தமிழ் கவிதைகள் - Kavithai.co.in
home முகப்பு favorite காதல் group நட்பு
---Advertisement---

ஹைக்கூ கவிதைகள் | Haiku Kavithai In Tamil

Kavithai Author Avatar
எழுதியவர்: RK RAHUL
தேதி: October 13, 2026 3:53 AM
பகிர:
---Advertisement---

 

ஹைக்கூ கவிதைகள் | Haiku Kavithai In Tamil

ஹைக்கூ கவிதைகள் Haiku Kavithai in Tamil

1

எனக்காக விரதம் இருக்கும்
ஒருத்திக்கு என் காதலை தவிர வேறு என்ன பரிசை தந்து விட முடியும்!?

2
ஆயுள் முழுதும் அவளுக்காக
நான்!!

3
என் வாழ்வுக்கு வர்ணம் தீட்டிய வண்ணத்துபூச்சி!
என் இருளுக்கு ஒளி காட்டிய மின்மினி பூச்சி!அவள்!!

                               4

என் உடை நெய்த பட்டுபூச்சி!
என் இதழ் கொய்த தேன்பூச்சி!
அவள்!!
என் காரிகை அவள்!

5
இசை இல்லாமலே இனிக்கிறது அவளின் பேச்சு!
அவள் இமை அசைவிலேயே துடிக்கிறது என் இதயம்!

6
அவள் என்னுடனே இருந்து விட்டால் இசையும் இதயமும் என்னுடனே!!
என்றென்றும்!!

7
இரு உதடும் ரோஜா இதழ்!
இரு கண்களும் மாயஜால மலர்!
ஈர்த்து விட்டால் அவள்!

8
என்னுயிரில் கலந்து
ஈருயிராய் இணைந்து விட்டால் அவள்!!

9
எட்டு மாதங்கள் தாயின் வயிற்றிலும்,
இருப்பத்து எட்டு வருடங்கள் தாயின் அருகிலும் இருந்து விட்டால் அவள்!!

10
இப்போது பிரிய போகிறாள் அவள்!
இன்னொரு தாயாக அவளும் மாற!
தாயும்!! மகளும்!!
பிரியா விடை பெறுகிறாள்!!
கல்யாணத்து அன்று!!

ஹைக்கூ கவிதைகள் | Haiku Kavithai In tamil

ஹைக்கூ கவிதைகள் Haiku Kavithai In tamil

11
சோகத்திலும் சுகம் காண
பழகிக் கொண்டால்,
சொர்க்கத்திலும் இடம் காண முடியும்!

12

வலியிலும் வழி காண முடியும்!
வாழ்விலும் வரம் காண முடியும்!!

13
ஏதோ ஒரு படபடப்பு!
ஒரு பரபரப்பு!
ஒரு பரிதவிப்பு!
அன்றாடம் இருக்க தான் செய்கிறது!

14
சில நேரமும் இழக்க தான் செய்கிறது!
எல்லோருடைய வாழ்விலும் உள்ள எதார்த்தம் தான் இது!!

15
கண்ணீரிலே நனைந்த கடிதத்தில்,
என்ன கதை எழுதி விட முடியும் கண்ணீரையும் தாண்டி!!
ஈரம் தானே பாரம்!!
16
ஏமாறுவதை நிறுத்திக்கொண்டேன்!
ஏமாற்றியவர்களும் நிறுத்திக்கொண்டார்கள்!
பேச்சையும், மூச்சையும்!

17
இனி என் தேவை அவர்களுக்கு இல்லை,
இனி என் தேடலும் அவர்களிடம் இல்லை!!

18
துள்ளி துள்ளி விளையாடிய குளத்தை நினைத்து, இன்னமும் துள்ளிக்கொண்டிருக்கிறது என் மனம்!

19
தொலைதூரம் வந்து,
தொலைந்து விட்டேன்,
கடற்கரையில்!!

20
இறக்கும் வரை, உடன் இருப்பவர்களை,
யார் கண்ணுக்கும் தெரிவதில்லை!
அவர்களை காலத்திற்க்கும் புரிந்து கொள்வதும் இல்லை,,

ஹைக்கூ கவிதைகள் | Haiku Kavithai In Tamil

ஹைக்கூ கவிதைகள் Haiku Kavithai In tamil

21
இல்லை என்பதிலேயே இன்னமும் இருக்கிறது ஒரு அர்த்தம்!!

22
வருந்திக்கொண்டே இருந்தால் எப்போது வாழ்வது!
நாம் திருந்திக் கொள்ளும் கணமே
மீள்வது

23

மருந்துண்டு மனதிற்கு!
விருந்துண்டு குணத்திற்கு!
24
காலத்தோடு கடந்து செல்ல பழகு!
வலி வந்தால் வாடாதே,
வசதி வந்தால் ஆடாதே!

25
அனைத்தும் அடங்கும் மரணம் என்னும் என்னிடம்!!
26
வலி நிறைந்த உலகிற்கு வழி தேடி செல்லும் பயணம் தான் வாழ்க்கை!

27
வாழ்ந்து மறைவது எளிது,
மறைந்தாலும் பிறர் மனதில் வாழ்வதே அரிது!

28
ஊரில் ஒருவர்க்கு ஒருவர் இல்லாத ஒற்றுமை,
ஒருவனை ஒதுக்கி வைப்பதில் இருப்பதை கண்டு மகிழ்கிறேன்!

