அண்ணன் தங்கை கவிதை | Brother Sister Kavithai In Tamil

1

ஒரு அண்ணன் தங்கை உறவு
ஆண் பெண் உறவில்,
ஒரு புனிதம்!,
தன் தங்கையை இன்னொரு
அம்மா வடிவில் பார்க்கிறான்
அன்புள்ள அண்ணன்!
ஒரே தாயின் வயிற்றில் பிறந்த
இரண்டு உடல்கள்,
ஒரே உயிராக கலக்கிறது
அண்ணன் தங்கை உறவில்!!
தன் வீட்டில் வளரும்
குட்டி தேவதையாகவே
தங்கையை பார்க்கிறான்
அண்ணன்!
ஒவ்வொரு தங்கைக்கும் தன்னுடைய
முதல் தோழன்
தன் அண்ணன் மட்டுமே!
ஆயிரம் முறை சண்டை இட்டாலும்
அடுத்த நொடி பேசும் உறவு,
அண்ணன் தங்கை உறவு!!
வீட்டில் மகாராணி தங்கை,
தங்கையின் செல்ல கட்டளையை
ஏற்க அண்ணன் என்றுமே
தயங்குவதில்லை!!
தங்கை இல்லாத வீடு
தரித்திரம் போலாகிறது!
செல்லமாகவே வளர்கிறாள்
ஒவ்வொரு வீட்டிலும்
அண்ணனின் அன்புடன்
தங்கை!
தன் அண்ணனை யாருக்காகவும்
விட்டு கொடுப்பதே இல்லை
தங்கை!
அண்ணன் தங்கை
உறவில் போட்டி அதிகம் இருந்தாலும்
பொறாமை இருந்ததே இல்லை!
அண்ணன் தங்கை கவிதை | Brother Sister Kavithai In Tamil
வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டே
இருக்கிறது, தங்கையின் குரல்
அண்ணா அண்ணா என்று!
சிரித்துக்கொண்டே ஓடி வருகிறான்
அண்ணன்,தங்கையுடன் சேர்ந்து சாப்பிட!!
இருவருக்கும் ஆகாரத்துடன்
அன்பையும் சேர்த்து பரிமாறுகிறாள்
அன்னை!!
விபரம் தெரியாத வரை அண்ணனாகவும்,பிறகு
தான் வளர்ந்து கடமை உணர்ந்து,
தங்கைக்கு தகப்பன் ஆகிறான்
அண்ணன்!
என் தாய் வயிற்றில்
மலர்ந்த பாச மலரே!
கொஞ்சு விளையாடும்
மழலை கிளியே!
வெள்ளை மனம்
கொண்ட முல்லை கொடியே!
முத்து முத்தாக சிரிக்கும்
முழு நிலவே!
செல்லமாக சண்டையிடும்
சிங்கார கண்ணே!
அண்ணன் இருக்கிறேன்
உனக்கு ஆயுசுக்கும்!!
நீ தங்கையாக பிறந்து,
எனக்கு
அண்ணன் என்ற.
அங்கீகாரத்தை கொடுத்த
உடன் பிறந்த உறவே,
வாழ்க வளமுடன்!
என் வீட்டு தோட்டம் எல்லாம்
என் தங்கை பெயர் சொல்கிறது,
தண்ணீர் விட்ட தங்க மலரே,
வாழ்க வாழியவே!
என்று வாழ்த்துகிறது!
பெரிதாய் ஒன்றும் இல்லை,
அவள் ஆசை!
பூ செடியும்,
புது புடவையும்,
கனிகளும்,
கம்மல்களும்!
வீடும், விளக்கும்!
அவ்வளவு தான்!!
அண்ணன் தங்கை கவிதை | Brother Sister Kavithai In Tamil
அண்ணன்கள் அதிகம் வாழும் வீட்டில்
தங்கத்தை விட
தங்கைக்கே மதிப்பு மிகுதி!
பேரன்பு ஒன்றே அங்கே தகுதி!!
அண்ணன் தங்கை பாசத்தில்
உறவுகள் மட்டும் பேசுவதில்லை,
உணர்வுகளும் பேசுகின்றன!
பசிக்கும் முன்னே ருசியாக சமைத்து
அண்ணனுக்கு அன்னம்
இடுவாள், இன்னொரு அன்னையாக
தங்கை!!
அடம் பிடித்து வாங்கிகொண்ட
பிஸ்கட்டை ஐந்து நிமிடத்தில்
திருப்பி தருவாள்,
அண்ணனுக்கே,
தங்கை!
தங்கை அளித்த தாய்மாமன்
பட்டமே, இன்றும் பெரிதாக
போற்றப்படுகிறது!
பக்தியில்,
பண்பில்,
பாசத்தில்
தங்கைக்கே முதல் இடம்!
இதயத்தில் அவளுக்கே முழு இடம்!
வாழ்க்கை எனும் நெடுந்தூர பயணத்தில், உதிரம் வழி உறவு ஒன்று தொடர்கிறது, தங்கை எனும் பெயரில்!
உயிரில் கலந்த உறவில்!
ஒன்றாய் பிறந்தோம்,
திருமண சடங்கால்
பிரிந்தோம்,
வாழ்நாளின் இறுதி வரை
ஒற்றுமையாக இருந்தோம்,
அண்ணன் தங்கை உறவாக!
தங்கைக்கு தன் வழித்துணை வரும் வரை அல்ல,
ஆயுள் முழுதும் அண்ணனே துணை!
தாயை இழந்த மகனுக்கு
தங்கையே ஆறுதல்,
தாலாட்டும் நினைவுகளுடன்!
அண்ணன் தங்கை கவிதை | Brother Sister Kavithai In Tamil

