வாழ்க்கை தத்துவங்கள் | Life Quotes
1

எது சரி! எது தவறு?
சாதாரணமாக முடிவு செய்கிறோம், எதையும் ஆராயாமலே, நம்முடைய சொந்த கருத்துக்களை வைத்து குறைவாக மதிப்பிடுகிறோம்!
இங்கு சரி, தவறு என்று எதும் இல்லை, எல்லாம் அவரவர் சூழ்நிலைகளின் அடிப்படையில் மாறுபடுகிறது,
கோணங்கள் மாறுபடுவது போல் அவரவர் கொள்கைகளும் வேறுபடுகிறது, இந்த மனித சமுதாயத்தில்!,
எல்லா தவறுக்குள்ளும் ஒரு சரி உண்டு,
எல்லா சரிக்குள்ளும் ஒரு தவறு உண்டு,
இங்கு தீர்க்கமான முடிவு என்னவென்றால் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருப்பது சரி,
ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில் தவறு என ஒத்துக் கொள்ள முடியுமே தவிர,
முடிவுக்கு வர முடியாது!
சரி! தவறு!? அது முடிவல்ல!!
ஒரு தொடர் கதை!!
2
வாழ்க்கை தத்துவங்கள் | Life Quotes

நிமிராத தலை
ஆண்டாண்டு காலமாக நிமிர்ந்து நடந்த நம் முன்னோர்களின் தலை சிறந்த பாரம்பரியத்தில்,
இன்று ஏனோ? நிமிர மறுக்கிறது நம் தலை,
செல்போன் எனும் பெருந்தலையின் விளைவாக!!
எதிரில் வருவது கூட கவனிக்க வழியில்லாமல் விழியில் பாய்ந்து கொண்டு இருக்குறது மொபைல் திரை!
அருகில் இருப்பவர்களை கூட அன்னாந்து பார்ப்பதில்லை!
அதனுள் அப்படிப்பட்ட அவசியமான ஒன்றும் பெரிதாக இருப்பதில்லை!
மனிதனின் மாய பிம்பங்கள் தான் ஒளிந்து கிடக்கின்றன,
உண்மையான உயிருள்ள மனிதர்கள் உன் அருகில் அல்லவா வாழ்கின்றனர்!
ஆம் ஒரு நொடியில் எதுவும் செய்யலாம், வேகமான வளர்ச்சி தான், இல்லை என்று கூறி விட முடியாது,.
ஆனால் இதுவே தொடர்ச்சியானால் சக மனிதர்களின் உணர்வை கூட உணரமால் அல்லவா போய் விடுவோம்!
உயிர் இருந்தும் உயிரற்ற உடலாகவே இருக்கிறது,
உன்னுள் செல்போன் எனும் அலைக்கதிர் ஊடுருவும் போதெல்லாம்!!
சிந்தனை என்ற ஒன்றுக்கு ஏற்பட்ட சிறை அல்லவா!,
செல்போன்!
சாதனை என்ற ஒன்றிற்கு தடை அல்லவா!,
செல்போன்!
வேதனை என்ற ஒன்றிற்கு விடை அல்லவா!,
செல்போன்!!
நிமிராத தலைக்கு நிஜமான காரணம் அல்லவா!
செல்போன்!!
3
வாழ்க்கை தத்துவங்கள் | Life Quotes

வெற்றிகரமான நாளை எண்ணி!
பல நாட்களுக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருந்து!
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலே தொடர் முயற்சிகள் எல்லாம் தோல்விகளே!
இருப்பினும் இந்த முயற்சி ஓயவில்லை!
ஒரு நாள் எனக்கு சாதகமாக அமைந்தால்!
வரும் நாள் எல்லாம் வசந்த காலமே!
போராட்ட களத்தில் போரிட்டு கொண்டு தான் இருக்கிறேன்!
நாளை வருவேன்!
நாளை வெல்வேன்!
மன வேதனைக்கு மருந்து கிடைக்கும் என நம்புகிறேன்!
பொறுமையை பேராயுதமாக எண்ணுகிறேன்!
திறமையை நிரூபிக்க வேண்டுகிறேன்!
அடர்ந்த இருளில் அழியாத ஒளியை தேடுகிறேன்!
இழந்த பணத்திற்கு ஈடுகட்ட முயல்கிறேன்!
இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு!
நாளை நடைபோடுகிறேன்!
வெற்றிகரமான நாளை எண்ணி!
4
வாழ்க்கை தத்துவங்கள் | Life Quotes

