல்லிகை கொடியே,
மகிழ்ச்சி தேடி வந்த,
மானிட கிளியே!
இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
புதிதாய் இணைந்த தம்பதியினருக்கு
புத்துணர்ச்சியான திருமண நாள் வாழ்த்துகள்.
இருவரும் உடல் மட்டும் அல்லாமல், உள்ளமும் இணைந்து,
வாழ்வின் ரகசியம் உணர்ந்து,
நீடுழி வாழ இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
திருமணநாள் வாழ்த்து கவிதைகள் | Wedding Day Kavithai In Tamil
ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து,
வளர்க்கும் குழந்தையை
தட்டி கொடுத்து,
வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்,
இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
எங்கிருந்தோ வந்தது ஒரு புது சொந்தம்,
எந்நாளும் தந்தது ஒரு இன்பம்!
என்னவளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
இந்த அழகிய பயணத்தில்,
பாசத்துடனும்,
பக்தியுடனும்,
இருந்து இனிமையாக வாழ,
இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
உலகறிய, ஊர் அறிய நடந்தது நம் திருமணம்,
வானும் வாழ்த்து சொன்னது மழை வழியாக!
பாலும், தேனும் கலந்தது
புது சுவை நிறைந்தது என் வாழ்வில்!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
அனைவரும் கூடி
அட்சதை தூவி,
ஆசிர்வதிக்க,
ஆராவாரமாய்,
அரங்கேறிய வைபவம் தான்
நம் கல்யாணம், இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
அன்பான வழியில்,
அடைக்கலம் புகுந்தாய்
பண்பான வழியில்
பணிவிடை செய்கிறாய்,
என் ஆருயிரே இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
திருமணநாள் வாழ்த்து கவிதைகள் | Wedding Day Kavithai In Tamil
வானும் மண்ணும்
கட்டிக்கொண்டது போல்,
நானும் நீயும் ஒட்டிக்கொண்டோம்!
இனி பிரிவேது நம் உறவில்!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
என் முழு வாழ்வும்
உன்னுடன் தான்,
என் வீட்டு பௌர்ணமி நிலவே!
பாரிஜாத மலரே!
பைங்கிளி அழகே!
இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
ஆபரணங்கள் மீது,
ஆசையே இல்லை எனக்கு!
தங்கமாக,
வைரமாக,
வைட்டூரியமாக,
நீ ஜொலிப்பதால்!
என் ஆபரணமே நீ தானடி!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
பார் கடலில் கடைந்து,
எடுத்த அமுதமே!
உனை காணும் பாக்கியம்,
கிடைத்ததே அனுதினமுமே!
உனை எனக்கு அளித்த
ஆண்டவனுக்கு நன்றி!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
அழகே உருவாய் பிறந்தவளே,
அன்பே கருவாய் வளர்ந்தவளே,
ஆசையாய் எனை மணந்தவளே,
இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
தினம் காலையில்,
உன் முகம் பார்த்து எழுகிறேன்,
உன் விழி பார்த்து மகிழ்கிறேன்!
உனை மணம் புரிந்த,
நாள் முதல் மகிழ்ச்சியே!,
என் கண்மணி! இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
தினம் வேண்டிக்கொள்கிறேன் இறைவனை, என்னவளின்,
ஆயுளை என்னை விட
அதிகமாக கொடு என்று!
அன்பான மனைவியே
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
ஓயாமல் ஓடி ஓடி,
வேலை செய்கிறாய் வீட்டில்!
ஒய்வறியா உடலை
ஒரு நாளைக்கு ஓய்வு கொடு,
நான் பார்த்துக்கொள்கிறேன்!
என் விடுமுறை நாளில்!
இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள்.
மாதம் மாதம் வரும்,
மாதவிடாய் காலங்களில் கூட,
கண் கலங்காமல்
செய்யும் காரியத்தில் கண்ணாய் இருக்கிறாய்!
உனை வாழ்நாள் முழுதும்,
கண் கலங்காமல்
பார்த்துக்கொள்கிறேன் அன்பே!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
திருமணநாள் வாழ்த்து கவிதைகள் | Wedding Day Kavithai In Tamil
எவ்வளவு தொலைவில் நான் இருந்தாலும், உன் நினைவின் அருகிலே நான் வாழ்கிறேன்!
வந்து விடுகிறேன் சீக்கிரமே!
என் செல்ல கிளியே,
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
இருவரின் புகைப்படத்தை
பார்த்து பார்த்து மகிழ்ந்தேன்,
நாம் ஒன்று சேர,
எத்தனை வருடங்கள்
தவம் இருந்தோம் என்று!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
உன் உதட்டுல்
புன்னகை மட்டுமே,
நான் காண வேண்டும்,
அதற்காகவே அதிக ஆயுள் வேண்டும்!
புன்னகை அரசிக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள்.
உன் கல்யாண பட்டு புடவையை,
கண்களில் ஒற்றிக்கொண்டேன்!
காலம் முழுதும்
என் கண்ணீரை துடைக்கும் என்று!
நம் பந்தம் என்றும் நிலைக்கும் என்று!
இனிய கல்யாண நாள் வாழ்த்துகள்.
இருவரும் இணைந்து,
அனைவருக்கும் எடுத்துக்காட்டான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகாட்டுவோம்,
ஆரோக்கியமாகவும், அற்புதகமாகவும் வாழ்வோம்! இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
சோகத்தில் தவித்த எனக்கு,
சுகத்தை அளித்த, சொக்க தங்கமே!
நீ இருக்கும் வரை சொர்க்கம் தான் எனக்கு என் வாழ்வில்,
இன்புற்று இருக்கிறேன்
நம் திருமண நாளில்!!
இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
இரத்தம் வெவ்வேறு என்றாலும்,
என்னுயிரில் கலந்து உறவே!,
என் வாழ்வை பகிர்ந்த வரவே!
இறைவன் அளித்த வரமே,
இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.
நல்ல எண்ணமே ஜெயம்!
நலம் அன்புடன்
ஆர்.கே.ராகுல்
பிறந்தநாள் வாழ்த்துகள் | Happy Birthday Wishes In Tamil
Tags
•திருமணநாள் வாழ்த்து கவிதைகள்
•Wedding Day Kavithai in Tamil
•திருமண நாள் வாழ்த்துகள்
•திருமண நாள் கவிதைகள்
•Wedding Anniversary Wishes in Tamil
•காதல் திருமண வாழ்த்துகள்














