காலை வணக்கம் கவிதைகள் |
Good Morning Kavithai

1
காலை வணக்கம் கவிதைகள் |
Good Morning Kavithai

நிலவு உறங்கி,
சூரியன் விழிக்கும் நேரம்!
சோம்பல் முறித்து,
சுறுப்பாக நாளை
தொடங்குவோம்!
இனிய காலை வணக்கம்!
2
பறவை சிறகை விரித்து,
இரை தேடி,
இன்பமாக வானில் வட்டமிடும்!,
சீக்கிரமே உணவை முடிக்க
திட்டமிடும்!
நாமும் ஆவோம் பறவையாக!
இனிய காலை வணக்கம்!
3
கவலைகள் எல்லாம்,
கனவு போல் கலைத்து
புதிய நாளை நினைத்து
புத்துணர்ச்சியுடன் பயணத்தை
தொடங்குவோம்!
இனிய காலை வணக்கம்!
4
புதிய பயணத்தை
தொடங்க இறைவன் அளித்த பரிசு,
இந்த இனிய காலை பொழுது,
இனிதே இயங்குவோம்!
இனிய காலை வணக்கம்!
5
இறைவன் அளித்த நன்கொடை
இயற்கை!
இதயம் அளித்த நன்கொடை
இன்று!
இனிதே எழுவோம்!
இனிய காலை வணக்கம்!
6
அமைதி யில் ஒரு தீ
ஆத்திரத்தில் ஒரு தீ
ஆகாரத்தில் ஒரு தீ
அனைத்தையும் எரிய வைத்து,
அச்சமில்லா பயணத்தை தொடங்குவோம்!
இனிய காலை வணக்கம்!
காலை வணக்கம் கவிதைகள் |
Good Morning Kavithai