ஒவ்வொரு தீபாவளி பொங்கலுக்கும்
வாசலிலே நிற்கிறாள்,
ஓடி ஓடி வந்து பார்க்கிறாள்!
வரிசை வந்து வைக்கும்,
அன்புள்ள அண்ணனை காண!
உறவுகள் இருந்தும்
அனாதை ஆன தங்கை!
தங்கையை இன்னொருவர்
தாலி கட்டி மணம் முடிக்கும் வரை,
வேலியாக இருந்து பாதுகாப்பவன்
அண்னன்!..
அண்ணனை பிரிந்த தங்கச்சிக்கு மட்டுமே புரியும்!
கொண்டாட்டங்கள் நிறைவு
பெற்றுவிட்டன என்று!
தொப்புள் கொடி உறவு,
தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது,
தொலை தூர வாழ்வில் கூட நீங்காத நினைவில்!
உடன் பிறந்து,
உடன் வளர்ந்து,
உடன் நின்று திருமணம் செய்து,
வைத்தவுடன்,
ஒரு அண்ணனின் கடமை
முடிவதில்லை,
தன் தங்கையுடன் கடைசி வரை
அனைத்து நல்லது, கெட்டது
எல்லாவற்றிலும் கலந்து,
காலம் முழுதும்
தங்கை குடும்பத்திற்கே
கடவுளாகவே வாழ்பவன் அண்ணன்!
அங்கே தான் ஒரு உறவு
நிலைக்கிறது!
நிஜமாகவே நிம்மதியில்
கலக்கிறது!
அண்ணன் தங்கை கவிதை | Brother Sister Kavithai In Tamil
ஒரு அண்ணன் தன் தங்கையிடம் இருந்தே கற்றுக்கொள்கிறான்,
ஒரு பெண்ணிடம் நடந்து கொள்ளும் முறையை!
மரியாதையை!
இடைவெளியை!
உணர்வுகளை!!
தங்கையுடன் பிறந்த ஆண் சமுதாயத்திலும் பெண்களுக்கு
இடையூறாக இருப்பதே இல்லை!
அதிகாரம் செய்பவன் அண்ணன் அல்ல!,
அன்பாக, ஆதரவாக இருந்து
தங்கை தவறே செய்தாலும்,
உடனே தண்டிக்காமல்,கண்டித்து!
அவளின் உணர்வுகளுக்கு
மதிப்பளித்து,
நடைமுறை உண்மையை எடுத்து கூறி உடன் நிற்பவனே உடன் பிறப்பு!
பணத்தேவைகளை பூர்த்தி செய்வதை மட்டும் செய்யாமல்,
தங்கையின் உடன் இருந்து
அவளின் மனத்தேவைகளை
அறிந்து ஆறுதல் அளிப்பவன்
அண்ணன்!
மணமக்கள் கூடி,
மாலை சூடி,
மணம் முடிந்து,
மறு வீட்டிற்கு திரும்பும் வலி!
தன் பிரசவ வலியை விட கொடியது!
என்று உணர்ந்தாள் தங்கை!
யாரிடமும் விட்டே கொடுக்காத
தங்கையை கணவனிடம்
விட்டு கொடுக்கிறான்
அண்ணன்!
மனம் எனும் இதய சிறையில்
மரண தண்டனை ஏற்ற
நிலையில்..
“அழுகை கூட புனிதம் தானோ
அந்நேரத்தில்!”
ஒரே வீட்டில் வளரும்
இரண்டு பிள்ளைகள்
பிரிகிறது தங்கையின் திருமண
சடங்கில்,
அழுகின்ற அண்ணன் வடிவில்!
பிரிவே கண்டிராத
தங்கை கண்ணீர் வடிக்கிறாள்
அண்ணனை நினைத்து!
அதுவரை கண்டதில்லை
அவள் அண்ணனின் அழுகையை!
சில பிரிவுகளில் தான்
சில உறவுகள் தொடங்குகின்றன!
அண்ணன் ஆயுள் முடிந்ததால்
இறந்து விட்டார் என எல்லோரும் சொல்லும் வேளையில்,
அண்ணன் இறக்கவில்லை!
அண்ணனின் உயிர் என்னுள் வாழ்கிறது!
இறந்தது தங்கை உயிர் தான்!
“உடல் மட்டும் தான்” அண்ணன்
என்று உரக்க கூறி உதிர்த்து விட்டால் கண்ணீர் தன் உதிரத்தின் அளவையும் தாண்டி!
“நீங்காத துயரத்தில் தாங்காத பாரத்தில்”
தங்கையே!
நீ வாழ்க வாழியவே!
என் உயிர் இருக்கும் வரை
உன்னுடன் இருப்பேன் நான்!
அண்ணானாக!
அப்பாவாக!
அனைத்துமாக!
நல்ல எண்ணமே ஜெயம்!
நலம் அன்புடன்
ஆர்.கே.ராகுல்