தொடரும் முயற்சி!
கையில் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே!
மனதில்
எத்தனையோ தடைகள், தோல்விகள், இழப்புகள்!
உழைத்து உழைத்து!
இளைத்து இளைத்து!
சம்பாதித்த செல்வம் எல்லாம்,
என்னுடைய கையாலே!
என்னுடைய தவறாலே!
என் முன்னேயே
இழந்தேன்!
என்னுடைய பலவீனம் எது! என்பதனை அறிந்தேன்!
என்னுடைய
பலம் எது!
என்பதை உணர்ந்தேன்!
இடைவிடாது முயற்சியை தொடர்ந்தேன்!
பயம் அல்ல, பதட்டம்!
தெரிந்தே செய்த தவறு!
கவனச்சிதறல்!
அலட்சியம்!
மறதி!
தெளிவின்மை!
அதிர்ஷ்டத்தை நம்புவது!
சத்து அற்ற
உடல் நிலை!
சந்தேகமான மனநிலை!
சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே போதாது!
மனதிலும் ஒன்றுபட்டு, செயலிலும் ஈடுபட்டு,
செவ்வனே செய்யும் காரியமே கை கூடும்!
இல்லையேல்
கை விடும்!
விடா முயற்சி!
விடை பெறும் முயற்சி அல்ல!
விடை தேடும் முயற்சி!
தீராத வேதனையில்!
தாங்காத சோதனையில்!
தொடரும் என் முயற்சி!
மூச்சு உள்ளவரை முயல்வேன்!
அது எவ்வளவு நாள் ஆனாலும் வெல்வேன்!!
வெற்றியை நாள்தோறும் மனதிலே மெல்வேன்!
வாழ்ந்து காட்டி செயலில் ஊருக்கே
சொல்வேன்!!
5
வாழ்க்கை தத்துவங்கள் | Life Quotes

மன வளம்
மனிதன் மனிதனாக வாழ வேண்டியதற்கு அவசியம் மன வளம்!
இன்றைய கால கட்டத்தில், எல்லோருக்கும் மன அழுத்தம் அதிகமாகவே உள்ளது!
சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் வருந்தி கொண்டிருப்பது!
பொழுது போக்கிற்காக மட்டும் வாழ்வது!
சுய நலமாக வாழ்வது!
எல்லாம் தனக்கு தான் என்று ஆசை கொள்வது!
மற்றவரை மட்டுமே பார்த்து பொறாமை கொள்வது!
எல்லோரையும் நம்பி ஏமாறுவது!
உறவுகளில் புரிதல் இல்லாமல் பிரிதல் ஏற்படுவது!
தனக்கு மட்டும் என்று ஒரு நியாயம் வைத்து கொள்வது!
தெரிந்தே தவறுகளை செய்வது!..
தேவையே இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது!
ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாமல் இருப்பது!
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் காரணங்களை!
ஆனால் இவை அனைத்திற்கும் தீர்வு
அன்பான மனம்!
அற்புதமான குணம்!
ஆராய்ந்து அறிய கூடிய மன வளம்!
சுய சிந்தனைகளை,
லட்சியங்களை சமுதாயத்தை,
குறிக்கோள்களை,
மனதில் கொண்டு
நம்மை நாமே சரி செய்து!
நேர்மறையான எண்ணங்களை மனதில் விதைத்து!
நாள்தோறும் நல்ல செயல்களை, பழக்க வழக்கங்களை வளர்த்து!
பண வளத்தை மட்டுமே தேடி அலையாமல்!
அனைத்திற்கும் ஆணிவேரான மன வளத்தை மேம்படுத்துங்கள்!!
மண்ணில்
வாழும் நாட்கள் சொர்க்கமே!!
மனம் தான்
ஆக்க சக்தி!
மன வளம் தான்
அறிவான பக்தி!
நல்ல எண்ணமே ஜெயம்!
நலம் அன்புடன்
ஆர்.கே.ராகுல்
வாழ்க்கை கவிதைகள் | Life Quotes In Tamil