7
தூக்கம் எனும் தற்காலிக சாவில் இருந்து எழுந்து,
சாவியை தேடி திறங்கள் கதவை!
தெரியும் கதிரவன் அளித்த
ஒளி திரை,
வழி நிறைய உங்களுக்காக!
இனிய காலை வணக்கம்!
8
பட்சிகள் பறந்து கூச்சலிடும்,
குதூகலமாக,
பனித்துளி இறங்கி கொண்டிருக்கும்
குளிர்ச்சியாக,
பூவில் இறங்கி, புல்லுக்கு தாவி
பூமியில் இறங்கும்!
இதை கண்டவுடன் கண்கள்
எங்கே உறங்கும்!
விழித்தெழு! நண்பா!
இனிய காலை வணக்கம்!
9
ஒவ்வொரு காலையும் ஒரு வாய்ப்பு,
ஒவ்வொரு மாலையும் ஒரு தீர்ப்பு!
ஓடுவதில் தான் ஒரு உயிர்ப்பு!
உணர்ந்திடு நண்பா!
இனிய காலை வணக்கம்!
10
பச்சை வர்ணம் தான் இந்த பூமி
பார்த்தால் தானே புலப்படும்
கண்ணுக்கு!
பாதையும்!
பசுமையும்!
பார்த்திடு நண்பா!
இனிய காலை வணக்கம்!
11
விழுவதில் அதிருப்தி என்றாலும்,
எழுவதில் தானே ஆனந்தம்!
ஆரம்பம் ஆகட்டும்!
இன்றைய பொழுது!
இனிய காலை வணக்கம்!
12
பூ வாசம் புறப்படும்,
பூமி எங்கும்!
மண் வாசம் வீசும்
வீடு எங்கும்!,
இன்பமே வந்து தங்கும்!
நீ எழுந்தால்!
இனிய காலை வணக்கம்!!
13
உறக்கம் போதும்,
உற்சாகமாக உள்ளங்கையை
பார்த்து விழி!
புது வழி பிறந்திடும்!
உன் வலி பறந்திடும்!
இனிய காலை வணக்கம்!
காலை வணக்கம் கவிதைகள் |
Good Morning Kavithai
14
விழுந்து அழுவதில் என்ன பயன்?
துணிந்து எழுவதில் தான் பலன்!
இனிய காலை வணக்கம்!
15
ஒவ்வொரு காலையும்
ஒரு இன்ப வேளையே!
கதிரவனுக்கு இல்லை இடைவேளை!
காட்சியை காண கண்
விழித்தெழுங்கள்!
இனிய காலை வணக்கம்!
16
வயல் வெளியில்,
குளிர் தென்றல்!
புல் வெளியில்
மெல்லிய ஸ்பரிசம்!
மேல் பார்த்தால்
மேக கூட்டம்!
குழந்தை சிரிப்பு சிரிக்கிறது!
மழலை சூரியன்!
நாமும் தொடங்குவோம்!
இந்நாளை புன்னகையுடன்!
இனிய காலை வணக்கம்!
17
சூரிய உதயத்திற்கு முன் எழுந்து,
குளிர் நீரில் நீராடி,
நின் கண்களை சூரியனில்
நிலைநிறுத்தி,
சூரிய நமஸ்காரம் செய்து,
கூரிய அறிவு பெற்று,
சீரிய ஆரோக்கியம் பெற்று,
வாழ்வோம்!
இனிய காலை வணக்கம்!
18
புது விதை தூவுவோம்!
புது கவிதை எழுதுவோம்!
புது கதை சொல்வோம்!
இனிய காலையில்!
இன்பமான வணக்கம்!
19
துயரங்கள் விலகி,
புதிய உயரங்களை அடைய
பொன்னான காலை வணக்கம்!
20
புது பொலிவு முகத்தில்
தெரியட்டும்,
புது புன்னகை முகத்தில்
மலரட்டும்!
புதுமை புலப்படட்டும்!
இனிய காலை வணக்கம்!
காலை வணக்கம் கவிதைகள் |
Good Morning Kavithai
21
மொட்டு மலர தவிக்கிறது,
சூரிய ஒளி பட்டு,
பூவாக மலர்ந்த மொட்டு,
புன்னகையிட்டு சிரிக்கிறது!
புது வானம் பார்த்து
வாழ்கிறது! பூ அழகாக!
இனிய காலை வணக்கம்!
22
புல் பூண்டு பட்சிகள்
புத்துயிர் பெற்று
புதிய நாளை வரவேற்கிறது!
இனிய காலை வணக்கம்!
23
தேனி கூட்டம் தேடி அலைகிறது,
பூக்களின் தேனை எடுக்க,
புது தேன் வாசம்
பூமியில் சிறக்க!
மனிதனின் சுவை மொட்டு சுவைக்க
காத்திருக்கிறது!,
தேனடையாக மாறும் வரை!
திவ்ய காலை வணக்கம்!
24
கந்த சஷ்டி கவசமும்,
சுப்ரபாதமும்,
சிவ நாமமும்
செல்லம் கொஞ்சி ஒலிக்கிறது,
இன்னிசையாக!
சின்ன காதில் சிங்கார நாதம்
பிறக்கிறது!
இனிய காலை வணக்கம்!
25
வாசல் படி இறங்கி வந்து,
நீர் தெளித்து,
பக்குவமாக பெருக்கி,
மனதை உருக்கி,
புது கோலம் வடித்து,
வர்ணம் இட்டு ரசிக்கும்,
வீட்டுப் பெண்களால்
நம் மனமும் கொள்ளை
போகிறது,
பார்த்த மாத்திரத்தில்!
இனிய காலை வணக்கம்!
26
இன்று வெற்றி நம் வசம்!,
இன்று உள்ளம் மகிழும்
நம் மனம்!,
என்றெண்ணி
எழுந்து வாருங்கள்!
இனிய காலை வணக்கம்!
காலை வணக்கம் கவிதைகள் |
Good Morning Kavithai
27
மகிழ்ச்சியாக நாளை தொடங்குங்கள்!
மல்லிகை மணம் வீசும் காற்றில்,
மரகத பச்சை வீட்டில்,
மானுடம் செழிக்கும்!
இனிய காலை வணக்கம்!
28
பன்னீர் பூக்கள் வழி எங்கும்
நிறைய,
பாதம் வைத்து மெல்ல நடந்து,
பால் கறந்து,
மணம் முகர்ந்து,
சுட சுட
தேநீர் வைத்து,
நாவில் சுவைத்து நாழிகையில்
செல்வோம் சொர்க்கத்திற்கு!
இனிய காலை வணக்கம்!
29
கடல் அலைகளின் மேல்
கதிரவன் பிறந்து,
காட்சி தருவார் காலை பொழுதில்,
கண்ணெல்லாம் பரவசம்!
இறைவன் இவர் வசம்!
இயற்கை எனும் பெயரில்!
இனிய காலை வணக்கம்!
30
மலை மீது ஏறி,
உச்சி அடைந்து,
காற்றை நுகர்ந்து,
காலை தென்றலில்
தேகம் குளிர்ந்து,
பூலோகத்தின் சொர்க்கம்
என்று உணர்ந்து,
பூரிர்த்து வாழ்வோம்!
இயற்கை வளங்களுடன்!
வாழ்க வளமுடன்!
இனிய காலை வணக்கம்!
காலை வணக்கம் கவிதைகள் |
Good Morning Kavithai
31
பல்லுயிர் வாழும் பூமிப்பந்தில்,
நல்லுயிராகவே வாழ்ந்து விட்டு செல்வோம்!
இந்நாளையும் வாழ்த்தி விட்டு
செல்வோம்!
இனிய காலை வணக்கம்!
32
இதயம் துடித்து கொண்டே,
இனிய காலையில் துவங்குகிறது!
இன்னும் இருக்கிறது உயிர்!
உலகை ரசிக்க,
உலகை நேசிக்க,
உலகை காக்க!!
இனிய காலை வணக்கம்!..
33
உலகில் எத்தனை லோகம் என்றாலும்,
நாம் வாழ்வது எனுமோ
பூலோகத்தில் தான்!
காப்பது நம் கடமை!
வாழ்வது நம் உரிமை!
சுற்றுசூழல் காப்போம்
அழிவில் இருந்து மீட்போம்!
இயற்க்கையை!
இனிய காலை வணக்கம் உறவுகளே!
வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!
வாழிய வாழியவே!
நல்ல எண்ணமே ஜெயம்!
நலம் அன்புடன்
ஆர்.கே.ராகுல்
Moon Quotes in Tamil |நிலா கவிதைகள்