29

ஒதுக்கி வைப்பதை நினைத்து மட்டும் அல்ல!
அந்த ஒருவனாக நான் இருப்பதை எண்ணி!

30
எனக்காக பிறந்தவளே,
எனக்காக வளர்ந்தவளே,
என் முன் வந்தவளே!!

ஹைக்கூ கவிதைகள் | Haiku Kavithai In Tamil

ஹைக்கூ கவிதைகள் Haiku Kavithai In Tamil

31
என் நெஞ்சை தொட்டவளே,
என் அன்பை வென்றவளே,
என் காதலை பெற்றவளே!!

32
என் விரதத்தை கலைத்தவளே!
என்றும் நீயே என் வழி துணை!!

33
உறங்கும் முன்னே விழிக்கிறேன்,
விடியலை நோக்கி அல்ல,
விதியை நோக்கி!!

34
மரணமே வந்தாலும் மலரும் என் புன்னகை என் முகத்தில்!

35

நினைவு தெரிந்த நாள் முதல் யாருக்காகவும் ஏங்கியதில்லை!
ஏன் என்னை உன் இதய கூட்டிலே சிறையிட்டாய்!

36
தினம் தினம் தேடுகிறேன் உன்னை,
நித்தமும் வாடுகிறேன் பெண்ணே!

37
வந்து தருவாயா தரிசனம்,
சென்று விடாமல் ஒரு கணம்!
இதற்கு தான் ஏங்குதே என் மனம்!

38

சிந்திய வியர்வை எல்லாம்,
பிந்தைய உயர்வை அடையும் என நம்புவதால், நகர்ந்து கொண்டே இருக்கிறேன்!

39
இரும்பாகி போன இதயம்,
இமயம் தொடும் வரை துடிக்கும்!
இறைவன் துணையோடு!!

40

எல்லா நேரங்களிலும் எதிர்பார்க்கிறேன் உன்னை என்னருகில்!
ஏனென்று தெரியவில்லை, என் சூழ்நிலை இவ்வளவு தொலைவில்!!

ஹைக்கூ கவிதைகள் | Haiku Kavithai In Tamilஹைக்கூ கவிதைகள் Haiku Kavithai In Tamil

41
எங்கிருந்தாலும் வருவேன்,
உன்னருகில்!

உன்னோடு உல்லாசமாக உலா வருவேன் உலகில்!

42

தினம் தினம் தேடுகிறேன்!
உன்னில் தொலைத்த என்னை!!

43

எவ்வளவு இன்னல்களை பெற்றாலும்,
வேதனைகளை சந்தித்தாலும்,
இன்னமும் மனம் தளராமல் சிரிக்கிறேன் என்றால்,
சிந்திக்கிறேன் என்றே அர்த்தம்!

44
வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய எனக்கு நானே வித்திட்ட விதைகள் அவை!

45
இனியும் ஏற்றுக்கொள்வேன் வலியையும் ஏமாற்றத்தையும்,
பிரிவையும் துரோகங்களையும்,
ஏனென்றால் இவை யாவையும் இனி வரும் காலத்தில் நான் கண்டு அஞ்சக்கூடாது என்பதால்!

46

என்றுமே !
தன்னம்பிக்கையில் தொடர்கிறது
என் வாழ்க்கை பயணம்!!

47
பொருளாதார ரீதியாக தான்,
சொந்தம் வரும், பந்த பாசம் வரும் என்றால், வரவே தேவையில்லை!
ஊரும், உறவும்!

48
உணர்வில்லாத இடத்தில் உரிமை எதற்கு!!

49
இறந்த பின்பு வரும் அனுதாபம்,
உயிருடன் இருக்கும் போது எங்கே போனது!

50
இது பாசமா!
பரிதாபமா?
பரிதவிப்பா!?
பட்டு போன மரத்திற்கு,
பன்னீர் எதற்கு!!

ஹைக்கூ கவிதைகள் | Haiku Kavithai In Tamil

ஹைக்கூ கவிதைகள் Haiku Kavithai In Tamil

51
அன்றைக்கு பூத்த பன்னீர் பூ வாசனையை,
இன்னமும் நுகர்கிறேன்!
நினைவலைகளில்!

52
எப்போதும்,
நிழலாகவே தொடர்கிறது,
நினைவுகளும், கனவுகளும் என்னுள்!!

53

வரவேற்கவும் வாசல் வந்தேன்,
வழியனுப்பவும் வாசல் சென்றேன்!
என் மாமனை!

   54
வாசலையே பார்த்திருக்கிறேன்!
காலமெல்லாம் காத்திருக்கிறேன்,
இறந்து போன என் மாமனை,
மீண்டும் காண கண்ணீருடன்!!

நல்ல எண்ணமே ஜெயம்!

நலம் அன்புடன்

ஆர்.கே.ராகுல்

    தமிழ் கவிதைகள் | Tamil Kavithai

  • Haiku Kavithai in Tamil
  •  சிறந்த ஹைக்கூ கவிதைகள்
  •  தமிழ் குறுங்கவிதைகள்
  •  ஹைக்கூ கவிதைகள் | Haiku Kavithai In Tamil
  •  ஹைக்கூ கவிதைகள் தமிழில்