அப்பா கவிதை | Appa Kavithai In Tamil

1
தான் ஏழையாக இருந்தாலும்,
தன் பிள்ளையை வறுமை
தெரியாமல் வளர்ப்பவர்
அப்பா!
தன் பாசத்தை வெளிகாட்டி கொள்ளாமல்,
செல்லமான கோபத்தில்
கண்டிப்புடன் வளர்பவர்
அப்பா!
ஒரு வேகம்
ஒரு வீரம்
ஒரு விவேகத்தை
காணலாம் அப்பாவிடம்!,
ஒரு போதும் பொய்யான
வேஷத்தை காண முடியாது!
அப்பா கவிதை | Appa Kavithai In Tamil

நேர்மறையான சிந்தனை,
ஒழுக்கம்,சமுதாய நோக்கு,
வயதை தாண்டிய அனுபவம்
கொண்டு,
வாழ்வதில் ஒரு துணிவு கொண்டு
வாழ்க்கை பாடத்தை
கற்பிப்பவர் அப்பா!
அப்பா இல்லாத பிள்ளைகள்,
குடும்ப பாரத்தை சுமந்து,
தனது சுய ஆசைகளை
துறந்து வாழ்கிறார்கள்
அப்பா ஸ்தானத்தில்!!
தன் வலியை கடைசி வரை
காட்டிக் கொள்வதே இல்லை
அப்பா!
அப்பாவின் கண்ணீர் துளிக்கு
எந்த கங்கை தீர்த்தமும்
ஈடாகாது.
அப்பா இல்லாத அம்மாக்களின்
வாழ்க்கை சமுதாயத்தில்
கேள்விக்குறியே!
ஆயுசுக்கும் மகன்களை,மகள்களை
தன் தோளில் சுமப்பவர் அப்பா!
எல்லாவற்றையும் சுமந்து சுமந்து,
சோகம் மறந்து,கடைசியில்
சுமை தாங்கி
ஆனார் அப்பா!
தன் குடும்பத்தை
பாதுகாக்கும் காவல்
தெய்வம் அப்பா!
எத்தனை ஏமாற்றங்களை
சந்தித்தாலும்,
சலைப்பதில்லை
அப்பா!
எதிலும் சாதிக்காமல்
அப்பா செய்த தியாகத்தால்
தான் பிள்ளைகள்
இன்று சாதிக்கிறது!
அப்பா கவிதை | Appa Kavithai In Tamil
கரடு முரடான பாதையில்
கடின வாழ்வில்,
கலங்காமல்
போராடுபவர் அப்பா!
குழந்தை தனத்தை,
குழந்தையிடம் மட்டுமல்ல, அப்பாவிடமும் காணலாம்!
குழந்தையுடன் விளையாடும் போது!
அவரும் குழந்தை ஆகிறார்
அப்பா!
அப்பா என்ற உறவில் உள்ள
ஆணிடம் இருக்கும் போது மட்டுமே
பாதுகாப்பாய் உணர்கிறாள்
மகள்!
வீம்பாக இருந்தே பழகி விட்டார் அப்பா!
வம்பு செய்தே பழகி விட்டேன் நான்,
இப்போது அடிப்பதே இல்லை அப்பா!
இருந்தாலும் அதை விட அதிகமாக
வலிக்கிறது எனக்கு!
அப்பாவின் அன்பு கானல்
நீர் போல,
தூரத்தில் இருந்து பார்க்கும் போது
தான் தெரியும்!
அப்பா இல்லாத வாழ்க்கை
ஆணிவேர் இல்லாத
மரத்திற்கு சமம்!
ஒரு மகளின் சுதந்திரம்
அப்பாவிடம் மட்டுமே உள்ளது!
ஒரு மகளின் அன்பும்
அதிகமாகவே உள்ளது
அப்பாவிடம்!!
தலைவர் வரிசையில்
அப்பாவிற்கே முதல் இடம்!
ஒரு ஆணின் மரியாதை
அவன் அப்பா ஆன
பின்பே அதிகரிக்கிறது!
முறுக்கு மீசை வைப்பதில்
சாமியாகவும்,
சின்ன மீசை வைப்பதில்
சாதுவாகவும்,
மீசையை எடுத்தவுடன்
வில்லனாக தெரிபவர்
அப்பா!
நம் முகவரி அப்பாவின்
முதல் வரியில் இருந்து
தொடங்குகிறது!
நம் அடையாளம் அப்பா!
வீட்டில் அம்மா குரல் என்றால்,
வெளியில் அப்பா குரல் தான்,
அதிகம் ஒலிக்கிறது!
அப்பா கவிதை | Appa Kavithai In Tamil

அப்பாவின் காய்ச்சி போன கைகளில்
காயங்கள் மட்டுமல்ல!
நம்முடைய கனவுகளும்
அடங்கியிருக்கிறது.
வாழ்க்கை சுமையே என்றாலும்
சோர்ந்து விடுவதில்லை அப்பா!
ஓட்டை செருப்பில் எத்தனை தையல்கள்!
தேய்ந்த செருப்பு போல்
அப்பாவின் வாழ்க்கைகையும்
தேய்ந்து தான் போனதோ!?
அப்பாவின் உறவுகள் அவரை ஏமாற்றியதால்,
பல இரவுகள் தூங்குவதில்லை
அப்பா!
தப்பு செய்யாமலே தண்டனை
அனுவிப்பவர் அப்பா!
ஓய்வதே இல்லை
அப்பாவின் கால்களும்
அப்பாவின் காயங்களும்!!
ஒப்வொரு குடும்பத்திலும் தூணாக
இருந்து, பொருளாதார தேவைகளை
பூர்த்தி செய்யும் புண்ணியவான்
அப்பா!
அப்பா கவிதை | Appa Kavithai In Tamil
தன் மகனுக்கு நல்லதோர் வழிகாட்டியாகவும்,
உற்ற தோழனாகவும் இருந்து
வாழ்க்கையின் முன்னேற்ற பாதைக்கு
அழைத்து வரும் ஒப்பற்ற உயிர்
அப்பா!
எத்தனையோ அப்பாக்கள்
தன் குடும்பத்தின் கஷ்டம் உணர்ந்து, குடும்பத்தை பிரிந்து,
உழைத்து, சுகம் தொலைத்து,
சோகம் தழைத்து,
தன்னுடைய வாழ்வை தியாகம் செய்யும் தியாகிகள் ஆகவே
வாழ்ந்து வருகின்றனர்!
தன்னுடைய தலைமுறை வாழ
தன்னையே அர்ப்பணிக்கும்
ஜீவன் அப்பா!
அப்பாவுக்கு பெரும்பாலும்,
சொத்து பெரிதாக
இருந்து விடுவதில்லை
தன் பிள்ளைகளையே
அவர் சொத்தாக எண்ணுவதால்!!
அப்பா கவிதை | Appa Kavithai In Tamil
ஒவ்வொரு வீட்டில்
பிள்ளைகள் வக்கீல் என்றாலும்
நீதிபதி எனுமோ அப்பா தான்!
பிள்ளையுடைய எதிர்கால வாழ்க்கைக்காக
தன்னுடைய நிகழ்கால
வாழ்க்கையை இழக்கும்
இறைவன் அப்பா!
ஆசையே படுவதில்லை!
அப்பா ஆன பிறகு!
அப்பாவின் வியர்வை துளிகள்
தான் நம்முடைய கண்ணீர் துளிகளை
தடுக்கின்றன!
ஏழ்மையும் எளிமையுமாய்
இருந்த அப்பாவுக்கு
வலிமைக்கு மட்டும் குறைவே இல்லை!
உளி தாங்கிய சிலை போல்
வலி தாங்கிய மனிதன் அப்பா!!
இறைவன் மன்னிப்பதே இல்லை,
அப்பாவை மட்டும்
மரணிக்கும் வரை!
ஆலயம் வரை அலைய தேவையில்லை,
அப்பா அருகில் இருந்தால்,
அவரையே முதலில் வணங்குவாய்!
அவரின் வலிகளை உணர்ந்து இருந்தால்!
அவர் பாதையை கடந்து இருந்தால்!!
அப்பாவின் அதிகபட்ச சேமிப்பு
அவர் பெற்ற பிள்ளைகள்
மட்டுமே!
அப்பாவை அரவணைப்பதும் பிள்ளைகள் தான்,
அனாதை இல்லத்தில் சேர்ப்பதும்
பிள்ளைகள் தான்,
எதிர் வரும் காலத்தின்
கையில் தான் எல்லாம்!
உறவுகள் தொடர் கதை,
அதில் அப்பா,
உறவு மட்டும் அல்ல!
நம்மை காக்கும் உயிர்!
வெள்ளை உள்ளம் கொண்ட அப்பா,
தொல்லையாகவே தெரிகிறார்,
சில பிள்ளைகளுக்கு!
அங்கே சுதந்திரம்,
பறிக்கப்படவில்லை,
பாதுகாக்கப்படுகிறது!
சுத்தம் சோறு போடும்
என்று சொல்லி கொடுத்தது
அப்பா!
இன்று வரை தன் உழைப்பில்
சோறு போடுவதும் அப்பா தான்!
அப்பா கவிதை | Appa Kavithai In Tamil
ஆகாசத்தையும்
ஆண்டவனையும்
கண்டு ரசித்தேன்
சிறு வயதில் உன் தோள்
மீது ஏறி!
எனை கரையேற்றவே
உன் காலம் முழுதும்
கரைந்து விட்டன!
இன்று
ஆகாசமாகவும்,
ஆண்டவனாகவும்,
நீ மாறி விட்டாய்!!
என் வாழ்வில்!
உனை விட உயர்ந்தோர் உண்டோ!?
என் வாழ்வில்!
அப்பா!
நீ கையில் எடுத்த மண்வெட்டி,
என் வாழ்வில் பேனா!
நீ சுமந்த நெல் மூட்டை,
என் வாழ்வில் புத்தகம்!
நீ போட்ட விதை,
என் வாழ்வில் கல்வி!
கற்றுக்கொண்டேன்!
கல்வியை மட்டும் அல்ல,
வாழ்வியலையும்,
வாழ்வின்
வழிமுறைகளையும்!
வளர்ப்பின் நெறிமுறைகளையும்,
அப்பாவிடம்!!
பேரன்பும்,
பெரும் கோபமும்
கொண்டவர் அப்பா!
அப்பா நீ மீண்டும் ஒரு முறை
பிறக்க வேண்டும்,
என் மகனாக!
என் மணிமுத்தே!
என் சீனி கரும்பே அப்பா!
அப்பா பிள்ளைகள்
பாசத்தில் மட்டும் அல்ல!
பண்பிலும் உயர்ந்தவர்கள்!!
அப்பா நீ நீண்ட ஆயுளும் நிறைய செல்வமும் பெற்று பெரு வாழ்வு வாழ
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!
நல்ல எண்ணமே ஜெயம்!
நலம் அன்புடன்
ஆர்.கே.ராகுல்














